Thursday, June 2, 2016

தமிழக மீனவர்களின் பிரச்சனை: கலைஞர்

மீனவர்களின் பிரச்சனையை கடிதம் மட்டும்
எழுதித் தீர்வு காணும் பிரச்சினையாக கருத வேண்டாம் : கலைஞர்

# ஆமாம், இவர் முதல்வராகவும் இவர் கட்சி எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாகவும் இருந்தபொழுது, டெல்லியில் கலாநிதி, அழகிரி, பாலு எல்லோரும் மன்மோகன்சிங்கினை சுற்றி தற்கொலை படையாக நின்று கொள்ள, கலைஞர் சயனைடு குப்பிபியோடு மிரட்டிய மிரட்டலில் ஒரே போனில் அனைத்து மீணவர்களைவும் விடுவித்து, நஷ்ட ஈடும்கொடுத்து அனுப்பினான் அல்லவா சிங்களன், அப்படி விடுவிக்க வேண்டும். (என்னா வில்லத்தனம் :) )

# சீமானின் விழுதுகள் பொங்க வேண்டாம், இங்கே மீன்பிடிக்க வரும் இந்திய தமிழக மீணவர்களை விரட்டுங்கள் என சிங்களனிடம் கோரிக்கை வைப்பவனே ஈழமீணவன் தான், அதே தொப்புள்கொடி உறவுகள்தான்.

# கலைஞர் அரசியலுக்கு ஆயிரம் சொல்வார், ஆனால் இப்பொழுது பதவியில் இருந்தால் கடிதம்தான் எழுதுவார், எல்லாவற்றிலும் இரட்டை நிலை என்பது அவரின் அரசியல்.

# ஆழ்கடல் மீன் பிடிப்பினை ஊக்குவிக்காமல் இப்பிரச்சினைக்கு முடிவு இல்லை. கச்சத்தீவினை மீட்டாலும் நிலமை சுமூகமாக இருக்காது. தனி ஈழமே அமைந்தாலும் நிலமை இன்னும் சிக்கலாகுமே தவிர ஓயாது.

No comments:

Post a Comment