Wednesday, June 29, 2016

கொலை கலாச்சாரம் - என்னதான் நடக்குகுது?

இந்த கொலை கலாச்சாரத்திற்கு அது காரணம், இது காரணம் என ஆயிரம் சொன்னாலும், கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் விளங்கும், அது கொலையாளிகள் பெரும்பாலும் இளம் வயதினர், அதுவும் பதின்ம வயதினர்.

ஓசூரில் கைது செய்த காவலரையே கொல்லும் அளவிற்கு நிலமை மோசமாக சென்றிருக்கின்றது, எப்படி இவ்வளவு வன்மம், இவ்வளவு வன்முறை?, அவர்கள் மனம் இப்படி வன்முறையினை கொண்டாடும் அளவு மாறிபோனதேன் என சிந்தித்தால் அதற்கு காரணம் இந்த சமூக அவலங்கள், அவர்கள் காணும் காட்சிகளுமே அன்றி வேறல்ல.

FB_IMG_1467187004102

FB_IMG_1467187010413

சமூக அவலங்கள் என்றால் ஒன்றுமில்லை, சுயநலனுக்காக‌ கொலைகள் செய்துவிட்டு சாதி போர்வையில் ஒளிந்துகொண்டு மாவீரகள் என சமூகத்தால் கொண்டாடபடும் சமூக விரோதிகளை பார்த்து வளரும் தலைமுறை இது, இதனை முதலிலே கிள்ளி இருக்கவேண்டும், ஆனால் வளரவிட்டது நிச்சயம் அரசியல்வாதிகள்

சரி அப்படித்தான் விட்டார்கள் என்றால், வருடத்திற்கொருமுறை அவனுக்கொரு நினைவாஞ்சலி என்ற கொடுமைக்கு அனுமதி வேறு, இல்லை என்றால் வாக்கு வங்கி பாதிக்கும் எனும் பயம். விடலைகளின் மனம் இங்குதான் பாதிக்கபடுகின்றது, கொலை தவறே அல்ல.

சாதிக்கு 4 ரவுடி இருக்கின்றான், அவன் செய்த கொலைகள் எல்லாம் அந்நாளில் பெரும் சாவகாசமாக பேசபடும், கவனிக்கும் குழந்தைகள் எப்படி வளரும்? அவனை தன் ஆதர்ச நாயகனாகவே கொண்டாடும்.

இன்னொரு விஷயம் சினிமாவும் ஊடகங்களும்

அந்நாளில் சினிமாவில் கதாநாயாகன் சாகசங்கள் செய்வான், ஆனால் கொலை செய்யமாட்டான், நம்பியார், எம் ஆர் ராதா, அசோகன், மனோகர் போன்ற வில்லன்கள் கடைசியில் கைது செய்யபட்டு காவல் நிலையத்தில்தான்
ஒப்ப்படைக்கபடுவார்களே தவிர கொல்லபட மாட்டார்கள்,

அதுவும் தாங்கள் திருந்திவிட்டதாவே சொல்லும்பொழுதுதான் படம் முடியும். ரத்தம் தெறிக்கும் படங்களில் எம்ஜிஆர் நடித்ததே இல்லை, அவரின் வெற்றிக்கு அதுதான் காரணம்.

இன்றோ அப்படி அல்ல, ஆரம்பத்தில் தெறிக்கும் ரத்தம் இறுதி வரை தெறிக்கின்றது, இதனை பார்த்து வளரும் குழந்தைகளின் கை தானாக அரிவாளினை தேடுகின்றன, அதிலும் சில படங்கள் மனபிறழ்வின் உச்சம்.

சில தமிழர்வாழ் வெளி நாடுகளில் குற்ற செயல்கள் அதிகரித்தபொழுது தமிழ்சினிமா ஒரு விவாதபொருளாயிற்று, பதின்மவயது குற்றவாளிகளை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் சொன்னார்கள்

"தமிழ் படங்களால் நம் நாட்டில் வன்முறை அதிகரிக்கின்றது, அவற்றை தடை செய்யும் எண்ணத்தில் இருக்கின்றோம்", எப்படி பட்ட அங்கீகாரம் இது? வெட்கத்தால் தமிழர் நாணி குனிய வேண்டிய நேரமிது.

