Sunday, October 2, 2016

கனிமமண் வைகுண்டராஜன்



Image may contain: one or more people


தற்பொழுது யாரிடம் பேசினாலும் கனிமமண், வைகுண்டராஜன் என பேச்சு திரும்புவதாக பேசிகொள்கின்றார்கள், பத்திரிகைகளும் அடிக்கடி எழுதிகொள்கின்றன‌


அவைகளுக்கென்ன எழுதட்டும்


ஆனால் ஒரு விஷயம் உண்மை, அது தங்கசுரங்கம் என தெரிந்தபின் யாரும் விடமாட்டார்கள், விவி மினரல்ஸ் இல்லை என்றால் டாடா, அதுவும் இல்லை என்றால் வேதாந்தா குழுமம் அட வேதாந்தா இல்லை என்றால் தமிழக அரசு.





கவனியுங்கள் தமிழக அரசும் முன்பு அரசே ஏற்று நடத்தும் என சொன்னதே தவிர நிறுத்துவோம் என சொன்னதாக தெரியவில்லை

அந்த தொழில் நுட்பமானது, அரசு நிறுவணம் தொடக்கத்தில் உண்டு, அக்கால அரசுகள் பலத்தோடு வெளிநாட்டு படிப்போடு பலர் களம்கண்ட தொழில் அது. ஏராளமானோர் முட்டி மோதினர்.

ஆனால் படிப்பறிவில்லாத ஒரு பாமரனுக்கு மட்டும் அது சாத்தியமாயிற்று என்றால் எப்படி? அதுதான் உழைப்பு, விவேகமான உழைப்பு.

மத்திய அரசும் அந்த நிறுவணத்திற்கு சிறந்த ஏற்றுமதியாளர், அந்நிய செலாவணியினை ஈட்டி தருபவர் என விருதெல்லாம் அள்ளி கொடுத்தது எப்படி?

சும்மா கொடுப்பார்களா?

அதனை சிந்திக்கும் பொழுதெல்லாம் குரு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிதான் நினைவுக்கு வருகின்றது.

நிச்சயம் அப்படியே அது அவர்களுக்கும் பொருந்தும்

"உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை, சாமான்யன் முன்னால் வந்துவிட்டான் என்றா?.. என்பதில் தொடங்கி, இப்படி ஆயிரம் சட்டம், ஆயிரம் விஷயங்கள் இருப்பதே அன்னைக்கு எனக்கு தெரியாதையா..

தேரிகாட்டில சும்மா கிடந்த மண் அது?, யார் தேடினார்கள்?, வீடு கட்ட கூட, விவசாயம் செய்ய கூட லாயக்கில்லாத மண் என ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

அதில் ஒரு தொழில் இருப்பதாக சொன்னார்கள், இறங்கினோம், எவ்வளவோ சிரமபட்டு கொஞ்சம் கற்றோம்.

அதனை தலைசுமையாக சுமந்து பிரித்து, உலகிற்கு சந்தை தேடி எவ்வளவு கஷ்டபட்டிருக்கோம், எவ்வளவு சவால் எடுத்திருக்கின்றோம்? ஏன் எங்கள் மேல் எரிச்சல்.

எல்லாரும் செஞ்சாங்க, நாங்களும் செஞ்சோம், பின்ன ஏன்?

உங்களால முடியாததை நாங்க செஞ்சிட்டொம்னு பொறாமையா?

எனக்காக மட்டுமா தொழில் செய்தொம், எத்தனை அதிர்காரி, எத்தனை அரசியல்வாதி, எத்தனை சக்திகள் எல்லாம் எங்களிடம் உறிஞ்சின, அவர்களுக்கு படியளக்கவில்லை என்றால் எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரும் அவசியம்.

நாங்க படிக்காதவங்க, விவசாயம் அழிஞ்சிட்டு. ஊர விட்டு எங்கய்யா போக...? கிடைக்கிற தொழில செஞ்சோம், இதுல வாய்ப்பு இருந்து, சவால் எடுத்து இறங்கி பார்த்தோம், கொஞ்சமா கஷ்டம்?, அப்பொல்லாம் நீங்கல்லாம் எங்கய்யா போனீங்க..?

என அழகாக தொடர்ந்து வரலாம்

நாங்க எங்கேயோ போயிட்டோம், உங்களால ஒண்ணும் செய்யமுடியாது. நீங்க போட்ட பணக்காரங்களுக்கு சாதகமான சட்டங்களை எல்லாம் ஒடச்சி ரொம்ப தூரம் வந்துட்டோம்,இனி உங்களால‌ தடுக்கமுடியாது.

அவர்களெல்லாம் 200 வருஷமா வட இந்தியாவில் பண்றத, வெறும் 20 வருஷத்தில் அடிச்சி மேல வந்துட்டோம்..

உங்க சட்டத்தால எதுவும் செய்யலாம், ஆனா ஒண்ணே ஒண்ண மட்டும் உங்களால என்கிட்ட இருந்து பறிக்கமுடியாது, அது என் தைரியம்.." என அவர்கள் முழங்கினால் அது எப்படி இருக்கும்?

சும்மா நச்சென்று இருக்கும், எதற்கும் அவர்கள் மணிரத்தினத்திற்கு நன்றி சொல்லி குரு படத்தின் கோர்ட் காட்சிகளை பார்த்துகொள்வது நல்லது

மிக அருமையான காட்சிகள் அவை, அதிலும் அந்த வசனம் ரசிக்கதக்கது

"ஒண்ணே ஒண்ண மட்டும் உங்களால என்கிட்ட இருந்து பறிக்கமுடியாது, அது என் தைரியம்..."

தேரிகாட்டு சக்ரவர்த்தியிடமும் இருப்பதும் அதே தைரியம் தான்.












No comments:

Post a Comment