Wednesday, June 8, 2016

தமிழகத்தில் நல்ல ஓர் ஈழ அபிமானி




தமிழகத்தில் எத்தனையோ ஈழ அபிமானிகள் இருந்தனர், அவர்களில் திராவிட கழகத்தாரின் பணிகள் மிக அதிகம், அந்நாட்களில் ஈழபோராளிகளுக்கு ஆதரவும், அடைக்கலமும் பொருளும் கொடுத்து உதவியவர்கள் அவர்களே

அவர்களில் ஒருவர்தான் ஸ்டாலின் என்பவர், திராவிட கழகத்தார். கும்பகோணத்துக்காரர். பெரும் ஈழ அனுதாபி, பத்மநாபா இயக்கத்துக்கு பெரும் பின்புலமாக திகழ்ந்தவர், இதனால் சிங்கள அரசின் மறைமுக மிரட்டலுக்கும் ஆளானவர், சிங்கள கொலை முயற்சியும் உண்டு.

தன் சொத்துக்களை எல்லாம் ஈழபோராட்டத்திற்காக இழந்தவர் அவர், 1990ல் சென்னையில் பத்மநாபா கொல்லபட்டபின் அமைதியானார், ஆனாலும் ஈழ அனுதாபிகளிடம் அவருக்கு நல்ல அடையாளம் இருந்தது. சமீபத்தில் இறந்துபோனார்.


இப்படிபட்ட ஈழ அபிமானிகளை தமிழகத்தில் அமைதியாக்கியZakir Hussain's photo.து யார்? பெரியார் தொண்டர்களா?

இப்படி எத்தனையோ திராவிட கழகத்தார் ஈழபோராட்டத்தில் தங்களை ஒருவராக இணைத்துகொண்டவர்கள், அதற்காக தன்னை அர்பணித்தவர்கள், இன்று தூக்கு கயிறு முன்னால் நிற்கும் பேரரிவாளனும் திராவிடர் கழகமே, ராஜிவ் கொலையின்போது சிபிஐயின் குறி முழுவதும் திராவிட கழக அபிமானிகளை சுற்றியே இருந்தது.

இப்படி ஈழபோராட்டத்தில் திராவிட கழக பங்களிப்பு தெரியாத சீமானிய அடிமைகள், திராவிடம்தான் ஈழபோராட்டத்தை அழித்தது என சொல்வதுதான் காலகொடுமை.

கும்பகோணத்தில் வசித்த அந்த தோழர் ஸ்டாலினை இவர்களுக்கு தெரியாது, அவரை போல ஏராளமான திராவிட கழக தோழர்களை அறவே தெரியாது, இவர்கள் தான் ஈழம் மலரவைக்க போகின்றார்களாம்.

இந்த பெரும் ஈழ ஆர்வலர் கும்பகோணம் ஸ்டாலினை தெரியாது, ஆனால் கோடம்பாக்கம் சீமான் பெரும் போராளி என சொல்பவர்களை பார்த்து விவரம் தெரிந்தவர்கள் எப்படி சிரிப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

ஈழபோராட்டத்திற்காக தன்னை அழித்துகொண்ட அவருக்கு தமிழகத்தில் எங்காவது ஒரு மெழுகுவர்த்தி எரிகின்றதா? நிச்சயமாக இல்லை.

அந்த கும்பகோணம் ஸ்டாலினுக்கு, நன்றி மறக்காமல் கனடா வாழ் ஈழதமிழர்கள் அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றார்கள்.

இதுதான் தமிழகம், புலிகளை தவிர ஏதும் அறியா தமிழகம், திராவிட கழகம் தமிழகர்களின் எதிரி என புதிதாக ஒப்பாரி வைக்கும் தமிழகம். அந்த திராவிட கழகத்தாரின் ஈழ தியாகத்தில் ஆயிரத்தில் ஒன்றை கூட செய்திருப்பதில்லை, மாறாக அறிந்திருப்பது கூட இல்லை இந்த சீமானிய கும்பல் என்பதுதான் பெரும் பரிதாபம்.

 





No comments:

Post a Comment