அங்கிள் சைமனை போலவே மகா அபத்தமாக பேசிதிரிபவர் திருமுருகன் காந்தி எனும் ஒரு நபர், அவரை பார்த்தாலே சீரியசான காமெடியன் என்பது தெரியும், அன்னார் ஒரு இடத்தில் மேதாவிதனமாக கேட்டார் " ஏன் இந்தியா எல்லா போராளிகுழுக்களுக்கும் பயிற்சிகொடுத்தது? ஒரே குழுவிற்கு கொடுத்தால் என்ன?"
அரசியல் உலகில் இதனைவிட அபத்தமான கேள்வி இருக்கமுடியாது, விபரம் அறிந்தவர்கள் அந்த மைக்கினாலே அவரை விரட்டி அடிப்பார்கள்.
காஷ்மீரில் பாகிஸ்தான் ஒரே குழு உருவாக்கமுடியாதா? ஆப்கனில் அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக உருவாக்கிய குழுக்கள் எத்தனை? இன்று சிரிய அதிபருக்கு எதிராக உண்டாக்கபட்ட குழுக்கள் எத்தனை ஏன்? அப்பொழுதுதான் எதிரி குழம்புவான், பன்முனை தாக்குதலில் சிக்குவான்
இப்படிபட்ட அடிப்படை தத்துவம் கூட தெரியாத அந்த திருமுருகன் தான், மே 17 என ஒரு இயக்கம் நடத்துகின்றாராம்
1970களிலிருது எத்தனையோ கலவரம் ஜூலை 26 கொடும்பு, ஆகஸ்20 வடமராட்சி, என பெரும் கலவர தேதிகள் இருந்தும் அன்னார் தேர்தெடுத்திருப்பது மே 17. ஏன்? (அதற்கு பின் இனி எந்த கலவரமும் அங்கு நடக்க வாய்பில்லை என்பதால் அன்னார் அதனை வைத்திருக்கலாம்.)வங்க கடலுக்கு மெழுகு பிடிப்பார், அடிக்கடி பைக்கில் ஏறி அவனை விடுதலை செய் என ரவுண்ட் வருவார், திடீரென டிவி ஷோக்களில் அபத்தமாக உளறுவார், ஒரு அர்த்தமும் இருக்காது, இப்படியாக ஏதாவது செய்துகொண்டிருப்பார்.
மே 17ல் செத்தது மட்டும்தான் தமிழர்கள், அதற்கு முன்பு பெரும் கலவரங்களில் செத்தவர்கள் எல்லாம் செவ்விந்தியர்கள், ஜூலை 23ல் இலங்கையில் கொல்லபட்டது மாயன்கள், ஜூன் 19ல் சென்னையில் கொல்லபட்ட பத்மநாபா எஸ்கிமோ இனம்
ஏப்ரல் 30ல் கொல்லபட்ட சபாரத்னம் ஜப்பானிய இனம். அதனால் அன்னார் மே 17ல் மட்டும் தொங்குவார்.
# எம்மை மிரட்டும் ஈழமக்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான், உங்கள் நாடு உங்கள் பிரச்சினை. நாங்கள் தெரியாமல் தலையிட்டு வெளிவந்துவிட்டோம், அந்த புலிகள் உங்களுக்கு தெய்வமாக இருந்துவிட்டே போகட்டும்
# ஆனால் எங்கள் பிரச்சினையினை நாங்கள் பார்த்துகொள்கின்றோம் என என்னிடம் சொல்வது போல தயவுசெய்து இந்த சீமானையும், இந்த திருமுருகன் போன்ற அபத்தங்களின் வாயினையும் மூட சொல்லுங்கள், உங்களுக்கு கோடி நிம்மதி கிட்டும்.
No comments:
Post a Comment