Wednesday, September 14, 2016

அவன் இருக்கும் வரை காவேரியில் நீர் வந்ததாம் !

3 பதிவுகள் 






ரஜினி காவேரி பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் : தமிழிசை

ரஜினி காவேரி பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் : தமிழிசை

அவர் என்ன பிரதமரா, ஜனாதிபதியா அல்லது குறைந்தபட்சம் விவசாய சங்க தலைவரா? வார்டு கவுன்சிலரா? அவர் ஏன் குரல் கொடுக்கவேண்டும்?

இவர்கள் கட்சிதான் மத்தியில் ஆளும் கட்சி, அந்த பிரதமர் குரல்கொடுக்கமாட்டாராம், ஆனால் ரஜினி குரல் கொடுக்கவேண்டுமாம்


இந்த அம்மணியினை எல்லாம் மாநில தலைவராக வைத்திருப்பதற்கு பதிலாக அக்கட்சியினையே இங்கு கலைத்துவிடலாம்.






மனிதன் குரங்குகளாய் இருந்தபோது காவேரி ஓடியது, நமக்கு பின்னும் ஓடும் , சரித்திர கண்ணாடியில் பார்த்து வெட்கபடவேண்டி வரும் : கமலஹாசன்

ஏதாவது புரிகின்றதா? புரியாது. பெரும் அறிவாளிகளின் பேச்சு இப்படித்தான் இருக்கும். இருக்கட்டும்

கமல் இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம்


காவேரி முன்பு ஓடியதா அல்லது பின்பு ஓடுமா என்பதா பிரச்சினை? இப்பொழுது ஓடவில்லை என்பதுதானே பிரச்சினை?, சரி இதுபற்றி எல்லாம் நாம் பேசகூடாது

அவர் படமும் பெங்களூரில் பின்பு ஓடவேண்டும் அல்லவா?





ஒரு காட்டு மிருகமாக வாழ்ந்தவன் வீரப்பன். எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, எத்தனை தமிழன் செத்தாலும் கன்னடன் செத்தாலும் பிரச்சினை இல்லை தன் உயிர் மட்டும் காப்பாற்றபடவேண்டும் என்றே வாழ்ந்தவன்


அவனால் வாழ்விழந்த தமிழர் காவலர் குடும்பம், தமிழர் குடும்பம் என ஏராளம் உண்டு.


அவனால் கொல்லபட்ட காவலர்கள் எண்ணிக்கை 120 தாண்டும், சந்தேகத்தின் பேரில் அவன் கொன்ற பொதுமக்கள் எண்ணிக்கை ஏராளம், அங்கம் இழந்தவர்கள் வாழ்வை தொலைத்தவர்கள் பல நூறு


கொஞ்சமும் சமூக பொறுப்பின்றி தன் உயிரை காக்க கொடூர வாழ்க்கை வாழ்ந்த ஒரு சமூக விரோதி அவன்


யானை தந்தம், சந்தண மரம் அடுத்து அவன் தொடங்கியதுதான் மனித கடத்தல்


அவ்வப்போது அவன் ஆட்களை கடத்தி தன்னை காத்துகொண்ட சம்பவம் ஏராளம். அப்படி ஒருமுறை கடத்தி தன் சகோதரன் அர்ஜூனனை சிகிச்சைக்கு அனுப்பியதும், போலிஸ் பயண கைதிகளை மீட்டுவிட்டு அர்ஜூனனை மேலே அனுப்பிய சம்பவமும் உண்டு


தந்திரமாக வரவழைத்து கொன்ற சீனிவாசன், ஷகில், என அவனால் ஏமாற்றபட்டு உயிரழந்தோர் எராளம்


அச்சமயம் எந்த பெரும்புள்ளி அந்த பக்கம் சென்றாலும் அவன் கடத்தி இருப்பான், அப்படி சிக்கியவர்தான் ராஜ்குமார், அவரை விடுவிக்க அவன் கேட்ட கோடிகளும் ஏராளம்


அவர் மூலம் அவன் பெற்ற பணம் பல கோடிகள். அதே வீரப்பன் பின் பண தகறாறில் நாகப்பாவினை கடத்தி பின் கொன்றதும் பணத்திற்காக என்பது ரகசியமல்ல‌


அப்படி பணம் ஒன்றிற்காகவே வாழ்ந்த வீரப்பன், பின் பொதுமன்னிப்பு கிடைக்காத நிலையில் தமிழர் நல அவதாரம் பூண்டான், தீவிரவாதிகளோடு என்னவெல்லாமோ பேசினான், கடைசியில் கொல்லபட்டான். அவ்வளவுதான் விஷயம் எல்லாம் அவன் சுயநலம்


எல்லாம் அவன் உயிரை காப்பாற்ற போட்ட நாடகம், இதில் பொதுநலம் எங்கிருக்கின்றது?


