Wednesday, June 22, 2016

1987ல் இந்திய உதவி....





1987களில் ஈழ‌ போராளிகள் மூலம் ஜெயவர்த்தேனே அரசு வழிக்கு வரவில்லை என்றால் படையெடுக்க இந்தியா தயாராக இருந்தது, அதற்கான திட்டங்கள் தயாராக வகுக்கபட்ட இடம் இந்தியாவின் கோவா.

அந்த தாக்குதல் திட்டத்தை வகுத்த தளபதியும் தமிழரே

வடமராட்சியில் புலிகள் அழியும் நிலையில் இந்தியா உணவுபொருள் வீசியதும் அடுத்த கட்டத்தை உணர்ந்த சிங்கள அரசு ராணுவநடவடிக்கையினை நிறுத்திவிட்டு அமைதியானது.


ஆனால் புலிகள் நிலை எப்படி இருந்தது? அந்த இந்திய உதவிபொருளை, மருந்தும் உணவும் நிரம்பிய அந்த பொதிகளை மக்களை தொட கூட விடவில்லை, எல்லாவற்றையும் கைபற்றிய புலிகள், நாங்கள் விநியோகிப்போம் என சொல்லி அமைதியானார்கள்.

காரணம் மக்களிடம் இந்திய பொருள் கிடைத்தால், மக்கள் இந்தியாவினை நேசிக்க தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சம் புலிகளுக்கு இருந்தது, காரணம் அன்று தங்கள் உயிரை இந்தியா காத்தது எனும் பெரும் ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் ஈழ மக்கள் இருந்தார்ள்கள்

இந்தியா சில பொருட்களை வீசியது உண்மைதான், ஆனால் அவை எங்கோ விழுந்தன என பூசிமெழுகி அமைதியானர் புலிகள், மனமெல்லாம் ஒருவகை வன்மம்.

தங்களால் காக்கமுடியாத மக்களை, இந்தியா எப்படி காப்பாற்றலாம் எனும் ஆத்திரமும், இனி தங்களை மக்கள் மறந்துவிடுவார்கள் எனும் பயம் தவிர வேறு இருக்கமுடியாது

அதன் பின் நடந்த சம்பவங்களும், இறுதியாக நடந்த முள்ளிவாய்க்காலும் காலத்தின் சோகங்கள்.

1987களில் இருந்த தமிழக ஈழமக்கள் ஆதரவு 2009ல் அறவே இல்லாமல் போனதன் காரணம் ஒன்றும் மர்மம் அல்ல.

இன்று அதே கோவாவிலிருந்து இந்தியா சிங்களனுக்கு போர்கப்பலை நட்புக்காக கொடுக்கின்றது, 1987ல் இலங்கையினை தாக்க யுத்த கப்பல் கிளம்பி இருக்கவேண்டிய கோவாவிலிருந்து இன்று நட்புகப்பல் கிளம்புகின்றது.

இதெல்லாம் ஏன்? எப்படி? எதற்காக என்றெல்லாம் ஆழ்ந்து சிந்திப்பீர்களானால் நீங்களும் நானும் துரோகி, வந்தேறி

ஏன் என் தாயும் தகப்பனும் கூட தமிழர்களாக இருக்கமுடியாது என்ற அளவிற்கு வந்து ஆபாசமாக அள்ளி எறிவார்கள்.







No comments:

Post a Comment