ஒரு பதர் சொல்லிகொண்டிருக்கின்றது, சிங்களன் அட்டகாசம் தாங்காமல் புலிகள் துப்பாக்கி தூக்கினர், இது தெரியாமால் Stanley Rajan புலம்பிகொண்டிருக்கின்றார்
இந்தியாவில் இட ஒதுக்கீடு என மேல்சாதியினரை எப்படி பாடாய் படுத்துகின்றோம், இதனைத்தான் சிங்களன் செய்தான், அது தமிழர் உரிமை பறிப்பு ஆயிற்று
யாழ்பாண மாணவர்கள் கல்வி இடஒதுக்கீட்டால் பாதிக்கபட அவர்கள் போராட்டம் பின் ஆயுதபோராட்டமாக மாறிற்று, புலிகள் மட்டுமா துப்பாக்கி தூக்கினார்கள்? அவர்களோடு கூட 7 குழுக்கள் இருந்தன. பயிற்சிபெறாத அக்குழுக்களை சிங்களன் அழிக்கும் நாள் அருகில் இருந்தது.
அப்பொழுதுதான் கொழும்பு கலவரமும் இந்திய தலையீடும் வந்து போராளிகளுக்கு பயிற்சி அளிக்கும் காரியமும் நடந்தது, அதாவது ஈழமக்களுக்கு பின் இந்தியா இருந்தது, சிங்களம் பல்லை கடித்துகொண்டிருந்தது
பயிற்சி முடிந்து ஈழம் சென்ற போராளிகுழுக்களை புலிகள்தான் அழித்தனர், இது யார் செய்திருக்கவேண்டியது? யாருக்கு லாபம்? நிச்சயமாக சிங்களனுக்கு
அன்றே 1987ல் வடமராட்சியில் பிரபாகரன் சுற்றிவளைக்கபட்டு மக்கள் பசியால் வாடியபொழுது ஐநா உத்தரவினை கூட வாங்காமல் உணவு வீசினார் ராஜிவ், இந்த புலிகளால் ஒருநாளும் மக்கள் நிம்மதியாக வாழமாட்டார்கள், சவுடால் புலிகளால் யுத்தவெற்றி சாத்தியமில்லை என்றுதான் அமைதி ஒப்பந்தம் எழுதபட்டது, இந்திய படையும் சென்றது.
ஆனால் வரிந்து கட்டி சண்டையிட்டனர் புலிகள், என்னை யூதாஸ் என்பவனே கொஞ்சம் சொல், இந்த இந்திய படைகளை எதிர்க்கவேண்டியவன் யார்? சிங்களன் அல்லவா? ஆனால் அவன் ரசித்துகொண்டு, புலிகளுக்கு ஆயுதம் கொடுக்க கொடுக்க இந்தியபடை போராடியது.
ஒரு கட்டத்தில் வடக்கு கிழக்கு மாநிலத்தை இணைத்து தேர்தலையும் நடத்தியது இந்தியா, புலிகள் நின்றார்களா? ம்ஹூம் அவர்களுக்கும் தேர்தலுக்கும் என்ன இருந்தது?
அமைதிபடை மீது பழிசுமத்தி விரட்டி, ராஜிவையும் கொன்று ஈழமக்களிடமிருந்து இந்தியாவினை பிரித்தது யார்? சொல், யார் புருட்டஸ்? யார் யூதாஸ்?
அதன் பின் 1995ல் யாழ்பாணம் மீட்கபட புலிகள் வன்னிக்கு விரட்டபட்டனர், சொல், மாவீரனான புலிகள் அதன் பின் என்றாவது யாழ்பாணம் மீட்ட்டார்களா? முடியவில்லை அவர்கள் சக்தி அவ்வளவுதான், நீ கண்ட வீரெம்ல்லாம் தமிழக மீடியாதான்.
2006ல் உலகமே அவர்கள் மீது தடைவிதிக்க, வலிந்து மாவிலாற்றில் சண்டை தொடங்கி தோல்வி முகத்தில் மக்களை பிடித்து வைத்து இறுதியில் அழிந்தும் போனது புலிகள் கதை
சொல், புலிகளோடு போராட்டம் முடிந்துபோகுமளவிற்கு மற்ற குழுக்களை ஒழித்தது யார்? தன்னை தவிர யாரும் போராடகூடாது என தமிழருக்கு துரோகம் செயதது யார்?