முதற்கட்டமாக வன்முறை காட்சிகளை தடை செய்துகொண்டிருக்கின்றார்கள், பாடல்களில் கூட போதை யான " கஞ்சா, பிராண்டி" போன்ற வார்த்தைகள் ஒலிக்காது, அவ்வளவு கவனம்.

காரணம் சிறுவயதினரின் மனதினை அது பாதித்தால் அது ஒரு தலைமுறையினை பாதிக்குமாம், முந்தி கொள்கின்றார்கள். குஞ்சுகளை கோழி அரவணைப்பது போல சிறகுகளுக்குள் வைத்து பாதுகாக்கின்றார்கள்.

இது போன்ற சில சட்டங்கள் நமது நாட்டிலும் உண்டு, சென்சார் போன்றவை அவை, ஆனாலும் சிலபடங்களை அடல்ஸ் ஒன்லி என வெளியிட அனுமதிக்கின்றன, பின் அப்படங்கள் குடும்பமாய் பார்க்கபடுகின்றன.

குழந்தைகள் தானாக எதனையும் சிந்திப்பதில்லை, மாறாக பார்த்து, கேட்டு மனதில் பதியடும் விஷயங்களே விஸ்வரூபமெடுக்கின்றன‌.

அரசியல் கட்சிகள் உரமிட்டு வளர்க்கும் சாதிய தியாகிகளின் பிம்பமும், சினிமாவில் காட்டபடும் அதி தீவிர வன்முறைகளும் முதல் காரணம்.

தற்போதைய இன்னொரு அபாயம், வீரப்பன் போன்ற கொடூர கொள்ளையர்களை ஹீரோ போல கொண்டாட அனுமதிக்கட்டது, நிச்சயம் விட்டிருக்ககூடாது, அவனால் கொல்லபட்ட 120 போலிசார் பற்றிய நினைப்பு மறக்க கூடியதா?

அவனுக்கு மணிமண்டபம் கட்டுவோம் என சிலர் சொன்னால் விட்டுவிடுவதா? அரசு தூக்கி போட்டு மிதித்திருந்தால் யார் தடுப்பார்கள்? இவ்வளவிற்கும் வீரப்பன் அரசால் சுட்டுகொல்லபட்டவன்.

கொன்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய அரசுதான், அவன் மணிமண்டப கொடுமையினையும் கண்டும் காணாமல் உள்ளதா? எல்லாம் அரசியல், வாக்கு வங்கி.

உள்நாட்டு கொள்ளையர்களே ஆபத்து என்றால், அந்நிய நாட்டு தீவிரவாதிகளை இன அடிப்படையில் ஆதரிப்பது மகா ஆபத்தானது, இந்த தொப்பி வைத்த அங்கிள் யார் என குழந்தை கேட்டால், அவரின் வீர தீர கொலைகளை எல்லம் போராட்டம் என சொல்லிகொடுத்தால் குழந்தை என்ன சிந்திக்கும்? அது எப்படி வளரும்? அனுதினமும் அவன் படத்தினை காணும்பொழுதெல்லாம் அதனை அறியாமல் ஒரு மனபாதிப்பு வருமல்லவா?

அக்கால பள்ளிகளில் சுவரில் தேசாபிமானிகள் படம் வைக்கபட்டதெல்லாம் எதற்காக? குழந்தைகள் நாளை இந்த தலைவர்களை போல வரவேண்டும் என்பதற்காக, அக்குழந்தைகள் மத்தியில் தறுதலைகளை ஹீரோக்களாக காட்டினால் என்ன ஆகும்?

அதுவும் அந்நிய நாட்டிலிருந்து வந்து இங்கு பல கொலைகளையும், ஒரு பிரதமரையும் கொன்ற கும்பலை வெளியில் விடு என பகிரங்கமாக போராட்டமே நடந்தால், சாதாரண குடிமகனின் சிந்தனை என்ன ஆகும்? இதனை காணும் பள்ளிமாணவர் எப்படி சிந்திப்பர்

பிரதமரை கொன்றாலே வெளிவந்துவிடகூடிய நாட்டில், பிரின்சிபல் எல்லாம் மேட்டரா? போட்டு தள்ளு, கல்வியினை சிறையில் படித்துகொள்ளலாம், பேரரிவாளன் வாங்காத பட்ட்மா? என்றால் என்ன் ஆகும்?

