Monday, June 13, 2016

திரை கலைஞர்களுக்கும் சமூக பொறுப்பு உண்டு...




அன்று சீனப்போரின் போதும், பாகிஸ்தான் போரின் போதும் தமிழக நடிக நடிகையர் அள்ளிகொடுத்த நிதி கணக்கில் அடங்காது, இயக்குநர்களும், கலைஞர்களும் ஏகபட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினர்.

சாவித்திரி மட்டும் 80 சவரன் நகைகளை போர் நிதிக்காக கொடுத்தாக குறிப்புகள் சொல்கின்றன. தமிழ் சினிமாக்காரர்கள் என்றாலும் நாட்டுபற்று அவர்களிடம் அப்படி இருந்திருக்கின்றது.

Stanley Rajan's photo.

இன்று பாருங்கள்? அந்நிய நாட்டு தீவிரவாதிகளை விடுதலை செய்யகோரி இந்த நாட்டுபற்றில்லா கோடம்பாக்க இயக்குநர்களும், நடிகர்களும் பகிரங்கமாக கோரிக்கை விடுகின்றனர், ஊர்வலம் செல்கின்றனர் வெட்கமாக இல்லை? கொஞ்சமேனும் சிந்திப்பதில்லை.


நடிப்பதை சினிமாவோடு நிறுத்திகொள்ளுங்கள், இல்லையேல் நாட்டுபற்று மிக்க இளைஞர்களால் புறக்கணிக்கபடுவீர்களாயின் தமிழக திரைதுறையே இருக்காது.

இப்படி எல்லாம் தீவிரவாதிகளை ஆதரித்துவிட்டு சினிமாவில் நாட்டுபற்று, தீவிரவாதமெல்லாம் குறித்து படமெடுக்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?

காஷ்மீர் தீவிரவாதி என்றால் சாடுவீர்கள்? ஈழ தீவிரவாதி என்றால் கொஞ்சுவீர்களா? திரை கலைஞர்களுக்கும் சமூக பொறுப்பு உண்டு. தேச கடமை உண்டு.





No comments:

Post a Comment