Tuesday, June 21, 2016

அகதி, வந்தேரி , புலன்பெயர்......





அமெரிக்காவில் குடியேறிய மற்ற இனங்களுக்கு எதிராக பட்டையினை கிளப்பிகொண்டிருக்கின்றார் டிரம்ப், மெக்ஸிகோ எல்லையில் சுவரே கட்டுவாராம்

மற்ற ஐரோப்பியர் மற்றும் அகதிகள் பிரச்சினைக்காக ஐரோப்பிய யூனியனிலிருந்தே விலக பிரிட்டன் ஆலோசனை

பொருளாதார சிக்கல்களால் பிரான்ஸில் முதல் முறையாக ஏர் பிரான்ஸ் விமானிகள் ஸ்ட்ரைக் மிரட்டல், அகதிகளால் நாடு சீரழிந்ததாக குற்றசாட்டு


சிரிய, ஆப்ரிக்க, கிரேக்க, ஈழ அகதிகளுக்கு எதிராக
கடும் எதிர்ப்பு, இந்த பிரச்சினையால் நாசிக்கள் கொள்கை மறுபடியும் தீவிரமடைவதாக கடும் பரபரப்பு

இலங்கையில் அமைதி திரும்பியதால் இனி ஈழ அகதிகளை ஏற்க்க ஐரோப்பிய யூனியன் அனுமதிப்பதில்லை, மேலும் அதிகமான ஈழமக்களை திருப்பி அனுப்பும் திட்டமும் உள்ளது.

இப்படியான செய்திகளால் கடும் அச்சமடைந்துள்ள ஐரோப்பிய வாழ் ஈழ மக்களால் வெளியிடபடும் செய்திகளில் ஒரு வித பெரும் பரபரப்பு காணபடுகின்றது, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சமத்துவம், சகோதரத்துவம் வேண்டுமாம், எல்லோரும் சமமாம், புலம்பெயர் மக்களின் நலன் பாதுகாக்கபடவேண்டுமாம். அரசியல் பலம் வேண்டுமாம், இன்னும் என்னவெல்லாமோ வேண்டுமாம்.

# ஆனால் இந்த ஐரோப்பிய ஈழத்தவர்களிடம் காசு வாங்கி கூவும் அங்கிள் சைமன் அடிப்பொடிகள் சொல்வதெல்லாம் இங்கு 600 ஆண்டு காலம் வாழும் தெலுங்கு மக்கள் வந்தேறி, ஆனால் 40 ஆண்டுகளாக ஐரோப்பாவில் இருக்கும் ஈழவந்தேறிகளில் பெயர் "புலம்பெயர் மக்கள்"

# ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பேசினால் இனவாதம், தமிழகத்தில் பேசினால் உரிமை, புரட்சி, இனவிடுதலையா?

# ஈழ அகதிகள் இருக்குமிடத்தில் சகோதரத்துவம் வேண்டும், ஆனால் அவர்கள் காசில் பிழைப்பவர்கள் நாட்டில் கலவர சூழலும், ரத்த ஆறும் ஓட‌ வேண்டுமா?

# வந்தேறி என ஐரோப்பியன் சொன்னால் வெட்கமே இல்லாமல் பல்லிளித்துகொண்டே அவன் காலில் விழுந்து கிடப்பதன் பெயர் மான தமிழினமா? அந்த எச்சி காசில் தமிழகத்தில் சிலருக்கு வீசிவிட்டு மண்டியிடா மானம், விழுந்துவிடா வீரம் என முழங்க சொல்வது என்ன வகை மானமோ தெரியவில்லை







3 comments:

  1. i want most of your posts
    can i get it in pdf format???


    2016-06-21 10:50 GMT+05:30 Stanley Rajan :

    > stanleyrajan posted: " அமெரிக்காவில் குடியேறிய மற்ற இனங்களுக்கு எதிராக
    > பட்டையினை கிளப்பிகொண்டிருக்கின்றார் டிரம்ப், மெக்ஸிகோ எல்லையில் சுவரே
    > கட்டுவாராம் மற்ற ஐரோப்பியர் மற்றும் அகதிகள் பிரச்சினைக்காக ஐரோப்பிய
    > யூனியனிலிருந்தே விலக பிரிட்டன் ஆலோசனை பொருளாதார சிக்கல்களால் பி"
    >

    ReplyDelete
  2. Thanks for your comment.
    You may download as PDF , using the PRINT Option in the "Share this: " (More).

    ReplyDelete
  3. In Print Option You have to OPT for Save as PDF.
    Please try . If you have any question please let me know.

    ReplyDelete