Tuesday, June 7, 2016

அது என்ன 7 தமிழர் விடுதலை?

அந்த நண்பர் சொன்னது சரியானது, ஜெயா முதல்வரான பின் இந்த மங்குணி சீமான் வைத்த முதல் கோரிக்கை என்ன? மதுக்கடை மூடலா? விவசாயமா? நீர் நிலை பாதுகாப்பா? கள்ளா? எது? இது ஒன்றுமில்லை மாறாக 7 தமிழர் விடுதலை.

அது என்ன 7 தமிழர் விடுதலை?

2 பேர் இந்தியர்கள், மதிமயக்கும் கும்பலால் சிக்கியவர்கள், நளினியும், பேரரிவாளனும்.


மீதி 5 பேர் அந்நியநாடான இலங்கையினையோ அல்லது சீமான் கடத்திவந்திருக்கும் தமிழீழம் எனும் அந்நிய நாட்டினர்கள், இந்த 5 பேரும் இங்கு திருப்பயணம் வந்தவர்களா?

அதுவும் சின்னசாந்தன் எனும் .......... எவ்வளவு பயங்கரமனாவன், அகதியாக பழகி பத்மநாபாவினை கொன்றவனும் அவனே, மரகதம் சந்திரசேகரை சந்தித்து லதா கண்ணன் மூலம் ராஜிவினை திருப்பெரும் புதூரில் நெருங்க திட்டமிட்டவனும் அவனே

இதோ ராஜிவுடன் செத்த 16 பேரின் நிலை என்ன? அந்த அபலைகளின் குடும்பத்தார் படும் பாடு என்ன? ஆனால் கொலைகார கும்பல் நளினிமுருகனின் மகள் லண்டனில் டாக்டருக்கு படிக்கும் மர்மம் என்ன?

பேரரிவாளன் எனும் அப்பாவியினை மட்டும் விடுவிக்கலாம், ஆனால் நளினி சம்பவ இடம் வரை சென்று ராஜிவ் சிதறும்வரை கண்டவள், அதுவும் நேர்ச்சை நிறைவேறிய மகிழ்ச்சியில் சிவராசனோடு திருப்பதி தரிசனம் வேறு, சீ

இந்த நளினியினையா விட சொல்கின்றீர்கள்?, விட்டவுடன் லண்டனில் சென்று மகளோடு வாழவா? இன்னொரு கும்பல் இன்னொரு தலைவனை கொலைசெய்து 25 வருடம் சிறையில் இருந்தபின் ராஜவாழ்வு கொடுப்பீர்களா?

ஜெயக்குமாரும், பயாசும் சிவராசனின் உளவு பிரிவில் இருந்தவர்கள், திருப்பெரும் புதூர் இல்லை என்றால் மயிலாடுதுறையில் சிதம்பரம், மணிசங்கர ஐயரோடு ராஜிவினை கொல்லவும், அல்லது கிருஷ்ணகிரியில் வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்த்துகொல்லவும் திட்டமிட்டவர்கள்.

பேரரிவாளன் நிச்சயம் பரிதாபத்துகுரியவன், கார் பேட்டரியும், பைக்கும் வாங்கி கொடுத்தது போலவே பேட்டரியும் கொடுத்தான், அவனுக்கு வெடிகுண்டும் தெரியாது, பெல்ட்டும் தெரியாது, ஆனால் பன்றியோடு சேர்ந்த கன்று

26 பேரில், மாற்றுவெடிகுண்டாக டெல்லியில் இருந்த ஆதிரையினை விட்டதே தவறு, சாக வந்தவளை ஏன் விட்டார்கள் என்றே தெரியவில்லை. இதில் இப்போது 7 பேர்தான் மீதி

இதில் 2 இந்தியர், 5 இலங்கையர் என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர 7 தமிழர் என்றால் நியாயமா? ஆட்டோ சங்கரும் தமிழந்தான் , தூக்கில் இடவில்லையா?

பேரரிவாளன் தவிர 6 பேரும் நிச்சயம் விட முடியாதவர்கள், அவர்கள் கொடுத்த கொலைபங்களிப்பு அவ்வளவு பயங்கரமானது.

ராஜிவ் கொலை மட்டுமல்ல, அதன் முன் நடந்த பத்மநாபா கொலையில் செத்த 14 பேர் என இவர்களால் செத்தவர்கள் கணக்கு ஏராளம் உண்டு.

இவர்களையும் விட்டுவிட்டால் கசாப், அப்சல் குரு, யாகூப் மேமனை தூக்கிலிட்டதற்கு என்ன அர்த்தம்?

அவர்களுக்கு ஒரு நீதி, இலங்கையருக்கு ஒரு நீதியா?

No comments:

Post a Comment