Friday, June 10, 2016

வங்கத்தை பிரித்த இந்தியா, ஈழத்தை மறுப்பதேன்?




வங்கத்தை பிரித்த இந்தியா, ஈழத்தை மறுப்பதேன்? ஏய் பார்பன அடிவருடி, ஆரிய அடிமையே சொல்,சொல் என்றேல்லாம் கேட்கின்றார்கள்

வங்கம் 110 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இரண்டாகவே பிரிக்கபட்டது, அடுத்த 40 ஆண்டுகளில் அது இன்னொரு நாடாயிற்று, பிரிவினையில் அவர்கள் மோதி ரத்த ஆறு ஓடியதை ஹே ராம் படம் வரை கண்டோம்.

கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில் மேற்கு வங்கத்தவர் தலையிட்டதோ, அது தொப்புள் கொடி உறவு எனவோ யாரும் கத்தவுமில்லை, தீகுளிக்கவுமில்லை, இவ்வளவிற்கும் பங்காளிகள், 100 வருடத்திற்கு முன்புவரை ஒரே குடும்பம்.

அகதி பிரச்சினைகளை காரணம் காட்டி இந்தியா நுழைந்து தனிநாடு ஆக்கினாலும், மேற்கு வங்கமும், வங்கதேசமும் இன்றுவரை நெருங்கிவருவதில்லை, மேற்கு வங்கத்தார் தாங்கள் இந்தியர் என்பதில் மகா உறுதியாய் நிற்கின்றார்கள்.

Stanley Rajan's photo.

ஆனால் ஈழநிலை அப்படி அல்ல, தமிழக அரசியல் வித்தியாசமானது, ஏற்கனவே திராவிட நாடு கேட்டு, இந்தியினை எதிர்த்து இவர்கள் செய்த அரசியல் கொஞ்சமல்ல, டெல்லி என்றாலே பிராமணர், நாமெல்லாம் அடிமை என்றே மக்களை நம்ப வைத்தார்கள்.

ஆனாலும் 1980 வரை ஈழபிரச்சினை தமிழகத்தை பாதிக்கவில்லை, ஆனால் போராட்டம் வெடித்து அகதிகள் வர வர அதில் இந்தியா தலையிட்டது, போதாதா? தமிழகத்தில் எம்ஜிஆரும், கலைஞரும் தலையிட பெரும் எழுச்சி உண்டாயிற்று.

சிங்களம் இதில் காய்நகர்த்தியது, இன்று தமிழகமும் இலங்கை வடபாகமும் சேர்ந்து இருக்கும் அகண்ட ஈழம் யாரால் உருவாக்கபட்டதென்றால் சாட்சாத் சிங்களனால்தான், அவன் அப்படி ஒரு தோற்றத்தை டெல்லிக்கு காட்டினான்.

(அப்படி சிங்களனால் உருவாக்கபட்ட வரைபடைத்தைத்தான் சீமானிய அடிப்பொடிகள் தூக்கி திரிகின்றன.)

இந்திரா இங்குதான் யோசித்தார், வங்கம் வெற்றிதான் ஆனால் பஞ்சாப் எரிகின்றது, ஏற்கனவே தமிழக திராவிட சித்தாந்தம் எச்சரிக்கைகுரியது, அங்கு தனிநாடு அமைவது நிச்சயம் இந்தியாவிற்கு ஆபத்து, ஆனால் சில உரிமைகளை பெற்று கொடுத்து அம்மக்களை அமைதியாக வாழவைக்க அவர் முயற்சி எடுத்தார், அப்படி ஈழத்தில் இந்தியா கால்பதிக்கும் பொருட்டு அவர் செய்ததுதான் போராளிகளுக்கான பயிற்சி.

ஆனால் அது பெரும் பிரச்சினையில் சிக்கியது, தெரு சண்டையாளர்கள் கையில் ஆயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதை அவர் உணர்ந்தபொழுதே கொல்லபட்டார், ராஜிவ் காந்தி வேகமாக அந்த ஆபத்தை களையமுயன்றார் செத்தார்.

