Tuesday, June 28, 2016

மிசா கொடுமை கால சாபம் காங்கிரசை விடாது என்றால் ....

மிசா கொடுமை கால சாபம் காங்கிரசை விடாது என்றால் பாபர் மசூதி சாபம் பாஜகவினை விடாமலா போய்விடும் என பதில் சொன்னால் சிலர் ஓடிவந்து மோதுகின்றார்கள்.

அதாவது பாபருக்கு இங்கு என்ன வேலை?, அவன் கட்டிய மசூதி இங்கு ஏன்? என ஆளாளுக்கு சாடுகின்றார்கள்.

அன்பர்களே, கோரி மசூதி கஜினி முகமது மசூதி என இருந்தால் அது கண்டிக்கதக்கது, அவர்கள் எல்லாம் இங்கு கொள்ளையர்களாக வந்தவர்கள், ஆனால் பாபர் அப்படி அல்ல,

அவனுக்கு ஆப்கன் பிடிக்கவில்லை, இங்கேயே வாழ வந்தவன் பாபர், இந்தியாவில் ஒரு மன்னனாகவேதான் வாழ்ந்தான், வெள்ளையன் வரும்போது அவன் சந்ததியான ஜஹாங்கீர் ஒரு இந்திய மன்னனாகவே அறியபட்டான், கடைசி மொகலாய மன்னன் பகதூர் ஷா, வெள்ளையனுடன் போராடிய விடுதலை வீரன்.

பாபர் வந்தேறி என்றால், ஆடுமாடுகளுடன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த‌ பிராமணர்கள் வந்தேறி இல்லையா? அவர்கள் மட்டும் என்ன மண்ணின் மைந்தர்களா?

[gallery ids="1079,1078" type="rectangular" orderby="rand"]

ஆப்கானிஸ்தானுக்கு பாபர் 1 பைசா கொண்டுசென்றவனா? இன்றும் அவன் சந்ததி கட்டிய தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளம், அவன் என்ன ஆப்கானில் கட்டினான்? ஒரு செங்கல் நட்டிருப்பான்?

கோஹினூர் வைரம் எங்கு உள்ளது? ஆனால் பாபர் அப்படி செய்தானா?

பாபர் பெரும் இஸ்லாமியவாதியாக இருந்திருந்தால் என்றோ விரட்டபட்டிருப்பான், மொகலாயர் ஆட்சியிலும் சகிப்புதன்மை இருந்தது, இல்லாவிட்டால் புத்த மதம் போல இந்து மதமும் வழக்கொழிந்து போயிருக்கலாம் ஆனால் இல்லை.

காசி ஆலயமும், பூரி ஜெகநாதர் ஆலயமும், காஷ்மீரிய இந்து ஆலயங்களும், கல்கத்தா ஆலயமும் அவர்கள் ஆட்சிக்கு முன்பும் இருந்தன, பின்பும் இருந்தன இன்றும் இருக்கின்றன.

இந்து இஸ்லாமிய வெறுப்பு வெள்ளையனால் தூவபட்டது, அது அவனால் ஏற்படுத்தபட்ட தேசபிரிவினையில் முடிந்தது, ஜின்னா கேட்காமலே பாகிஸ்தானை ரத்த களறியில் வெட்டி எடுத்து அவன் கையில் கொடுத்தான் வெள்ளையன், இங்கு அவனால் பரப்பபட்ட மதவெறியில் அது சாத்தியமாயிற்று

ஆனால் அந்த மதவெறிக்கு தன் உயிரை கொடுத்து முற்றுபுள்ளி வைத்தார் காந்தி, அதன் பின் கொஞ்சநாள் சத்தமில்லை

பின்பு பாபர் மசூதி வடிவில் அது கிளம்பிற்று, இங்குதான் ராமர் பிறந்தார் என அடித்து சொன்னார்கள், ஆதாரம் ஏதுமில்லை

அது பெரும் களபேரமாகி எண்ணற்ற மக்களை கொன்றுகுவித்தது, பிரிவினைக்கு பின் இத்தேசம் ரத்தகளறியில் மிதந்தது என்றால் அதற்கு காரணம் இந்த மசூதி பிரச்சினை.

இன்றைய இஸ்ரேலில் இயேசு வாழ்ந்தார் மறைந்தார், ஆனால் அவருக்கு பின் 400 ஆண்டுகாலம் கழித்துதான் ரோமானிய கிறிஸ்தவர்கள் அவர் வாழ்ந்த இடங்களை அடையாளம் இட தொடங்கினார்கள்,

இன்று அவர் சம்பந்தப்ட்ட இடங்கள் என சொல்லபடுவது குத்துமதிப்பான இடமே தவிர துல்லியம் அல்ல.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவத்திற்கே தடுமாறும்பொழுது, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ராமர் , இங்குதான் தவழ்ந்தார் என சண்டயிடுவது அரசியலன்றி என்ன?

