Thursday, June 16, 2016

அப்படி என்ன மூட பழக்க வழக்கங்களை கிறிஸ்தவம் இங்கு துடைத்தொழித்திற்று?




நண்பர் யாரென தெரியவில்லை, ஆனால் கடும் மூளைசலலை செய்யபட்டவர் போல தெரிகிறார், சாதாரண சலவை அல்ல, நன்றாக வெள்ளாவியில் வெளுக்கவைத்த சலவை.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக எப்பொழுதும் இந்தியாவில் எதிர்ப்பு உண்டு, அது சித்தர்கள், திருமூலர், ராமானுஜர் என தொடர்ந்து வந்தது, சீக்கிய மதம் அப்படி உருவானது, தெற்கே பெரியார் போராடினார்.

அவ்வளவு ஏன் அக்கால புத்த ஜைன மதங்களே இப்படித்தான் உருவாயின‌


உடன்கட்டை ஏறும் வழக்கத்தை இந்தியாவிலிருந்து ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய் என்ன கிறிஸ்தவரா?

தெற்கே பெரும் அவதாரமாய் எழுந்து தாழ்த்தபட்ட மக்களுக்கு பெரும் நிழல்கொடுத்த ஐயா வைகுண்டர் என்ன லண்டனிலிருந்து வந்தாரா?

அப்படி என்ன மூட பழக்க வழக்கங்களை கிறிஸ்தவம் இங்கு துடைத்தொழித்திற்று? பைபிளை மாற்றி திருமணம் செய்வது என்ன அறிவுடமையா? நகை அணியமாட்டேன் என சொல்லிவிட்டு பென்ஸ்காரில் செல்வதும், பங்களாக்களில் வசிப்பதும் என்ன வகை பகுத்தறிவு?

Stanley Rajan's photo.

பன்றிகறி உண்ணாதே என பைபிள் சொல்கிறது, சுன்னத் செய் என பழைய ஏற்பாடு சொல்கிறது, அதனை எல்லாம் வேண்டாம் என்றபின் அதிலிருக்கும் பத்தில் ஒரு பாகம் காணிக்கை மட்டும் பிடித்துகொண்டு தொங்கிகொண்டிருப்பது யார்?

விபச்சாரத்தை கிறிஸ்தவம் ஒழித்ததென்றால் சில ஐரோப்பிய நாடுகளில் விபச்சாரம் வரிகட்டும் தொழிலாக அங்கீகரிக்கபட்ட அர்த்தம் என்ன?

நீலபட நிறுவணங்களை நடத்திகொண்டிருப்பது யார்?

திருடுதல் இந்தியாவில் இல்லையா? கிழக்கிந்திய கம்பெனியினை ஏமாற்றி அமெரிக்காவில் பல்கலைகழகம் தொடங்கிய வெள்ளையன் யேல் யார்? புத்த சமயத்தவனா?

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் திருட்டே இல்லையா?

இப்படி ஒரு சிந்தனையும் இல்லாமல், ஏதோ கிறிஸ்தவம் வந்துதான் இந்தியாவினை காப்பாற்றியது போல பல கிறிஸ்தவர்கள் அர்த்தமில்லாமல் பேசிகொண்டிருப்பார்கள்.

அன்று இந்தியா வளமான நாடு, அதனால்தான் வந்தார்கள் ஆண்டார்கள். சில நல்ல காரியங்களும் நடந்தன மறுப்பதற்கில்லை,

இன்று அரேபிய எண்ணெய் வளம் அந்நாட்டை பெரும் செழிப்பில் நிறுத்தியிருக்கின்றது, அதுவும் கிறிஸ்தவமா? ஜப்பான் இன்று தலைநிமிர்ந்து நிற்க காரணம் கிறிஸ்தவமா?

எதனையாவது சொல்வது, இல்லாத பிம்பத்தினை உருவாக்குவது ஏதும் சொன்னால் மத சிறுபான்மை என ஒப்பாரி இடுவது.

இவரை போன்றவர்களுக்கு மூளை சலவை மட்டுமல்ல, நன்றாக இஸ்திரியும் போடபட்டிருக்கின்றது.













No comments:

Post a Comment