இதில் புலிகளின் போராட்ட நுட்பமும் கொடுரமானது, அதாவது மக்களோடு மக்களாக இருந்து ராணுவத்தை தாக்கவேண்டும், பின் ராணுவத்தால் பாதிக்கபடும் மக்களிடம் பார்த்தாயா சிங்களன் கொடுமையினை என சொல்லி, எங்களை தவிரவேறு வழி இல்லை என சொல்லி சேர்த்துகொள்ளவேண்டும், அதாவது பழி எதிராளி மீது பலன் இவர்களுக்கு.

அப்படித்தான் ராஜிவ்கொலை மூலம் பெரும் கலவரம் தமிழகத்தில் வெடிக்கும் என்றுதான் தமிழகத்தில் கொன்றார்கள், கலவரம் வெடித்தால் பாதிக்க்படும் தமிழர்கள் புலி பின்னால் செல்வார்கள், பெரும் ரத்தகளறியினை தமிழகம் சந்திக்கும் என்பதான திட்டம் அது, ஆனால் தமிழகம் ஜெயலலிதாவினை முதல்வராக்கிவிட்டு, புலிகளை கைவிட்டது.

அதன் பின் தமிழகத்தில் இருந்து ஈழ ஆதரவு குரல் எழும்பும் போதெல்ல்லாம் டெல்லி ஒதுங்கியது, அப்படியே ஈழ பிரச்சினையிலிருதும் ஓதுங்கிகொண்டது.

வேறுகோணத்தில் பார்க்கபோனால் ஈழமக்களின் துயரத்திற்கு தமிழக பங்களிப்பும் பெரும் காரணம், இவர்கள் ஈழ ஆத்ரவு எனும் பெயரில் அவர்களை நாசமாக்கியவர்கள்.

இதோ வங்கம் அமைந்தாகிவிட்டது, வங்கதேச தீவிரவாதிகளை கைது செய்யும் பொழுதெல்லாம் மேற்கு வங்காளிகள் குதிப்பதில்லை, கொடி பிடிப்பதில்லை

ஆனால் இலங்கை தீவிரவாதிகளை விடசொல்லி இங்கு பெரும் ரகளை செய்கின்றார்கள், உண்மையில் இவர்கள் இப்படி எல்லாம் ஒப்பாரி வைக்கவில்லை என்றால் என்றோ பேரரிவாளன் மட்டுமாவது வெளிவந்திருப்பான்

இல்லாத ஈழத்திற்கே இப்படி குதிப்பவர்கள், ஈழம் அமைந்திருந்தால் தமிழகத்தை நிம்மதியாக விட்டிருப்பார்கள், சுடுகாடாக ஆக்கியிருப்பார்கள், நீங்களே பாருங்கள்.

இப்படி முடிக்கலாம், அதாவது இருகுழு சண்டையிட்டு கொண்டிருக்கின்றது, மூன்றாம் சக்திவாய்ந்த நபர் சமாதானம் பேச செல்கின்றார், அவரை சண்டையிட்ட ஒரு குழு கொன்றுவிடுகிறட்து,பேச வந்தவனை எல்லாம் கொல்கின்றது அக்குழு, என்னாகும்? எல்லோரும் சேர்ந்து அந்த கொலைகாரனை அடித்து கொல்வார்கள். கூடவே அப்பாவி மக்களும் செத்தார்கள்

அப்படித்தான் நடந்து முடிந்தது சகலமும், எல்லாம் நடந்து முடிந்த பின், அதாவது எல்லோரு பார்த்துகொண்டிருக்க நடந்து முடிந்தபின், திடீரென 2 பேர் வந்து என்ன ஆனது? உங்களுக்கு இரக்கமே இல்லையா? இந்த இனபடுகொலை உலகம் தாங்குமா? என்றேல்லாம் கத்தினால் அந்த 2 பேரையும் உலகம் எப்படி பார்க்கும்?

அதாவது சவ ஊர்வலத்தில் கூடவே வந்த ஒருவன், அடக்கம் முடிந்தபின் ஒருவன் என்ன இது ஒருவன் செத்துகிடக்கின்றானே அய்யொ.... என ஒப்பாரி வைத்தால் எப்படி இருக்கும்? உலகம் அவர்களை பைத்தியம் என்பார்களா? இல்லையா?

அந்த பைத்தியக்காரர்கள் தான் சீமானும், திருமுருகன் காந்தியும்


























No comments:

Post a Comment