அவர்களை எல்லாம் விடுதலை செய்ய கோரி விரைவில் நாங்கள் ஏதாவது டாஸ்மாக் பாரில் இருந்து ஏதாவது தியேட்டர் வரை ஊர்வலம் சென்று போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கின்றோம்.
சிறையில் இருக்கும் அனைத்து தமிழர்களும் விடுதலை செய்யபடவேண்டும், தமிழர்கள் சிறையில் இருக்கவே கூடாது, என்ன பெரிய கொலை செய்திருந்தாலும் தமிழனை தண்டிக்க இந்த இந்திய சட்டங்களுக்கு என்ன அதிகாரம்? தமிழன் யார்? பனை தோன்றி கள் தோன்றா காலமுன்னே முன் தோன்றிய தேசிய இனம்.
அவன் எந்த நாட்டில் இருந்தாலும் இங்கு வந்து கொல்லலாம் குண்டு வைக்கலாம், அதற்காக பிடித்து ஜெயிலில் போட இந்த இந்தியாவிற்கு எவ்வளவு தைரியம்?
அப்படியே மம்பெட்டியான், வீரப்பன், ஆட்டோ சங்கர், அயோத்தி குப்பம் வீரமணி போன்ற தமிழர்களை கொன்றதற்கு சம்பந்தபட்டவர்கள் மன்னிப்பும் கோரவேண்டும், அவர்கள் நினைவாக காவல் நிலையம் கட்டப்படவேண்டும்.
இந்த தேசிய இனத்து எல்லா தமிழ் கைதிகளையும் விடுதலை செய்ய கோரி தமிழக மக்களிடம் ஆதரவு கோருகின்றோம், அப்படியே பின் உலகெல்லாம் உள்ள சிறைகளிலிருந்தும் தமிழனை மீட்போம், அவன் ஹெராயின் கடத்தி இருந்தாலும் சரி
இப்படிக்கு
எல்லா தமிழ் கைதிகளுக்கான விடுதலை கூட்டியக்கம்.
No comments:
Post a Comment