Thursday, June 9, 2016

யாருக்கு விடுதலை?

13346578_10206516058635340_8994867815287044621_n.jpg

இனி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ போன்ற அந்நிய சக்திகள், இந்திய எதிர்ப்பு தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் இனி இப்படி யோசிக்கும் ஆபத்து உண்டு

இந்தியாவில் தாக்குதல் நடத்தி பலபேரை கொன்றுவிட்டு , அதற்கு உதவி விட்டு, சிக்கி வேறுமொழியில் பேசினால் தூக்கிலிட்டு விடுகின்றார்கள், இந்த சிக்கலை தவிர்க்க ஒரே வழி தமிழில் பேச பயிற்சி அளிப்பது,

அவர்களை கொண்டு இந்திய ராணுவத்தினரை கொல்லலாம், அணுவுலை தகர்க்கலாம், பெரும் அதிகாரிகளை கொல்லலாம், கொன்றுகொண்டே இருக்கலாம். எத்தனை பொதுமக்கள் செத்தாலும் கவலை இல்லை, காரணம் கொல்பவர்கள் தமிழில் பேசுகின்றார்கள் அந்த தகுதி போதும்.


குற்றவாளிகள் சிக்கிகொண்டால் என்ன செய்வார்கள்? தூக்கில் இடமாட்டார்கள், ஏன் என்றால் தமிழ் பேசுகின்றார்கள் அல்லவா? சிறையிலே வைப்பார்கள், நிச்சயம் தமிழக தமிழர்கள் அவர்கள் விடுதலைக்காக போராடுவார்கள் கொடிபிடிப்பார்கள்,

ஆனால் ஒன்று சில அப்பாவி தமிழர்களையும் சிக்க வைக்க வேண்டும், அந்த சந்தடி சாக்கில் எல்லா தமிழ்பேசும் சர்வதேச‌ தீவிரவாதிகளும் தப்பிவிடலாம்,

நிச்சயம் ஒரு அப்பாவி இருந்தால் தான் அவன் பின்னால் அனைத்து கொடூர தீவிரவாதிகளும் தப்பமுடியும், அவனும் தமிழன், கொன்றவர்களும் தமிழ் பேசுவார்கள், அது போதும்.

இன்னொன்று அந்த அப்பாவிக்கு ஆதரவாக வயதான தாயோ, பாட்டியோ தெரு தெருவாக அலைய வேண்டும், அவளுக்கு 5 பைசா கொடுக்க கூடாது, மாறாக அவள் படத்தை கோடிகணக்கான பணம் செலவழித்து உலகெல்லாம் கொண்டு செல்ல வேண்டும்.

நிச்சயம் பிரச்சினையே இல்லை பல தமிழக தொழில்முறை அமைப்புகள் உள்ளன, அவர்களுக்கு இது முழுநேர தொழில், நிச்சயம் வேறு வேலை வெட்டிக்கு செல்லமாட்டார்கள், இம்மாதிரியான தீவிரவாதிகளை விடுதலை செய்யுமாறு கடும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள், பல வகையான ஸ்லோகன்கள் அவர்களிடம் உண்டு.

# விரைவில் காஷ்மீரிய மலைகள், ஆபகன் தீவிரவாத கூடங்கள், சீன காடுகள், அந்நியநாட்டு தீவுகள் ,ஐஎஸ் இயக்க வகுப்புகள், அல்கய்தா முகாம்கள் எங்கும் தமிழில் தீவிரவாதிகள் பயிற்சிபெறும் நிகழ்வுகள் நடக்கலாம்,

# உஸ்பெக், செசன்யா, ஆப்கன், அரேபியா, பாகிஸ்தான், சீனாவின் உய்குர், இந்தோனேசியா என சகல நாட்டு தீவிரவாதிகளும் தமிழ்பேசும் அற்புதத்தை இனி உலகம் காணப்போகின்றது,

தமிழர் காதில் "தேன் வந்து பாய போகின்றது"

# "தேன் மதுர தமிழோசை உலகெல்லாம் பரவும்படி செய்தல் வேண்டும்" என்ற ஆசை இப்படியா நிறைவேற வேண்டும்?

No comments:

Post a Comment