Sunday, October 2, 2016

கள்ளிகுளம் துபாய் லாலா ...

கள்ளிகுளத்து நண்பர்கள் பலர் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள், இப்படி எல்லாம் சொன்னது யார் என்கின்றார்கள்?

துபாய் லாலா என்றவுடன் ஓஓ அவனா? என ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் பேச்சினை தொடர்ந்தார்கள்.

பலர் சொன்னார்கள், அந்த குடும்பத்திற்கென்று ஒரு நல்ல பெயர் உள்ளது, ஆனால் கல்லூரி கட்டியது நாங்கள், தாமிரபரணி கொண்டுவந்தது நாங்கள் என இப்படியா உலகெல்லாம் சொல்வார்கள்?, இது நிச்சயம் அவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்றார்கள்.

இப்படியாக கள்ளிகுளத்தில் துபாய் லாலாவால் சில மவுன சர்ச்சைகள் வலுப்பதாக சொல்கின்றார்கள். காரணம் துபாய் லாலாவிற்கு கள்ளிகுளம் என்றொரு ஊர் உண்டு என்பதனை தவிர வேறு ஏதும் தெரியாது என்பது உலகறிந்தது


ஆக யாரோ லாலாவிடம் பெருமையாக அவிழ்த்துவிட்டிருக்கலாம் என்கிறார் இன்னொருவர்.

இது தேர்தலில் சில சலசலப்பினை ஏற்படுத்தியாயிற்று

எப்படியோ துபாய்க்கு வந்து "அவர்கள்" லாலாவினை கண்டிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சம்பந்தமே இல்லாமல் எழுதி தேரினை இழுத்து தெருவில் விடுதல் என்றால் என்ன என்பது இதுதான்

லாலா இனி என் முப்பாட்டன் ஊர் கிருஷ்னன் பிறந்த மதுரா பக்கம் என எழுதாமல் தப்புவது சாத்தியமில்லை

காரணம் கேட்ட நண்பர்களில் பெரும்பான்மையினர் துபாய் வாழ் கள்ளிகுளம் வாசிகள்.

அவர்களுக்கும் துபாயில் வெள்ளிகிழமை விடுமுறையே....

No comments:

Post a Comment