' நாம் சொன்னால் இந்த நாடு கேட்கத்தான் வேண்டும்!' ராஜிவ் கொலையாளிகள் விடுதலை குறித்து இயக்குநர் ராம்
# என்னது நாம் சொன்னால் கேட்கத்தான் வேண்டுமா?, அணுவுலை முதல் மீத்தேன் வரை எத்தனை மக்கள் கதறி கேட்டார்கள், இந்த அரசு அசைந்து கொடுத்ததா? அல்லது சினிமாக்காரனான நீர் இப்படி சொன்னீரா?
# ஒரு உச்ச கொலை வழக்கில் அக்கொலையாளிகளை விடுதலை செய்ய நீர் சொன்னால் நாடு கேட்டுத்தான் ஆகவேண்டுமா? என்ன அட்டகாசம் இது
# எமக்கும்தான் தமிழ்சினிமாவினை கலைத்துவிட பெரும் கோரிக்கை உண்டு, நான் சொன்னாலும் இந்த நாடு கேட்டுத்தானே ஆகவேண்டும் , உங்கள் வீட்டில் குண்டு வெடித்திருந்தால் அந்த குற்றவாளிகளுக்காக சில பேர்"நாங்கள் சொன்னால் இந்ந் நாடு கேட்டுத்தான் ஆகவேண்டும்" என்றால் ஆதரிப்பீர்களா? நாடு என்ன உங்களுக்கு மட்டுமானதா?# ஒன்றுமட்டும் தெரிகின்றது, தன் சினிமா ஐரோப்பாவில் தமிழரிடையே வெற்றிபெற வேண்டும், லைக்கா முதல் ஐங்காரன் வரை ஈழகம்பெனிகள் தயாரிக்கவேண்டும் என்பதற்காக இந்த சினிமாக்காரர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை
# சஞ்சய்தத் தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்தால் ஜெயில், ஆனால் தமிழ் திரையுலகினர் புலிவால் பிடித்தால் ஒன்றுமே இல்லை, என்ன நாடு இது?
(இவரின் ரத்தமாதிரி அங்கிள் சைமனின் சோதனை கூடத்தில் பரிசோதிக்கபடுகின்றது, அதன் பின் இவர் தமிழரா இல்லையா என தெரியவரும்)
No comments:
Post a Comment