Thursday, September 1, 2016

கோட்டை ராசி அப்படி.....

“காலனியில் பிறந்த என்னை.. காலிணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. இன்று என்வீட்டிற்கே இரண்டு காவலர்களை காவலுக்கு நிறுத்தியவர்.. எங்கள் புரட்சி தலைவி அம்மா” : அமைச்சர் ராஜலட்சுமி


அன்று எம்ஜிஆர் என்பவர் எல்லோருக்கும் செருப்புகொடுத்தாரே, அப்பொழுது வேண்டாம், அம்மா கையில்தான் செருப்பு வாங்குவேன் கூடவே அமைச்சர் பதவியும் இலவசமாக வாங்குவேன் என இருந்துவிட்டார் போலும்


சட்டசபையில் அம்மா புகழ் இம்சைகள் தாங்கமுடியவில்லை. ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளுகின்றார்கள். புகழ்வதற்கு யாரும் தடை என்றால் தூக்கி போட்டுவிட்டு திருப்புகழ் புகழ்ச்சிபாடல் இயற்றிகொண்டே இருக்கின்றார்கள்.


கோட்டை ராசி அப்படி.


அதாவது அக்கோட்டை கட்டபட்டு பின் இங்கிலாந்து அரசியின் அதிகாரத்தின் கீழ் வந்தபின் தென் இந்தியாவின் கட்டும்பாட்டு மையம் அதுதான், அப்பொழுது ராணியின் பிரதிநிதி வீற்றிருப்பார். பேசும் எல்லோரும் ராணிக்கு முறைப்படி
அரச வணக்கம். ராணி புகழ்ச்சி எல்லாம் 10 நிமிடம் சொல்லிவிட்டு பிரச்சினைகளை பேசுவார்கள், பின் மறுபடி ராணி சமூகத்திற்கு நன்றி சொல்லி அமர்வார்கள்


அந்த பிரதிநிதி அதனை கவனமாக குறித்து லண்டனுக்கு அனுப்புவார், ராணி மகிழ்வார், பிரமோஷன். பதவி உயர்வு எல்லாம் அதனை பொறுத்தே
ஆக சென்னை கோட்டை பிரதிநிதிதான் எல்லாம்.


இதில் ராணியே நேரில் வந்தால் எப்படி இருக்கும்? இப்பொழுது இருக்கும் சட்ட சபை போலவே இருக்கும்.


மொத்தத்தில் கோட்டை என்றால் ராணி, ராணி என்றால் கோட்டை எனும் கோட்டை ராசியே தவிர வேறொன்றும் அல்ல, இடம் மாற்றாமல் அந்த சென்டிமென்ட் சரியாகாது.


மக்களாட்சி மூலம் மன்னராட்சி நடக்கும் விநோதநாடு உலகில் இந்தியா மட்டுமே.


ஆனால் இன்று எல்லா அமைச்சர்களும் கவிஞர்கள், சபாநாயகர் கவிஞர் மொத்தத்தில் கவிஞர்கள் கவிமழை பொழிந்துகொண்டே இருக்கின்றார்கள்,


தேவியின் அருள் பெற்ற காளிதாசன்கள், தெனாலி ராமன்கள் எல்லாம் அங்கேதான் இருக்கின்றார்கள், சபை களை கட்டுகின்றது.


பொற்கால ஆட்சியில், வேறு குறைகளே இல்லாத ஆட்சியில் இது கூட இல்லை என்றால் எப்படி?






ஏராளமான அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியே வருவார்கள் : சசிகலா புஷ்பா


அவர்கள் வெளியே வருவது இருக்கட்டும், நீங்களும் "அவரும்" உள்ளே செல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா?

No comments:

Post a Comment