Monday, September 5, 2016

உடல் சுட்டு கிடப்பதுதானே காய்ச்சல்?




"திருவள்ளூர் மாவட்டத்தில் பலபேர் உயிரை பறித்துகொண்டுவருவது மர்ம காய்ச்சல், டெங்கு எல்லாம் அல்ல, மாறாக அது உடல்சூடு. அதிகமான உடல் சூடு" : தமிழக அமைச்சர் விளக்கம்


பொற்கால ஆட்சியில் இலவச ஆடு விலையில்லா ஆடு என்றும் , கடும் காய்ச்சல் உடல்சூடு என்றும் அழைக்கபடுகின்றது.


உடல் சுட்டு கிடப்பதுதானே காய்ச்சல்?





ஒருவேளை அவர்களுக்கு காய்ச்சல் வரும்பொழுது உடல் குளிர்ந்து ஜில்லென்று இருக்குமோ?

சட்டசபையில்தான் மகாகவி காளிதாஸ் போல பெரும் காவியங்களை இயற்றுகின்றார்கள், போகட்டும். மிக முக்கியமான பிரச்சினையிலும் இப்படித்தான் பொய்மூட்டை அவிழ்ப்பார்கள் போல.

ஆனானபட்ட சிங்கப்பூரே ஆம், சிகாவில் சிக்கி இருகின்றோம் என வெளிப்படையாக அறிவிதிருக்கும்போது, இந்த சென்னைக்கு என்ன வந்தது?

அது டெங்கியாக இருந்தாலும் சொன்னால்தான் என்ன?

வெள்ளத்தை சென்னையில் மறைக்கமுடிந்ததா? முடியுமா?. அதுபோல நோயினை எப்படி மறைப்பார்கள்? அது என்ன கண்டெய்னரில் கொண்டு செல்லும் பணமா? அல்லது வைகோ முடிக்கும் ராஜதந்திரமா?

100 நாட்கள்தான் முடிந்திருக்கின்றதாம், இன்னும் 1700 நாட்கள் இருக்கின்றது. அதுவரை காய்ச்சல் என்றால் உடல்சூடு, இருமல் என்றால் சிரிப்பால் வந்த இருமல். வாந்தி மயக்கம் என்றால் கர்ப்பகால வாந்தி, வயிறு வீக்கம் அதிகபடியான பிரியாணி உண்டதால் வந்தது என எத்தனை விஷயங்களை பார்க்கபோகின்றோமோ தெரியவில்லை.

(இப்பொழுது பின்ன்னூட்டத்தில் ஒரு அடிமை வம்ச‌ நண்பர் ஒருவர் வந்து அது உடல்சூடுதான் என சத்தியம் செய்வார் பாருங்கள், அவருக்கு எல்லாம் உடலில் சூடு போட்டு "உடல்சூடு" என்றால் என காட்டவேண்டும்)







No comments:

Post a Comment