Wednesday, June 1, 2016

நார்வே அமைதி ஒப்பந்தம்

*பாலசிங்கம் நார்வே அமைதி ஒப்பந்தம் பற்றி சொன்னதும், அவர்கள் நமது ஆயுதத்தை பிடுங்க முயற்சி செய்கின்றார்கள் என முகத்தில அடித்தது போல சொன்னார் பிரபாகரன்,

*பேச்சுவார்த்தைக்கு நடுவராக இந்தியாவினை அழைக்க பாலசிங்கத்தை வற்புறுத்தினார் பிரபாகரன், அவர்கள் வரமாட்டார்கள் அது நடக்காது என சொன்ன பாலசிங்கத்தை அதன் பின் பிரபாகரன் ஒதுக்க தொடங்கினார், கலங்கிய கண்களுடன் சென்ற பாலசிங்கம் அதன் பின் பிரபாகரனை சந்திக்கவே இல்லை

* இவ்வளவு நடந்தும் இந்தியா எப்படி பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்யவரும் என அவர் நம்பினார் என்றும் தெரியவில்லை,


*தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக் கையை விட்டு இழப்பதற்குத் தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை.

*விடுதலைப் புலிகளின் நிதித்துறையினர் தமது வரி வசூலிப்பு நடைமுறையைச் செயற்படுத்திய விதம் மக்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியது.

*கட்டாய ஆள்சேர்ப்பும் இயக்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பினை கொண்டு வந்தது , இயக்கத்திற்குத் தேவையாக இருந்ததெல்லாம் ஆயுதங்களை இயக்குவதற்குப் பயிற்சியளிக்கப்பட்ட ஒரு மனித உருவம் மட்டுமே என்றளவிற்கு பிரபாகரன் மாறி இருந்தார்

*சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திரத்தின் நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தி, தமிழர்களுக்கு உறுதியான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நிலையை நோக்கி முன்னேறிச் செல்ல முடியாமல் திணறத் தொடங்கினார்.வாழ்வாதாரங்கள் எல்லாவற்றையும் இழந்துபோன நிலையிலும், போராட்டத்தை நம்பியிருந்த மக்களுக்காகத் தனது பிடிவாத குணத்திலிருந்து வெளியே வரவேண்டியவராகத் தலைவர் பிரபாகரன் இருந்தார்.

*ஆனால் அந்த நேரத்தில் அவர் அதைச் செய்வதற்கான துணிச்சலற்றவராகவே இருந்தார்.

*புலிகள் செய்த கதிர்காமர் கொலையினை பிரபாகரன் பகடியாய் கொண்டாடியதும் , அமெரிக்கா முதலான நாடுகள் அதற்காய் தடைவிதித்ததும் பெரும் ஆபத்து, இது நிச்சயம் நம்மை அழிக்கும் என அவரிடம் கேட்க சென்றால், இப்படி அர்த்தமே இல்லாமல் சொன்னார்

"இந்தப் பெரிய நாடுகள் எல்லாம் தடைசெய்கிற அளவுக்குச் சர்வதேச அளவில இராணுவ பலம் பொருந்திய இயக்கமாக நாம் வளர்திருக்கின்றோம் என சந்தோசபடுங்கள்" எப்படி பட்ட அபத்தம் இது?

இயக்கத்தின் முடிவு அன்றே தெரிந்தது, உச்சமாக சொன்னார், ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாம் அவர் அமைதி பேசுவார், மகிந்தாவிற்கு வாக்களித்தால் சண்டை வரும், அடிக்கலாம்.

*அமெரிக்க சமாதான பேச்சையும், ஆயுதங்களை பிடுங்க சதி என புறந்தள்ளிய பிரபாகரன் இறுதியாக சொன்னார், "இனி யுத்தம் இலங்கையோடு அல்ல, சர்வதேசத்தோடு, அதில் வென்று நம் வீரத்தை நிரூபிப்போம்", அன்றே தெரிந்தது பெரும் பழுகுழியில் தமிழனத்தை இவர் தள்ளபோகின்றார் என்று

# இவை எல்லாம் 30 ஆண்டுகளாக புலிகளோடு இருந்த போராளி தமிழினியின் வார்த்தைகள் , அவருக்கு தெரியாததா? முகநூலில் புலிகளை பற்றி மல்லுகட்டும் இந்த அடிமைகளுக்கு தெரிந்துவிட்டது,

# ஆச்சர்யமாக 1987ல், ராஜிவ் சொன்ன அதே வார்த்தைகளை, தமிழினியும் சொல்லி இருகின்றார், அதே வரிகள் தான் "தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக் கையை விட்டு இழப்பதற்குத் தலைவர் கிஞ்சித்தும் தயாராக இருக்கவில்லை."

No comments:

Post a Comment