Monday, June 13, 2016

ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம்




இலங்கை கடற்படைக்காக இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள முதலாவது, ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.

வாஸ்கோவில் உள்ள கோவா கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன மற்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

இன்னும் ஏராளமான இந்திய சிறிலங்கா அதிகாரிகள், இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் கலந்துத கொண்டனர்.

Stanley Rajan's photo.



 




# அடேய் மங்குனி , சைமன் பாய்ஸ், இந்த இலங்கை கடற்படை தளபதி குணவர்த்த்னே தான் புலிகளின் 11 ஆயுத கப்பலையும் அமெரிக்க வழிகாட்டுதலில் மூழ்கடித்து புலிகளுக்கு முதல் சங்கு ஊதியவர், பின்பு பொன்சேகா பால் ஊற்றினார்.

# சரி இப்பொழுது நீங்கள் எல்லோரும் எங்கே போனீர்கள்,நீங்கள் தேடிகொண்டிருக்கும் இனபடுகொலையாளி , நேரடியாக வந்திருக்கின்றார் அய்யா, எங்கு சென்று தொலைந்தீர்கள்?

# கோவாவில் இந்திய வரிப்பணத்தில் இலங்கைக்காக கப்பல் கட்டியிருக்கின்றார்கள், மத்திய பிரதேசம் வரை சென்ற உங்கள் வீரம் எங்கே? தூத்துகுடி கொழும்பு கப்பலை எதிர்த்த சைமன் எங்கே? வங்ககடலுக்கு மெழுகு பிடித்த உங்கள் வீர கரங்கள் எங்கே? வேலூர் சிறைச்சாலைக்கு வந்த இருசக்கர வாகனங்கள் எங்கே? அட சொல்லி தொலையுங்கள் எங்கே?

# உங்களுக்கு இந்த இலங்கை கடற்படையும் தெரியாது, அது புலிகளை ஓடவிட்டு அடித்த கதையும் தெரியாது, ஆனால் ராஜபக்சே வந்தால் மட்டும் கொதிப்பீர்கள்? இதே காங்கிரஸ் அரசு என்றால் அலறுவீர்கள், மோடி அரசு என்றால் கப்பல்தானே அதற்கு என்ன என ஓடிவிடுவீர்கள்.

# நல்லவேளையாக கலைஞர் முதல்வராக இல்லை, இல்லை என்றால் எப்படி எழுதுவீர்கள் தெரியுமா, "கலைஞர் இலங்கை கடற்படைக்கு ரகசிய உதவி, இந்த கப்பல் கட்டும் காண்டிராக்டை எடுத்திருப்பது டி.ஆர் பாலுவின் கப்பல் கம்பெனி, கனிமொழியின் பினாமி கம்பெனி அது

ஈழத்தில் எம் இனம் அழிக்க, சிங்களனுக்கு கப்பல் செய்துகொடுக்கும் துரோகி கருணாநிதி ஒழிக , என் உறவே தமிழன் வோட்டை வாங்கிகொண்டு தமிழின அழிப்பினை செய்யும் கலைஞரை விடலாமா?"




No comments:

Post a Comment