வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதா சரியான தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: விஜயகாந்த்
எப்படி இருக்கின்றது இவரின் கோரிக்கை?
உடல்நலம் சிக்கலாகி அவரே மருத்துவமனையில் இருக்கின்றார், யாரும் சந்தித்த படம் கூட வராத நிலையில் முதல்வரே எழுந்து அறிக்கை விடவேண்டும் என்ற இவரின் கோரிக்கை என்ன ரகம்?
தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலையிலா அவர் இருக்கின்றார்?
அமைச்சர்களை கேட்டாலோ அல்லது முன்னாள் மானேஜர் பண்ருட்டி ராமச்சந்திரனை ராமச்சந்திரனை மறித்து கேட்டாலோ ஒரு அர்த்தமுண்டு, ஆனால் ஜெயலலிதாதான் பேசவேண்டுமென்றால் எப்படி?
மனிதர் ஒருமாதிரியாகத்தான் பேசிக்கொண்டிருக்கின்றாரா?, அல்லது அமைச்சர்கள் அறிக்கையினை நம்பி தொலைத்துவிட்டாரா என தெரியவில்லை
நல்ல வேளையாக எம்.எல்.ஏவாக இவர் இல்லை, இருந்திருந்தால் இப்பொழுது சென்னை கோட்டைக்கு சென்று முதல்வர் நாற்காலியிடம் கேள்விகேட்டு கொண்டிருப்பார்
எதற்கும் அப்பல்லோவின் அடுத்த ஒரு அறையினை காலியாக வைத்திருப்பது நல்லது.
No comments:
Post a Comment