நாட்டின் நலனுக்காக தன் அரசுரிமையினை விட்டுகொடுத்து கானகம் சென்றவர் ராமபிரான், இப்படி ரத்த களறியில் நாட்டின் அமைதிகெடுத்து அமைக்கபடுவது அவருக்கு விருப்பம் என்றா நினைக்கின்றீர்கள்?

அப்படியே எமது இந்து அடையாளம் என கிளம்பினால், ஏகபட்ட புத்தமத விகாரைகள் அழிக்கபட்டு பின் இந்துமத ஆலயங்களாக மாற்றபட்ட இடங்கள் உண்டு, அவற்றை எல்லாம் புத்தர் கோயிலாக மாற்றுவீர்களா?

500 ஆண்டுகால முன்பிருந்த மசூதி தரைமட்டமாக்கபட்டது, ஒரு வரலாற்று அடையாளம் என்ற அளவிலாவது விட்டிருக்கலாம் அல்லவா? இனி அந்த பழமை திரும்புமா?

புதிதாக செய்யவேண்டுமே தவிர இருக்கும் பழம் அடையாளங்களை அழித்தொழிப்பது அறிவுடமை ஆகாது

இன்று ஆப்கனில் பழமையான புத்தர் சிலைகளை உடைத்த தாலிபன்களையும், சிரியாவில் 4 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கலை வடிவங்களையும் உடைக்கும் ஐ.எஸ் இயக்கத்தை உலகம் மூடர்கள் பட்டியலில் வைத்துள்ளது, காரணம் பழமையின் மதிப்பு அது, கிடைக்கவே முடியாதது.

அப்படி பாபர் மசூதியினை இடித்தவர்களையும் உலகம் எந்த வரிசையில் வைக்கும்? அதே ஐஎஸ் இடம்தான்.

இன்று சர்வசக்தி படைத்த இஸ்ரேல், அல் அக்சா மசூதியினை தகர்த்து 3ம் ஆலயம் அமைக்க துடிக்கும் இஸ்ரேல் அமைதிகாக்கும் ரகசியம் என்ன? அந்த மசூதியின் பழமை, தொட்டால் உலகம் இஸ்ரேலை விட்டு வைக்காது.

பழம் அடையாளங்களை மத, இன வேறுபாடு இல்லாமல் தொன்மையின் அடையாளமாகவே காணவேண்டுமே தவிர அதில் மத வெறுப்பு அடையாளம் பூசுவது மகா ஆபத்தானது.

முழுக்க முழுக்க அரசியலுக்காக நடத்தபட்ட இந்த நாடகத்தால் நடந்தது என்ன? அப்படி சொன்னவர்கள் ஆட்சிக்கு வரமுடிந்ததே தவிர, கட்டுவார்களா?

அப்படி மசூதியினை இடித்து கோயில் கட்டிய மாவீரன் மோடி எனும் அடையாளத்துடன் அரபு நாடுகளுடனோ, முன்னாள் சோவியத் இஸ்லாமிய நாடுகளுக்கோ மோடி செல்லமுடியுமா? விடுவார்களா?

மதம் என்பது மனிதனை செம்மபடுத்துமே ஒழிய, அது அரசியலானால் நாடு நாசமாய் போகும், உலகம் அதனைத்தான் பார்த்துகொண்டிருக்கின்றது.

இது ராமர் செருப்பு புதைத்த இடம், இது கிருஷ்ணன் கோபிகையரின் துணியினை ஒளித்து வைத்த இடம் என கிளம்பினால் இந்நாடு வளர்ச்சி பாதையில் செல்லாது,

மதவெறியால் பாதிக்கபட்ட சிரியர்களுக்காவது அந்தபக்கம் துருக்கி வழியாக ஐரோப்பா செல்லும் வசதி உண்டு, நாம் எங்கு செல்லமுடியும்?

பாகிஸ்தான், சீனா, ஆப்கன், பர்மா, வங்கதேசம் மற்றும் இலங்கை இந்நாடுகளுக்குதான் செல்லமுடியும்?

நினைத்துபாருங்கள், நினைக்கவே பயமாக இருக்கின்றது அல்லவா?

பல மதங்கள் கலந்து வாழும் இந்தியாவில் உறங்கிகொண்டிருக்கும் பல விஷயங்களை அப்படியே உறங்கவிட்டு விடலாம், அப்படியே சாகட்டும்.

பாபர் வந்தேறி என்றால், ஆடுமாடுகளுடன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த‌ பிராமணர்கள் வந்தேறி இல்லையா? அவர்கள் மட்டும் என்ன மண்ணின் மைந்தர்களா?

( இந்திய ஐஎஸ் இயக்க போராட்டமும், அரேபிய சங் பரிவாரின் திருப்பணியும்)

No comments:

Post a Comment