சிறைச்சாலை எல்லாம் பல்கலை கழகங்களாக மாறிகொண்டிருக்கும், நாடு விளங்குமா?

கங்கை பிரவாகமாக உருவெடுத்தோடும் டாஸ்மாக் போதையில் அவர்கள் விழுவது இன்னமும் கேடு, அந்த இளம் இந்தியர்களை கவுண்சிலிங்கொடுத்து நல்ல குடிமக்களாக மாற்றவேண்டிய அரசே சாராயகடை நடத்தினால் கொடுமையினை என்ன சொல்ல?

இப்படி சிந்தித்து அவசரமாக களையவேண்டிய விஷயம் ஏராளம் உண்டு.

சாதி ரவுடிகள், சினிமா பிம்பம், கொடூர தீவிரவாதிகள் எல்லாம் பெரும் ஹீரோக்களாக சித்தரிக்கபடும் முறை ஒழிக்கபடவேண்டும், அவற்றை தடை செய்து தூர எறியவேண்டும்.

தண்டனைகள் இன்னும் கூட்டபடவேண்டும், கடும் தண்டனைகளே குற்றங்களை குறைக்கும், கட்டுபடுத்தும்.

கல்விமுறை முற்றிலும் மனித இயந்திரங்களை உருவாக்கும் முறையாக மாறிவிட்டது, மதிப்பெண் வேலைவாய்ப்பு என்ற நோக்கத்திற்காகவே நடத்தபடும் அவைகள் மனித இயந்திரத்தினைத்தான் உருவாக்கும்

பக்தியும், சமூக உணர்வும், நாட்டுபற்றும் கொண்ட கல்விமுறை போதிக்கபட்டாலொழிய நல்ல தலைமுறையினை உருவாக்க முடியாது.

வெளிநாட்டு குழந்தைகள் சமூக பொறுப்புடன் வளர்க்கபடுகின்றன, அவர்களின் கடமை அவர்களுக்கு புரியவைக்கபடுகின்றது, அதனால்தான் வீடுதோறும் துப்பாக்கிகள் இருந்தாலும் அவர்கள் தினமும் யாரையாவது சுட்டுகொல்வதில்லை

இதே இந்திய நிலை என்றால் என்ன ஆகியிருக்கும்? காதல் கடிதம் வாங்கவில்லை என்பதற்காக எத்தனை பெண்களை மறைந்திருந்த்து சுட்டிருப்பார்கள்???

இன்னொரு மகா முக்கியமான விஷயம் மாறிவிட்ட வாழ்க்கை சூழல், பதின்மவயதினரை கடுமையாக பாதிக்கின்றது, குழம்புகின்றார்கள். நுகர்வு கலாச்சாரம் கடும் அழுத்தத்தை கொடுக்கின்றது

"உங்க எல்லோர்கிட்டேயும் இருக்குல்ல, என்கிட்ட மட்டும் இல்லல்ல" என்ற விஷம் போன் முதல் கேள்பிரண்ட் வரை அவர்களை பாதிக்கின்றது.

நாறிபோன ஊடகங்களும், பிம்பங்களும் காதலித்தே தீரவேண்டும் என்ற வெறியினையே ஊட்டுகின்றன, அந்த வயதில் அவர்கள் குழம்பி தவிக்கின்றார்கள்.

நிச்சயமாக இம்மாதிரி குழப்பங்களிலிருந்து தப்பிக்க அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் மனநல கவுன்சிலர் நியமிக்கபடவேண்டும், அவர்கள் மன அழுத்தம் போக்கபடவேண்டும், அழுத்தம் நீங்கிய மனம் சிந்திக்க தொடங்கும்.

அடுத்த தலைமுறையினை காப்பாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது, கோடிகணக்கான சொத்துக்களை அவர்களுக்கு சேர்த்துவைத்துவிட்டு மனிதன் வாழமுடியா வருங்கால சமூகத்தில் அவர்களை விட்டு செல்வதை விட பைத்தியக்காரதனம் என்ன இருக்க முடியும்?

அந்த சொத்துக்களால் பலன் என்ன? அல்லது அந்த மனிதநேயமில்லா கல்வியால் விளையபோவதுதான் என்ன?

