Thursday, June 9, 2016

யாழ்பாணத்தில் இந்திய உதவியுடன் சீரமைக்கபட்ட விளையாட்டு அரங்கம்

யாழ்பாணத்தில் இந்திய உதவியுடன் சீரமைக்கபட்ட ஆல்பர்ட் துரையப்பா விளையாட்டு அரங்கினை 18ம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைக்கின்றார், மோடிக்கு யாழ்பாண மக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன‌

13413708_10206522910486632_2120966381677305486_n

# அங்கிள் சைமன் கோஷ்டி இந்த செய்திகளை எல்லாம் சொல்லவே சொல்லாது, அட சொல்லவேண்டாம் இனபடுலை நடந்த நாட்டிற்கு இந்திய உதவி ஏன்? என் வரிப்பணம் ஏன் என்றாவது குட்டிகரணம் போடலாம் அல்லவா? செய்யமாட்டார்கள்.

# அது என்னவோ தெரியவில்லை, காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தால் தமிழகத்தில் இம்மாதிரியான விஷயம் அணல் பறக்கின்றது, அணுவுலை பிரச்சினை பூதகரமாக்கபடுகின்றது, ஆனால் பாஜ ஆட்சியில் ஈழநாடு அமையவுமில்லை, போர்குற்ற தண்டனையுமில்லை, கூடங்குள அணுவுலை மூடபடவுமில்லை ஆனால் ஒரு சத்தமுமில்லை. என்னவோ ஒரு வகையான அரசியல் இது என்பது மட்டும் புரிகின்றது.


# அப்படித்தான்யானை இறவு யுத்த புலிகள் வெற்றியிலும் சர்ச்சை நடந்தது, ஆனால் அன்று வாஜ்பாய் அரசு அல்லவா? தமிழகத்தில் ஒரு சத்தமுமில்லை, அன்று காங்கிரஸ் அரசு இருந்திருந்தால் ஈழதுரோகம் என பொங்கி இருப்பார்கள்,

# சீமானியர், திருமுருகன் காந்தி கோஷ்டி போன்ற உணர்வாளர்களுக்கு முகத்தில் பெரும் கரிபூசும் சம்பவம் இது, அதுவும் புலி ஆதரவாளர்கள் உண்மை வரலாறு தெரிந்தால் நிச்சயம் சயனடை தேடுவார்கள், அப்படி கிடைக்காவிட்டால் எலிமருந்தை தின்றுவிட்டோ அல்லது ஓலை பட்டாசு மீதோ படுத்துகொண்டோ அழும் சம்பவம் இது

# அதாவது பிரபாகரனின் முதல் கொலை ஆல்பர்ட் துரையப்பா எனும் யாழ்பாண தமிழ்மேயரை கொன்றது, அதாவது அவர்தான் அன்னாரின் முதல் எதிரி, துரோகி, புள்ளிகணக்கு எல்லாம், அதன் பின்புதான் பிரபாகரன் ஹீரோ ஆனார்.

# அந்த துரையப்பா பெயரில் ஸ்டேடியமாம், அதனை சீரமைத்து கொடுத்து திறந்து வைப்பதும் இந்திய அரசாம், எப்படி தாங்கிகொள்ளபோகின்றீர்கள் அங்கிள் பாய்ஸ்?

No comments:

Post a Comment