Saturday, June 4, 2016

என்ன நியாயம் கொடுப்பீர்கள்

2009ல் கொல்லபட்ட மக்களுக்கும், சரண்டைந்தும் கொல்லபட்ட நடேசன் போன்றோரின் மரணத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டாமா? அந்த சிங்களனை சர்வதேசம் தண்டிக்க நீ துணை நின்றால் அல்லவா தமிழன், துரோகி சொல், தண்டனை கொடுக்கவேண்டாமா என்றேல்லாம் சீறுகின்றார்கள்

சிங்களனால் கொல்லபட்ட தமிழருக்கும், சரண்டையும் போது செத்த புலிகளுக்கு நிச்சயம் நியாயம் வேண்டும், கேட்கலாம், அதே நேரம் அநியாயமாக கொல்லபட்ட பத்மநாபாவிற்கும், சபாரத்தினத்திற்கும் என்ன நியாயம் சொல்வீர்கள்?

அமிர்தலிங்கம் முதலான 20க்கு மேற்பட்ட தமிழ் தலைவர்களின் மரணத்திற்கும், ராஜினி முதலான சிந்தனையாளர்களின் கொலைக்கும் யாரிடம் நியாயம் கேட்க முடியும்?


புலிகளிடம் சரண்டைந்த மாற்றியக்க போராளிகள் 3 ஆயிரம்பேர் கொல்லபட்டத்தற்கு யாரிடம் நியாயம் கேட்பீர்கள்? யாரை தண்டீப்பீர்கள்?

காத்தன்குடியிலும், எறாவூரிலும் கொல்லபட்ட மக்களுக்கு என்ன நியாயம் கிடைத்தது? கந்தன் கருணை இல்லத்தில் கொடூரமாக கொல்லபட்ட மற்ற இயக்கத்தாருக்கும் என்ன நியாயம் கொடுப்பிர்கள்?

No comments:

Post a Comment