Monday, September 5, 2016

சிலைகளால் பெருமையும் சர்ச்சையும்...

என்ன தமிழகமோ தெரியவில்லை, சிலைகளால் பெருமையும் அதே சிலைகளால் சர்ச்சையும் கொண்ட மாநிலம் இது.


அற்புதமான பண்டைய சாமி சிலைகள் சேதமுற்று கிடக்கும் அல்லது களவாடபட்டு வெளிநாடுகளில் விற்கபடும். அதனை பற்றி எந்த தமிழனும் கவலைபட மாட்டான்.


உங்கள் பழங்கால சிலைகள் கடத்தபட்டு எங்கள் நாட்டிற்கு வந்திருக்கின்றன, உரிய ஆதாரம் காட்டி வாங்கிகொள்ளுங்கள் என வெளிநாடுகள் கதறினாலும் தமிழன் கண்டுகொள்ளமாட்டான்.




அவை எல்லாம் பழம் மன்னர்கள் செய்தவை அல்லவா? எப்படியும் போகட்டும்


ஆனால் காமராஜர், ராமசந்திரன், பசும்பொன் தேவர், அம்பேத்கர், தீரன் சின்னமலை, பெரும்பிடுகு முத்தரையர், சுந்தரலிங்கம் போன்றவர்களின் சிலையினில் கை வைக்கமுடியாத தமிழகம் இது.


விசித்திரமாக இச்சிலைகள் ஒரு பைசா கூட தேறாதவை, கலை நயமும் இல்லாதவை. ஆனால் கை வைக்க முடியுமா?


வைத்தால் தெரியும் சேதி, அது கலைநயம் எல்லாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாக்கு வங்கி அதுதான். தொட முடியாது, எந்த அரசு தொடும்?


அதே நேரத்தில் தமிழர் அடையாளமான கண்ணகி, வள்ளுவன் சிலைகளை என்னவும் செய்யலாம், யாரும் கேட்கமாட்டார்கள்.


வள்ளுவன் கண்ணகிக்கு 1950களில் வோட்டுவங்கி இருந்திருக்கலாம், இப்பொழுது அப்படியா? போகட்டும் என விட்டுவிடுகின்றது தமிழகம்.


இதுதான் தமிழகம், தமிழுக்காகவும் தமிழருக்காகவும் பாடுபட்ட தமிழின போராளிகள், காவலர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தமிழகம்.


தமிழர் தமிழ், எங்கும் குறள் எதிலும் வள்ளுவன் என அண்ணா என்பவர் சொன்னவர் வழி வந்த கட்சிகள் ஆளும் தமிழகம். இன்று கூட ஆளும் கட்சி அவர் பெயரிதால் இருக்கின்றது.


தமிழர் அடையாளங்களை மறந்து சாதி அரசியலில் சிக்கி இருக்கும் தமிழகம், கடந்த 50 வருடங்களில் தமிழகத்தில் வளர்ந்திருக்கும் "புரட்சி", "தமிழக புரட்சி","இனமான எழுச்சி"


அப்படி கண்ணகிக்கு அடுத்து வள்ளுவனுக்கு தமிழகத்தில் சோதனையான காலம் அடுத்தது யார்?


ஒள‌வையாராக இருக்குமோ?



No comments:

Post a Comment