Sunday, June 12, 2016

கலைஞர் பிரபாகரனின் தாயாரை ஏன் அனுமதிக்கவில்லை?

இதோ ஒருவர் வந்தார், கலைஞர் பிரபாகரனின் தாயாரை ஏன் அனுமதிக்கவில்லை, அவர் துரோகி அவர் தமிழன் எதிரி ஒப்புகொள், பார்வதி அம்மா பிரபாகரனி தாய் மட்டும் அல்ல, தமிழரின் தாய், ஏய் திராவிட மோசக்கார.............என பொங்கி கதறினார்

பிரபாகரனின் தாய் தமிழர்களின் தாயா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியது நான் அல்ல, ஆனால் பிரபாகரனின் உடன் பிறந்த அக்கா விநோதினி இன்னொரு அண்ணன் எல்லோரும் கனடாவில்தானே வசிக்கின்றார்கள்

கனடாவில் என்ன தடை சொல்லுங்கள்? இந்தியாவினை விட எவ்வளவு நவீன மருத்துவ வசதிகளை கொண்ட நாடு?. சொந்த பிள்ளைகளுக்கு இல்லாத அக்கறையா கலைஞருக்கு வரவேண்டும்.


சரி இப்பொழுது ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருக்கின்றது கவனித்தீரா? வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஜெயலலிதாவினை சந்திக்க விரும்பி கோரிக்கை வைக்கின்றார், ஆனால் முதல்வர் பார்த்தீர்களா, கள்ள தோணியில் எல்லாம் ராமேஸ்வரம் வந்து ஜெயலலிதாவினை பார்க்கமுடியாது, விசாவிற்காக காத்திருக்கின்றார்

டெல்லி இன்னும் விசா கொடுத்தபாடில்லை, என்ன பிரச்சினை பேசபோகின்றீர்கள்? அரசியல் உறவென்றால் எம்மிடம்தான் தெரிவிக்கவேண்டும், என இழுத்தடிக்கின்றது டெல்லி, அதாவது இன்னொரு நாட்டினருக்கு விசா அளிப்பது, மத்திய அரசின் முடிவு, கூடவே பாதுகாப்புதுறையின் ஒப்புதலும் அவசியம்.

இப்படி பட்ட சூழலில் கலைஞர் என்ன செய்திருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? அந்த விமானத்தை இந்தோனேசியாவில் இறக்கி கள்ளதோணி மூலமாகவா அவரை கொண்டு வருவீர்கள்??

ஏற்கனவே கள்ளதோணிகளை 1990ல் அனுமதித்து அது பத்மநாபா கொலையில் முடிந்து அவர் அரசு கலைந்தது போதாதா? யார் என்றே தெரியாத ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் எனும் ஈழ கொலைகாலர்களுக்கு வேலூர் வாசலில் கொடிபிடிக்கும் சிலர், பார்வதி அம்மாள் வந்தால் சும்மா இருப்பீர்களா?

பிரபாகரனின் அக்காவிற்கும், அண்ணனுக்கும் இல்லாத தாய் பாசமும் அக்கறையும் கலைஞருக்கும் மன்மோகன் சிங்கிற்கும் கண்டிப்பாக வரவேண்டும் இல்லையா?

No comments:

Post a Comment