Tuesday, October 4, 2016

கலைஞர் என்ன சொல்வார் தெரியுமா?




Image may contain: 4 people


கலைஞர் டிவி பணபரிமாற்றம் தவிர வேறு எதனையும் மறக்காத வித்தியாசமான, மருத்துவதுறைக்கே சவால்விடும் மர்ம நோயான விசித்திர‌ அல்மைசரால் பாதிக்கபட்ட தயாளு அம்மாள் கொலு பூஜைக்கு வந்தபொழுது எடுத்தபடம் இது.


ஆனால் இதுபற்றி கலைஞரிடம் கேட்டால் என்ன சொல்வார் தெரியுமா?


"உடன்பிறப்பே, பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கபட்டு, பெரியார் வழியில் அண்ணா முன்பு திருகுறள் ஒலிக்க வாழ்வில் இணைந்தவர்கள் நாங்கள், அப்படியே பெரியார் கண்ட பகுத்தறிவு குடும்பமாக ஜொலித்தோம், பலரை ஜொலிக்க வைத்தோம்





ஆனால் மாய நோய் தாக்கி சமீபகாலமாக அவர் படும் அவஸ்தைகள் ஏராளம், இதனைத்தான் நம்மை அழிக்க , நம் கழகத்தை அழைக்க தொடுக்கபட்ட பொய்வழக்கில் டெல்லி நீதிபதிகளிடம் மருத்துவ குழுவால் நிரூபித்தோம்.

ஆனால் வீணர் பலர், விரோதிகள் பலர் அது பொய் என்றார்கள், அவர்களுக்கென்ன தாய் கூட பொய் என சொல்லும் சந்தர்ப்பவாதிகள் அவர்கள், நாம் அப்படிபட்டவர்களா?

இதோ பார் உடன்பிறப்பே, பகுத்தறிவு கொள்கை மறந்து, கணவனின் வழிமறந்து, மதி மறந்து அவர் என்ன செய்கிறார் என பார்த்தாயா? இதுதான் அந்த வியாதி, என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என தன்னை அறியாமலே செய்யும் ஒரு வியாதி,

தான் பகுத்தறிவாளர் என்பதை மறந்து, பகுத்தறிவு கணவனுக்கு மனைவியாகவும், வருங்கால பகுத்தறிவு முதல்வருக்கு தாயாகவும் இருக்கும் நிலையினையும் மறந்து அவர் செய்யும் இக்காரியங்களே அவரை தாக்கி இருக்கும் கொடிய்நோய்க்கு சாட்சி என்பதை உணர்ந்துகோள்.

உடன்பிறப்பே, கலைஞர் சொல்வதெல்லாம் பொய் என உலகெல்லாம் முரசு கொட்டும் அந்த வீணர்களுக்கு எதிராக முரசு கொட்டி இதனை உரக்க சொல்

பத்மாவதிக்கு பின் என்னிடம் பகுத்தறிவு கொள்கைகளை பெற்ற ஒரு மாதரசியினை, பகுத்தறிவு பெண்ணாகவே வாழ்ந்த அவரை இப்படி மாற்றிவிட்ட அந்த கொடிய நோயின் வீரியத்தினை உலகெல்லாம் சொல் உடன்பிறப்பே.

அது டெல்லியில் இருக்கும் பார்ப்பண காதுகளுக்கு எட்டட்டும், பார்ப்பண முகமூடி கிழியட்டும், கிழியட்டும், கிழியட்டும்..."

நிச்சயம் இப்படித்தான் சொல்வார்,

பந்து எப்படி விழுந்தாலும் தனக்கு வேண்டிய திசையில் செலுத்தும் அபார அரசியல் கிரிக்கெட் பேட்ஸ்மேன் அவர்.














No comments:

Post a Comment