அடித்தட்டு மக்களோடு மக்களாய் பயணித்தவர்களுக்கு மக்களின் மனம் புரியும், அவர்கள் கலைஞர்கள் என்றால் அவர்களுக்கான படைப்புகள் அவர்களிடமிருந்து வரும், அது காலத்தையும் வென்று நிற்கும்
பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், ஜெயகாந்தன் என அந்த வரிசையில் அழியா மக்கள் கலைஞர்தான் இளையராஜா.
மானிட உணர்ச்சிகளை இசைமூலம் வெளி கொண்டுவரும் வரம் அவருக்கு சாதாரணம், மேற்கத்திய பியாணோ முதல் மண்பாண்ட கடம் வரை அவர் விரும்பிய இசையை அவருக்காய் இசைக்கும், அது ராஜாவை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.

மானிட வாழ்வின் எல்லா சூழ்நிலைக்கும் அவரின் இசை பொருந்தும், தாலாட்டு, பாசம்,நேசம், காதல், திருமணம், முதுமை, தோல்வி, வெறுமை,தனிமை, துரோகம், அவமானம், தவிப்பு, ஏக்கம், கொடுமை, வஞ்சகம் ,நன்றி, வேண்டுதல் என எல்லா பக்கங்களுக்கும் இசையால் உற்சாகமும், மருந்தும்,ஆறுதலும் தருபவர்தான் அவரது இசை.
உலக வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இசைத்தவர், அன்றாட வாழ்வின் ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் இசையால் உயிர்கொடுத்தவர. காலை,மாலை,இரவு, வானம், நட்சத்திரம், நிலா, சூரியன், மழை, வெயில், வயல் என இயற்கையின் ஒவ்வொரு அழகிற்கும் தன் இசையால் தனிரசனை கொடுத்தவர்
"புத்தம் புது காலை""பொன் மாலை பொழுது""நிலவு தூங்கும் நேரம்","பூங்காற்று திரும்புமா" என சொல்லிகொண்டே செல்லலாம்.
ஞானம் மிகுந்திருந்த கண்ணதாசனின் கடைசி கால பாடல்களுக்கும், கிராமிய துடிப்பு மிகுந்திருந்த வைரமுத்துவின் தொடக்ககால பாடல்களுக்கு ராஜா இசை அமைத்திருந்த அந்த கால பாடல்கள் எந்நாளும் தமிழ்திரை இசையின் வைரங்கள்.
இளையராஜா நிச்சயம் தமிழகத்தின், தமிழினத்தின் பெரும் அடையாளங்களில் ஒருவர் என்பது கால கல்வெட்டு.
நிச்சயமாக தமிழக பண்டைய செய்யுள் வடிவமெல்லாம் தமிழிசைதான்,
கம்பராமாயணம் முதல் குறள் வரை மிக அழகாக 7 சுவரங்களுக்குள் அடங்கி வருபதுதான்.
அது கரை நாடக இசை என காவேரி கரையில் ஒலித்ததுதான், பின்னாளைய காலதிரிபில் அது "கர்நாடக இசை" என மாறி, அதற்கு தியாகராஜர், முத்துசாமி, சியாமா என மும்மூர்த்திகளை கொடுத்து, இவர்கள்தான் பிதமாகர்கள் என மாற்றிவிட்டது பிற்கால கொடுமை.
அப்படியானால் அவர்களுக்கு முன்பு தமிழகத்தில் இசையே இல்லையா? யாழ் என்பதே தமிழன் இசை. அதனிலிருந்து பிறந்ததே வீணை முதல் சகலமும்.
அந்த மூன்று இசை ஜாம்பவான்களையும் ஒரே உருவத்தில் பார்க்கவேண்டுமானால் நிச்சயம் இளையராஜாவிடம் பார்க்கலாம், அது உண்மை ஆனால் தமிழக யதார்த்தமும் சில மறைமுக கொடுமைகளும் அப்படி பார்க்கவிடாது, அப்படி ஒரு பேச்சு வந்தாலே மறைக்க பார்ப்பார்கள்.
ஆனால் நட்சத்திரங்களின் மின்னல் சூரியனை மறைக்க முடியாது, இளையராஜா அச்சூரியன்.
# வாழ்க நீ எம்மான்...வாழிய வாழியவே
No comments:
Post a Comment