Wednesday, June 1, 2016

இனியாவது தெளிவாக சொல்லுங்கள்

அடேய் அங்கிள் பாய்ஸ், "இன விடுதலை இன விடுதலை" என் ஒப்பாரி வைக்கின்றீர்களே. அப்படி எங்கு அடிமைபட்டு கிடக்கின்றீர்கள்? தெளிவாக சொல்லுங்கள். இங்கு கட்சியும் நடத்துகின்றீர்கள், டெபாசிட்டும் இழக்கின்றீர்கள். அவ்வளவு உரிமை இருக்கும் இடத்தில் என்ன அடிமைத்தனம் கண்டீர்கள்?

பொய்களை அள்ளி விடுகின்றீர்கள், கண்டதையும் எழுதுகின்றீர்கள், கலவரம் தூண்டும் விதத்தில் பேசுகின்றீர்கள், இவ்வளவு சுதந்திரமான நாட்டில் என்ன அடிமைதனம் கண்டீர்கள்?

உண்மையில் அடிமைதனம் என்றால் என்ன என உங்களுக்கே தெரியவில்லை, ஆட்சி கையில் கிடைக்காததன் பெயர் அடிமைத்தனமா? அட பதர்களா?


ஈழ விடுதலை என்றால் இலங்கைக்கு சென்று கத்துங்கள், இங்கே இருந்துகொண்டு இன விடுதலை என சொல்வதாக இருந்தால், "தனி தமிழ்நாடு" என தெளிவாக கேளுங்கள் ஆனால் நிச்சயம் அப்படி கேட்க மாட்டீர்கள்,கேட்டால் "ஜெயில் விடுதலை" என நீதிமன்றத்தில் குரலேழுப்புவீர்கள் என்பது உங்களுக்கே தெரியும்

இனியாவது தெளிவாக சொல்லுங்கள்

No comments:

Post a Comment