Thursday, June 9, 2016

சட்டம் ஒழுங்கு என்றால் என்ன?

சட்டம் ஒழுங்கு என்றால் என்னவென்று கூட தெரியாத, ஏதோ ஒரு காட்டுமிராண்டி நாட்டில் இருப்பதாக நினைத்துகொண்டு இவர்கள் சொல்வதை காணுங்கள்

சிறையினை உடைத்து ராஜிவ் குற்றவாளிகளை மீட்பார்களாம், எப்படி இருக்கின்றது நிலை?

ஆனால் ராஜிவ் கொலை விசாரணை நடந்தபொழுது, அந்த அலுவலகமான மல்லிகையின் மீது தாக்குதல் நடத்தி கார்த்திகேயன் உட்பட எல்லோரையும் கொல்ல அதிரடி திட்டம் வைத்திருந்தான் சிவராசன், புலிகளுடனான வயர்லெஸ் தகவல் அதனைத்தான் சொன்னது, பின்னர் ஏனோ கைவிடபட்டது


அப்படி பட்டவர்களின் சிந்தனையின் தாக்கம் உருவான சிலரின் பதிவுகள் இப்படித்தான் இருக்கும், இருக்கட்டும்

13394175_10206523385178499_1816975580647816939_n

ஆனால் ஒரு டாஸ்மாக்கினை கூட் அடித்து நொறுக்கமுடியாதவர்கள் சிறையினை உடைப்பார்களாம்?, சட்டத்தை மதிப்பது மானங்கெட்டதனமாம்

இன்னும் என்னென்ன காரியங்களுக்கு மானம்கெட்ட தனம் என பெயரிடுவார்களோ தெரியவில்லை,

இவை எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கே சவால் விடும் விஷயங்கள்.

பத்மநாபா கொலை குற்றவாளிகள் தப்பிய விஷயத்தில்தான் இதற்காக கலைஞர் அரசே கலைக்கபட்டது, அந்த குற்றவாளிகளில் ஒருவன் தான் இன்று சிறையில் இருக்கும் சின்ன சாந்தன்.

அப்படியானால் கலைஞர் அரசு கலைக்கபட்டதன் அர்த்தம் என்ன? அவர் அரசு செய்தது தவறு, இந்த அரசு இவர்களை எல்லாம் விட்டு வைத்திருப்பது நியாயமா?

ஆனால் ஒன்று விரைவில் இவர்களால் இவர்கள் அண்ணன் சீமான் சிறைகாணபோவது உறுதி, விரைவில் அது நடக்கலாம்.

No comments:

Post a Comment