பழனிபாபா ராஜிவ்காந்தி தன் இடுப்பில் கட்டி இருந்த பாதுகாப்பு குண்டால்தான் செத்தார் என சொன்னார், அது உண்மையாக இருக்கலாம் வீணாக எம் தலைவர் மீது பழிசொல்லாதே என்கிறது ஒன்று
பழனிபாபா வெடிகுண்டு நுட்பம் அறிந்தவரா இல்லையா என்பது நமக்கு தெரியாது, ஆனால் அவர் வாதப்படி பார்த்தாலும் ராஜிவ்காந்தி ஹேண்ட் கிரானைடு எனப்படும் கையேரி குண்டினை வைத்திருக்கலாம் என ஒப்புகொண்டாலும்
சம்பவ இடத்தில் வெடித்தது ஆர்டிஎக்ஸ் எனப்படும் ராணுவ வெடிபொருள், அதனை கையேறிகுண்டில் வைக்கமாட்டார்கள், இன்னொன்று ஒரு கையேரி குண்டு வெடித்தா 18 பேர் சாவார்கள்? 20 பேர் காயமடைவார்கள்?
அந்த வெடிப்பில் செத்த அனைவரின் உடலும், ஆணியும் பால்ரஸ் இரும்புகுண்டுகளும் இருந்தன, அதனை கைகுண்டில் யாராவது வைப்பார்களா?
அப்படி ராஜிவ் தற்செயலாக சாகும் இடத்திற்கு நளினி, சுபா, சிவராசன் எல்லாம் ஏன் செல்லவேண்டும், தனு மாலையிடும் பொழுதா அந்த குண்டு வெடித்தது?
எத்தனையோ இடங்களில் வெடிக்காத அந்த குண்டு, சம்பவ இடத்தில் மட்டும் சரியாக வெடித்ததா?
கொழும்பில் சிங்கள வீரனால் தாக்கபடும் பொழுது கூட ராஜிவ் அந்த குண்டை எடுத்து வீசினாரா? உண்மையிலே அப்படி ஒரு குண்டு இருந்திருந்தால் அந்த கொலைமுயற்சியில் அவர் கை தானாக அதனை எடுத்திருக்காதா?
சரி, அந்த ராஜிவின் தற்கொலைக்கா தமிழகத்தில் 24 புலிகள் தற்கொலை செய்தனர்? ஆதிரை எனும் பெண்புலி டெல்லியில் மாற்று வெடிகுண்டாக ஏன் காத்திருந்தாள்?
இப்படி பழனிபாபா சொன்னதையே சொந்தமாக சிந்திக்க தெரியாதவர்கள் எல்லாம், அவர் சொன்னதை எல்லாம் கொண்டு நம்மிடம் சிந்தித்து பார் துரோகி என்பதுதான் காலகொடுமை.
கொஞ்சம் சிந்தியுங்கள், ஒரு கையேரி குண்டு 18 பேரை பிய்த்து கொல்லுமா? 20 பேரை படுகாயபடுத்துமா? இதனை கூட சிந்திக்கா அறிவிலிகளா நீங்கள்?
No comments:
Post a Comment