Wednesday, June 1, 2016

டக்லஸ் தேவாநந்தா




பிரபாகரனுடனிருந்து அவருக்கு துரோகம் செய்த டக்ளஸ் தேவனந்தா போல நீ ஒரு துரோகி என்கிறான் ஒருவன், அட பரிதாபத்துகுரியவனே, டக்ளஸ் என்றைக்கு பிரபாகரனோடு இருந்தார்? உன் அறிவு இவ்வளவுதானா?

டக்ளஸ் ஒரு கம்யூனிஸ்ட், பதமநாபா குழுவின் முக்கிய புள்ளி. லெபானானில் பாலஸ்தீன போராளிகளிடம் பயிற்சிபெற்றார் என்ற செய்தியும் உண்டு, ஈழ போராட்ட வரலாற்றில் முதன் முதலாக ஷெல் குண்டு சொந்தமாக செய்து சிங்கள படையினரை திணறடித்த பெருமை அவருக்கே உண்டு,Stanley Rajan's photo.ஆலன் தம்பதி எனும் அமெரிக்கர்களை உளவாளிகள் என கடத்திய விஷயத்தில் இவர்தான் அமெரிக்க அதிகாரிகளால் குறிவைக்கபட்டார், ஆனால் தப்பினார். கடும் போக்குடைய இவர் பதம்நாபாவின் நிதானமான போராட்டத்தில் இருந்து கொஞ்சகாலம் வேறுபட்டபொழுதுதான் புலிகள் எல்லா இயக்கத்தையும் தடை செய்து தன்னைவிட வலுவானவர்களை எல்லாம் அழித்தனர்.


(சென்னை சூளைமேட்டில் ஒருவரை இவர் சுட்டுகொன்றார் என்ற வழக்கும் உண்டு, அங்கு பலமுறை புலிகள் இவர் மீது கொலைமுயற்சியில் ஈடுபட்டதும் உண்டு, அப்படி ஒருமுறை ஏற்பட்ட சர்ச்சையில்தான் இவரின் தவறுதலான சூட்டில் ஒருவர் உயிரழந்தார். அந்த‌ கொலைக்கு தண்டனை இந்திய சட்டபடி கொடுக்கத்தான் வேண்டும். அதே சூளைமேட்டில்தான் பத்மநாபாவும் பின் புலிகளால் கொல்லபட்டார், அந்த புலிகளையும் பிடித்து தண்டிக்கவேண்டும் அல்லவா? தற்காப்பிற்காக சுட்டேன் என்ற டக்ளசின் வார்த்தைகளில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம்)

 

அதன் பின் புலிகள் தீவிரமாக கொல்ல தேட இவர் சிங்களனிடம் அடைக்கலமானார். எத்தனையோ சிங்கள ராணுவ வீரர்களை கொன்றவர்தான், சிங்கள அரசுக்கு பெரும் சிம்ம சொப்பணமாக இருந்தவர்தான், ஆனால் பாருங்கள் சிங்களன் மன்னித்து இன்றுவரை விட்டுவைத்திருக்கின்றான் அதுவும் அமைச்சராக. கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது

இது புலிகளிடம் சாத்தியமா என்றால்? மாத்தையா கதை ஒன்றே போதும்.

கொழும்பிலும் கிட்டதட்ட 10 தற்கொலை தாக்குதலில் இருந்து தப்பினார் டக்ளஸ், அவருக்கு ஆயுள் கெட்டி. புலிகள் சிங்களனிடம் இவர் அடைக்கலமானதால் துரோகி என்றனர், அதே சிங்களனுடன் இணைந்து புலிகள் செய்த காரியங்களுக்கு பெயர் "ராஜதந்திரம்".

பிரபாகரனை விட அறிவான, வீரமான பெரும் போராளிகள் எல்லாம் ஈழத்தில் இருந்தனர், அவர்களை எல்லாம் அழித்துவிட்டு புலிகள் சொன்ன "அகற்றபட்ட தடை கற்கள்" என்னும் சொல்தான், ஈழப்போராட்டத்தையே உலகிலிருந்து அகற்றிவிட்டது.

கவனியுங்கள் வரதராஜ பெருமாளும் தமிழர், டக்ளசும் தமிழர், இருவருமே போராளிகள். இவர்களை கொல்ல தேடியதும் ஈழ போராளிகள் என சொன்ன புலிகள். ஆனால் இவர்களை காப்பாற்றியது அந்நிய இனமான இந்தியாவும், எதிராளியான சிங்களனும்.

இன்னும் ஆழமாக பார்த்தால் பல இடங்களில் புலிகளிடமிருந்து தமிழர்கள் உயிரினை மீட்ட விஷயங்களில் சிங்களரே முண்ணனியில் இருக்கின்றனர், ஏராளமான சாட்சிகளும் சம்வங்களும் உண்டு.













No comments:

Post a Comment