Wednesday, June 1, 2016

தம்பிக்கு கடிதம்

2009ம் ஆண்டு மார்ச் 15ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் ‘அன்புள்ள தம்பி மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மக்களுடைய சாபம் உம்மை நிம்மதியாக வாழவிடாது என்பது மட்டுமல்ல உங்களையும் உங்கள் சந்ததியினரையும் பல தலைமுறைகளுக்கு பின்தொடரும் என்றும்

உங்கள் ஆதரவாளர்களைக்கூட விட்டுவைக்காதென்றும் கூறி தயவுசெய்து உங்கள் மனதை மாற்றி இப்போதாவது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிக்குமாறும் மக்கள் பசியாலும், தாகத்தாலும் மரணிக்க ஆரம்பித்துவிட்டார்கள் எனவும் இந்தப் பொறுப்பை ஏற்று செயற்படுமாறும் கேட்டிருந்தேன்.


புலிகள் அதற்கு செவிசாய்க்கவில்லை, போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் மக்களை விடமுடியும் என புலிதலமை சொன்னது, மற்ற தமிழ் அமைப்புகளும் புலிகளை கண்டிக்கவில்லை, இந்த கொடும் பிடிவாதமே ஏராளமான மக்கள் பலியாக காரணம், இந்த கொடும் சாவு நிச்சயம் தவிர்க்கபட்டிருக்க கூடியது" - ஆனந்த சங்கரி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

# அங்கிருக்கும் தமிழர்களுக்கு தெரிந்திருக்கின்றது யார் இந்த பேரழிவிற்கு காரணம் என்று, ஆனால் இங்கே சொந்த ஊரை தாண்டி இருக்காத தமிழக பிரபாகர‌ அடிப்பொடிகளுக்கு மட்டும் இப்படி தெரிகின்றதாம் அதாவது முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணம் சோனியா, கலைஞர்

# கிளிநொச்சியிலிருந்து மக்களளை திரட்டி முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று சாககொடுத்தவன் போராளியாம், அதனை கண்டித்து சொல்பவனெல்லாம் துரோகியாம். எந்த போராளி இயக்கமாவது மொத்த தளபதிகளோடு இப்படி மொத்தமாக அழியுமா? அப்படி அறிவுகெட்டு மொத்தமாக அழிந்த இயக்கம் இது ஒன்றுதான்

# காரணம் அதன் நோக்கம் ஈழவிடுதலை அல்ல, , மாறாக பிரபாகரன் உயிரை காப்பது மட்டுமே, இதனைத்தான் ராஜிவ் அன்றே சொன்னார் "ஒரு தனிபட்ட தலைவரின் உயிர்பயமே இப்பொழுது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது, ஆயுதமின்றி அவரால் வாழமுடியாது, தனக்கான பாதுகாப்பிற்காக மட்டும் ஒரு நாட்டை உருவாக்கும் அவரின் முயற்சி வெற்றிபெறாது"

No comments:

Post a Comment