ஒவ்வொரு நாடும் குழந்தைகளை தேசிய சொத்துக்களாகவே கருதுகின்றன, அவை என்ன படிக்கின்றார்கள், பார்க்கின்றார்கள் என கண்காணிக்கின்றன, மக்களும் விழிப்புணர்வுள்ளவாகவே இருக்கின்றனர்.

அதனால் குறிப்பிட்ட காலத்தில் நல்ல தலைவர்கள் வந்து நாட்டை வழிநடத்துகின்றனர், ஜெர்மனி, ஜப்பான், சைனா மகா முக்கியமாக இஸ்ரேல் என அவை தூள் பறத்துகின்றன.

நமக்கும் அன்றொரு காலம் இருந்தது, காந்தியினை கண்டு காமாரஜர் உருவானார், பன்னீர் செல்வத்தின் பாதிப்பு அண்ணாவிடம் இருந்தது, சுபாஷ் சந்திர போஸின் நாட்டுபற்று பசும்பொன் தேவரிடம் இருந்தது, இந்திரா காந்தியின கனவினை நிறைவேற்றி காட்டினார் அப்துல் கலாம்.

நல்ல வழிகாட்டிகளை காட்டினோம் நல்ல தலைவர்கள் வந்தார்கள்.

இன்று சாதி வெறி கொலையாளிகளையும், வீரப்பனையும், பிரபாகரனையும் தூக்கி பிடித்து காட்டினால் யார் வருவார்கள்?

நிச்சயம் சீமான் போன்ற கோயேபெல்ஸ்தான் வருவார்கள், அட இவர்களையும் பேசவிட்டால் இன்னொருவன் வருவான் அல்லவா? அவன் எவ்வளவு ஆபத்தானவன்?

கர்ணல் நாசரை கண்டு வளர்ந்தவன் சதாம் உசேன், வரலாற்றில் நின்றான். ஆனால் பின்லேடனை கண்டு வளர்ந்த பத்தாதி சிரியாவினை சுடுகாடாக்கி கொண்டிருக்கின்றான்.

சீனாவில் மாவோ, டெங் படிக்காமல் ஒரு மாணவன் வெளிவரமுடியாது, போரின் காயங்கள் மனதால் பாதித்துவிடும் என்பதற்காக ஜெர்மனி, ஜப்பானிய பாட திட்டங்கள் புதிய உலகை படைப்பதாக இருக்கின்றன.

அரசின் ரவுடிகள் மீதான கட்டுப்பாடும், கொஞ்சம் இறுக்கமான சட்டதிட்டங்களும், பொது ஊடகங்களின் மீதான கண்காணிப்பும், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டிகளை காட்டும் விஷயங்களிலும் அக்கறை இருக்கவேண்டும்.

இவை எல்லாம் நடக்கும் பட்சத்தில் ஸ்வேதாவின் சாவு ஒரு பெரும் மாற்றத்திற்கான முதல் பலியாக அமையும்.

காவல்துறை குற்றவாளியினை தேடிகொண்டிருக்கின்றது, உண்மை இன்னும் விளங்கவில்லை, அதுவரை அமைதி காப்பதே சால சிறந்தது

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் செய்திகளை அள்ளி எறிகின்றார்கள், நொந்து கிடக்கும் பெற்றோரின் மனம் என்ன பாடு படும் என்பதினை கூட சிந்திப்பதில்லை

யாரோ ஒருத்தி என்பதால் தானே இஷ்டத்திற்கு எழுத முடிகிறது, சகோதரிகளில் ஒருத்தி என்றால் எழுத மனம் வருமா?

இந்த பெரும் நாட்டையும் அப்படி சொந்த குடும்பமாக கருதி பாருங்கள், மாற்றம் நம்மிடமிருந்தே வரும்.

(120 தமிழக போலிசாரை கொன்ற வீரப்பனும், ராஜிவோடு 5 போலிசாரை கொன்ற புலிதலைவர் பிரபாகரனும் ஹீரோவாக்க பட்ட தமிழகத்தில், சமீபத்தில் சமூகவிரோதிகளால் கொல்லபட்ட் காவலர் படம் )

No comments:

Post a Comment