அவன் தமிழர் நலம் காப்பவன் என்றால் சினிவாசனிடம் பேசியிருக்கலாம், கன்னட அதிகாரிகளிடம் காவேரி பற்றி பேசி இருக்கலாம், எத்தனை எத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் பேசி பார்த்தார்கள்


கோயமுத்துர் கலெக்டர் கூட பேசி பார்த்தார், அவன் காவேரி பற்றி என்ன பேசினான்? ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.


ராஜ்குமார் தன் கையில் சிக்க்கி இருக்கும்போது காவேரி பற்றி பேசி இருக்கலாம், நாகப்பா சிக்கி இருக்கும்போது பேசியிருக்கலாம்


ஏன் நக்கீரன் கோபால் தலையில் துப்பாக்கி வைத்து பேசி இருக்கலாம்


அப்பொழுதெல்லாம் பேசா வீரப்பன், கடைசியில் பொது மன்னிப்பு மறுக்கபட்ட நிலையில் தந்திரமாக மக்கள் அபிமானம் பெற எதனையோ பேசினான்


அவன் இருக்கும் வரை காவேரியில் நீர் வந்ததாம்


அட பதர்களா? 1990 காவேரி நீருக்காக பெங்களூர் கலவரம் நடந்தபொழுது அதிகாரி சீனிவாசனை இன்னும் பலரை கொடூரமாக கொன்று கொண்டு இருந்தான் வீரப்பன்


அதன் பின் பலமுறை காவேரி சிக்கல் வந்தபொழுதெல்லாம் தேவாரத்தை கொல்ல தேடினான் வீரப்பன், அப்பொழுதெல்லாம் வெறிபிடித்த மிருகமாக அவன் கொன்ற காவலர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா


எத்தனை மக்களை துண்டு துண்டாக வெட்டி காவேரி ஆற்றில் போட்டவன் அவன், காவேரிக்கு அவன் செய்தது அது ஒன்றுதான்.


அதனை எல்லாம் மறந்துவிட்டு வீரப்பன் காவேரி காவலன் என கதை அளக்கின்றார்கள்


மலையூர் மம்பெட்டியானை அத்திமலை சாய்ந்து விழாமல் தாங்கி பிடித்தவன் என எழுதுங்கள்


சரி ஆட்டோ சங்கரை ஏன் விட்டுவிட்டீர்கள்?


அவன் இருக்கும் வரை ஆந்திர எல்லையில் செம்மரம் கடத்தலில் ஒரு தமிழனும் கொல்லபடவில்லை என எழுதுங்கள்


பெங்களூர் கன்னட பெண்களை சென்னையில் கொன்று காவேரி பழிதீர்த்த மாவீரன் என எழுதுங்கள்


அப்படியே கன்னியாகுமரி ரவுடிகளை இந்துமாக்கடலை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுத்த பெரும் சாகசகாரர்கள் என எழுதுங்கள்


வங்க கடலோர கடத்தல்காரர்களை சிங்களர்களை தமிழகத்திற்குள் விடாத மாவீரர்கள் என எழுதுங்கள்


சுத்த பைத்தியகாரத்தனமாக எழுதும் நீங்கள், இப்படியும் எழுதினால் யாரும் சிரிக்க கூட மாட்டார்கள். உங்கள் இயல்பு அப்படி என நகர்ந்துவிடுவார்கள்.


எத்தனையோ பைத்தியங்களை உலகம் கண்டிருக்கின்றது, இம்மாதிரி பைத்தியங்களை காணும் கொடுமை நமக்கும் வாய்த்திருக்கின்றது


தமிழக காவலர்களை கொன்றுகுவித்த இந்த வீரப்பனை எல்லாம் தியாகி அளவிற்கு எழுதும் இவர்களை பிடித்து முதலில் உள்ளே தள்ளவேண்டும்


அந்த காவலர்கள் எல்லாம், அந்த போராட்டம் எல்லாம், அவர்கள் மரணம் எல்லாம் இவர்களுக்கு அவ்வளவு ஏளனமாக போய்விட்டதா?


கடமையில் இறந்த காவலர்கள் தேச தியாகிகள், அவர்களை இழிவுபடுத்துவதையோ அவர்கள் சாவினை அர்த்தமில்லதாக காட்டுவதையோ இத்தேசம் ஒருநாளும் ஏற்றுகொள்ளாது.

No comments:

Post a Comment