Tuesday, June 14, 2016

கபாலிடா .....




கபாலி படம் அப்படி, பாடல் இப்படி என்கின்றார்கள், சிலர் அது மலேசிய ரப்பர்தோட்ட தமிழர் கதை என்கின்றார்கள், மலேசிய ரப்பர் தோட்டங்கள் ஏராளமான சரித்திரங்களை தாங்கி நிற்பவை, அதில் இந்திய சுதந்திர கால வடுக்களும் உண்டு. ரப்பர் தோட்டத்தில் பிறந்து படித்து ஆளான, முத்திரை பதித்த தமிழர் பல உண்டு.

சிலர் ரப்பர் தோட்டத்து அடிதட்டு மக்கள் பிரச்சினைதான் கதை என்கின்றார்கள், படம் வந்தால் தெரிந்துவிடபோகின்றது, ஆனால் பாடல்களின் வரிகள் சில விஷயங்களை மறைமுகமாக சொல்கின்றன.

Stanley Rajan's photo.

மலேசியாவினை விடுங்கள், இதனை போலவே தமிழகத்து அடித்தட்டு மக்கள் குவியலாக குவிக்கபட்ட இடம் இலங்கையின் மத்திய மலையக தேயிலை தோட்டம். அம்மக்கள் பட்ட பாடுகளும், அவர்கள் சந்தித்த இழிநிலையும் சொல்லிமாளாது, சுதந்திர இலங்கையில் அவர்கள் நாடற்றவர்கள் என பகிரங்கமாக முத்திரை குத்தபட்டனர்.


நாடற்றவர்கள் எனும் சொல், கிட்டதட்ட அம்மணமாக்குவதற்கு சமம். இந்தியா அவர்களை அரவணைத்து கொண்டது

ஆனால் அதனை எல்லாம் அன்று எந்த ஈழதொப்புள் கொடி, கொண்டை முடி எல்லாம் கண்டிக்கவே இல்லை, புலிகள் கூட அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தனர்.

அம்மக்களின் பிரச்சினையினை உள்ளடக்கி எழுதபட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமும் கிழித்தெறியபட்டது, காரணம் அதில் அவர்களுக்கும் உரிமை இருந்தது. பத்மநாபா போல ஈழபோராளிகள் அதனை ஆதரிக்க காரணமும் அதுதான், உயிரை விட்டதும் அப்படித்தான்.

இன்று தமிழகத்தில் ஒரு ஆதரவு குரல் கேட்கவேண்டுமானால் நிச்சயம் அந்த அபலைகளுக்காகத்தான் இருக்கவேண்டும், ஆனால் நடந்தது வேறு, எந்த ஈழதமிழன் தமிழக பிழைக்க வந்த தமிழரை ஒதுக்கி வைத்தானோ, அவர்களுக்காக இங்குள்ள தமிழன் பொங்கிகொண்டிருக்கின்றான்,

எவ்வளவு விசித்திரம் இது? யார் சொந்தமக்கள் என்பது கூட தெரியாத செம்மறி தமிழன் இவர்கள்.

அம்மக்களின் கதை மகா கொடூரமானது, ஆனால் யாரும் திரைபடமாக எடுப்பார்கள் என நினைக்கவேண்டாம்

காரணம் எல்லாம் பணம், அது மலேசிய தமிழனிடம் இருக்கலாம், ஈழ தமிழனிடம் இருக்கலாம், அவன் படம் எடுக்கலாம், ரஜினி நடிக்கலாம், பாட்டெழுதலாம், பரபரப்பாக்கலாம்.

ஆனால் பாவம் மலையக தமிழனிடம் என்ன இருக்கின்றது?

கபாலி பாடல்களை கொண்டாடுங்கள், விமர்சியுங்கள், ஆனால் என் காதில் ஒலித்துகொண்டிருப்பது என்ன தெரியுமா? 1940களில் இலங்கை மலையக தமிழர் மீது ஏவபட்ட வன்முறைகளை கண்டு அக்கால தமிழன் எழுதிய வரி

"தேயிலை கொழுந்தை
கிள்ள சென்ற‌
எம் குல கொழுந்தை
கிள்ளும் லங்காபுரியே

வன்கொடுமை காணிணும்
வடக்கத்தியான் என பரிகசிக்கும் யாழ்பாணமே
இதயமென்று ஒன்று
உமக்கும் உளதோ

மலையகத்தார் உங்களுக்கு
மத்தளமோ?

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
அபலைகள் காலம் ஒரு நாள் மாறும்"

ஆனால் அம்மலையக மக்கள் வாழ்வு மட்டும் இன்னும் மாறவே இல்லை. இதை எல்லாம் பற்றி பேசினால் நான் துரோகி, தமிழணர்வு இல்லாத இந்தியன் வந்தேறி.













No comments:

Post a Comment