இந்திய ராணுவத்திற்கு கலைஞர் பாராட்டு, பெருமிதம் அடைவதாக அறிக்கை
இதே கலைஞர்தான் எமது பெருமை மிகு ராணுவம் இலங்கையில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டபொழுது, அதனை கடுமையாக சாடி அது திரும்ப வரவேண்டும் என விபிசிங்கிடம் அழுத்தம் கொடுத்தவர்
அதற்குமேலும் எமது ராணுவம், இலங்கை மீண்டு சென்னை வந்தபொழுது அதனை முதலமைச்சராக வரவேற்கமாட்டேன் என புறக்கணித்து சிஐடி காலணி வீட்டில் அறிக்கை விட்டுகொண்டிருந்தவர்.
இந்தியராணுவம் பாகிஸ்தானில் புகுந்தால் பாராட்டுவார், இலங்கையில் புகுந்தால் ஒப்பாரி வைப்பார். எப்படிபட்ட தேசபற்று பார்த்தீர்களா?
எமது ராணுவத்திற்கு நடந்த மோசமான நிகழ்வு அது, இந்தியாவின் மாநில முதலமைச்சரிடம் அப்படி ஒரு அவமரியாதையினை அது எதிர்பார்க்கவில்லை, அப்படி அவமானபடுத்தியவர் இன்று அறிக்கைவிடுகின்றாராம்.
எமது ராணுவம் அன்றும் இன்றும் ஒரே நோக்கமாக தேசநலனிற்காக பாடுபகின்றது, அரசியல்வாதிகள்தான் நொடிக்கொரு நடிப்பு நடித்துகொண்டிருக்கின்றார்கள்
அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு இப்பாராட்டை அவர் சொல்லியிருந்தால் மனிதர் கொஞ்சம் வருந்தியிருகின்றார் என கொள்ளலாம்,
அவராவது பகிரங்கமாக வருந்துவதாவது??
நான் முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது : சீமான்
இதனை அப்பல்லோ மருத்துவமனை வாசலில் வைத்து சொல்லிவிட்டு வாருங்கள் அங்கிள், அப்புறம் பார்க்கலாம்.
கீழடியில் கண்டெடுக்கபட்ட தமிழனின் நாகரீகத்தை பற்றி தமிழனாக பெருமை அடைகிறேன், கீழடியினை சுற்றிபாத்தபின் சீமான் அறிக்கை
அங்கிள், இந்திய அரசு தமிழர் விரோதமானது, அது தமிழரை அடிமையாகவே வைத்திருக்கும், தமிழர் பெருமை வெளிவரவிடாது, தமிழன் முதல்வரானலே தமிழன் பெருமை மீட்கபடும் என்றேல்லாம் வசனம் பேசியவர் என்பது உலகறிந்தது.
சரி இப்பொழுது கீழடியில் தொல்பொருள் ஆய்வு செய்தது யார்? இவரா. அல்லது ஈழபுலிகளின் தொல்பொருள் ஆய்வுகுழு வந்து தோண்டி பெருமை சொன்னதா?
இந்திய அரசுதானே ஆய்வு நடத்திற்று? அப்படியானால் மத்திய அரசுக்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா? சொல்லமாட்டார், தந்திரமாக தமிழன், முப்பாட்டன் என சொல்லிகொண்டே இருப்பார், யாரும் கேட்கவும் மாட்டார்கள்
சரி இதனிலாவது மத்திய அரசு தமிழர் நாகரீகத்தை வெளிகொணந்ததை பாரீர் என தமிழகத்தில் கட்சியினை பலபடுத்தவேண்டிய தமிழிசையும், பொன்னாரும் சத்தமே இல்லை, தசராவில் மாறுவேடத்தில் சென்றிருக்கலாம்
போகட்டும், அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களே ஒரு மாதிரியாக அலைகின்றார்கள்.
கடலுள் மூழ்கிய பூம்புகாரில் இன்னும் ஏராளமான தமிழர் நாகரீகம் மூழ்கி கிடக்கின்றது, அதனை எல்லாம் கடலில் மூழ்கி சென்று பார்த்து பெருமை அடையும் திட்டம் அங்கிள் சைமனிடம் இருக்கலாம்
ஆர்வகோளாறில் "நல்லா இருந்து தமிழன் நாகரீகத்தை பார்த்துட்டு மெதுவா வாங்கண்ணே.." என தம்பிகள் கல்லை கட்டி கடலுக்குள் தள்ளாதவரை நல்லது
No comments:
Post a Comment