கிட்டதட்ட 20 ஆயிரம் தமிழர்களை கொன்றது புலிகள் தான், தமிழ் தலைவர்களை கொன்றதும் புலிகள்தான், இது யாருக்கு லாபம்? சிங்களனுக்கு அல்லவா? மூளை இருப்பவன் இதனை செய்வானா?
சிங்கள செய்திருக்கவேண்டிய வேலையினை அந்த புருட்டஸ், யூதாஸ் வேலையினை செய்து தமிழரை தெருவில் விட்டது யார்?
வரலாற்றை படி, எல்லா குழுக்களும் துப்பாக்கி தூக்கின, புலிகள் மட்டுமல்ல, அப்படி புலிகள் தனி ஆவர்த்தனம் செய்யவில்லை என்றால் இந்த அழிவு வந்திருக்காது, இன்று இந்திய ஆதரவுடன் ஈழமாகாணத்தில் ஒரு தமிழன் முதலமைச்சர் ஆகி இருப்பான், இவ்வளவு சனம் செத்திருக்காது
தனிஈழம் கிடைத்திருக்குமா என நீ கேட்கலாம், இன்று மட்டும் கிடைத்தா விட்டது? கிட்டதட்ட 3 லட்சம் மக்கள் செத்து, லட்சகணக்கான மக்களை அனாதைகளாக்கி, கோடிக்கணக்கான பொருள் இழப்புகளை ஏற்படுத்தி இன்று ஈழம் இல்லை என்பதைத்தான், 30 வருடங்களுக்கு முன்பாகவே சொல்லி பார்த்தார்கள்
புலிகளுக்காவது பட்டு புத்தி வந்தது, உன்னை போல மூளையினை கழற்றி பன மரத்தடியில் வைத்துவிட்டு அலைபவனுக்கு ஒரு காலமும் புத்திவரப்போவதில்லை.
கொஞ்சம் கவனி 2009ல் ஐரோப்பாவில் பிரபாகரன் படம் பிடித்து வந்தவர்களை கொஞ்சமேனும் ஐரோப்பா கண்டுகொண்டதா? சொல், அவன் மதிப்பு உலகில் அவ்வளவுதான்.
இந்தியாவும், நார்வேயும், அமெரிக்க குழுவும் இன்னும் எத்தனையோ பெரும் சக்திகளும் பேசிபார்த்துவிட்டு காரி துப்பிவிட்டு சென்ற நபர்தான் பிரபாகரன்,. 30 வருடமாக கூட இருந்து காப்பாற்றிய பாலசிங்கமே அரண்டு போய் ஓடினார், அந்த நபரை பற்றி நீ கனவு கொண்டிருந்தால் கண்டு கொண்டே இரு.
அப்படி முட்டாளாகவே இரு,
மக்களுக்காக இம்மண்ணை நேசிக்கின்றேன், மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை என சொன்ன பத்மநாபா தலைவனா?
வெறும் ஆயுதத்தையும் வெடிகுண்டையும் மட்டும் நேசித்த "மனநோயாளி" தலைவனா?
ஒன்று தெரிந்துகொள், இந்தியா 1980களில் தலையிடாவிட்டாலும் இன்னொரு நாடு வந்திருக்கும், அது அமெரிக்கா, இஸ்ரேல், சீனா என யாராகவும் இருக்கலாம், ஆனால் அது முற்றாக தமிழர்களை ஒழிப்பதாக இருக்குமே அன்றி (2009ல் நடந்தது போல) தமிழருக்கு ஒரு நன்மையும் கொடுத்திருக்காது.
இந்தியா ஒதுங்கியபின் என்ன நடந்தது? 2009ல் அதே அழிவு, அதே அவலம்.
இந்தியா மட்டுமே அன்று அத்தமிழருக்காக ஒரு மாநிலம் உருவாக்கி கொடுத்து உரிமை பாதுகாக்க சிந்தித்த ஒரே நாடு, புரிகின்றதா? அதனை கெடுத்த புலிகள்தான் புரூட்டஸ், அவர்களை புகழும் நீ ஒரு யூதாஸ்.
No comments:
Post a Comment