தமிழக ஊடகங்களும், காவல்துறையும் மறைக்கலாம், அப்பல்லோவில் இருந்து காற்று கசிவதையும் வடிகட்டலாம், ஆனால் எத்தனை நாளைக்கு முடியும்?
இதோ டாக்டர் ரிச்சர்டு லண்டனிலிருந்து வந்திருக்கின்றார் என அப்பல்லோ நிர்வாகமே நோட்டீஸ் அடித்து ஒட்டியிருக்கின்றது.
விரைவில் பிபிஸி, சிஎன்என், அல்ஜசீரா போன்ற சர்வதேச மீடியாக்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டால் இவர்களால் தடுக்க முடியுமா? ரிச்சர்டின் உதவியாளரை வளைத்தால் அவ்வளவுதான்.
அதிலும் அவர்கள் எங்கெல்லாமோ ஊடுருவகூடியவர்கள் என்பதில் அசாஞ்சே முதல் ஸ்னோர்டன் வரை உலகமே அறிந்தது
எனக்கென்னமோ வெளிநாட்டுக்காரன் முந்தி செய்தி தருவான் என்றே தோன்றுகின்றது
அவனாவது தரட்டும்
ஆனால் அது முதல்வர் நலம்பெற்று வருகின்றார் எனும் நல்ல செய்தியாக இருக்கட்டும்,
பல விஷயங்களில் அவரின் அணுகுமுறைகள் பாராட்டதக்கவை,
கந்துவட்டி, ரவுடி கும்பல் ஒழிப்பு. மதுகடை உரிமையாளர்கள் அட்டகாசத்தை ஒடுக்குதல் என ஏராளம். வெள்ளையானைக்கு இடும் தீனிபோல வெட்டி அரசு பணியாளர்கள் சம்பளத்தில், பணியில் கைவைத்தல் என ஏராளமான துணிச்சலான நடவடிக்கைக்கு சொந்தக்காரர் அவர்.
பிரபாகரனை இழுத்து வந்து தூக்கில் போடவேண்டும் என மிக துணிச்சலாக சொன்ன தமிழச்சி அவர், கலைஞர் அது, இது ஹஹிஹிஹிஹ், ம்ம்ம்ம் என இழுத்துகொண்டிருக்கும் அம்மாதிரி அறிக்கைகளில் நெற்றியில் அடித்தாற்போல் சொன்ன மிக மிக துணிச்சலின் சொந்தக்காரி அவர்
அந்நாளில் அப்படி ஒரு துணிச்சல் ராஜிவ் குடுபத்தினருக்கு கூட இல்லை, காங்கிரசாருக்கு அறவே இல்லை. ஆனால் ஜெயலலிதாவிற்கு இருந்தது
இன்னும் பாராட்டவேண்டியது குறிப்பாக தேசபற்று,
அதில் மிக உறுதியாக இருக்கும் முதல்வர் அவர். வடகிழக்கு மாநிலம் பற்றி இந்திராவுடன் மல்லுகட்டியது, புலிகள் பற்றிய பார்வௌ முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை அவருடைய அறிக்கைகள் நாட்டுபற்றையே வலியுறுத்தின
விரைவில் வந்துவிடுங்கள் முதல்வரே, பல கடமைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
விடாது பிரார்தித்து கொண்டே இருக்கின்றோம்.
No comments:
Post a Comment