Tuesday, September 27, 2016

நாகேஷ் : நகைச்சுவை சிகரம்

https://youtu.be/NrCBuyyVk-k


ஒரு நகைச்சுவை நடிகனாக நாகேஷ் சாதித்ததை நாகேஷ் முன்னர் வந்தவர்களும் சரி , பின்னர் வந்தவர்களும் சரி மிஞ்ச முடியாது


மின்னல்வேக முக பாவனை, உடல்மொழிமாற்றத்தில் அவர் என்றுமே தனித்து நின்றார்


சீரியசான குணசித்திரம், பரிதாப பாத்திரம், நகைச்சுவை கலந்த வில்லத்தனம் என எல்லா வேடங்களிலும் பின்னி எடுத்தவர் நாகேஷ்


காமெடி அவரது ஒவ்வொரு அசைவிலும், வார்த்தையிலும் பிறப்பிலே கலந்திருந்தது


அழகும் தோற்றபொலிவும் முக்கியமே அல்ல மாறாக உள்ளத்தில் இருந்து வரும் உணர்ச்சியான நடிப்பே பிரதானம் என நிருபித்து காட்டியவர்.


அவரின் வடுக்கள் பதிந்த முகம் அழகற்று இருக்கலாம், அவர் தேகம் நோஞ்சானாக இருக்கலாம், ஆனால் அவர் கொட்டிய நடிப்பு உணர்ச்சிகளே அவரை சினிமாவில் நிறுத்திற்று.


அழகினை விட நடிப்பே மகா முக்கியம் என காட்டியவர், ஆனால் ஒரு இடத்தில் மன்ம் விட்டு சொன்னார்


"நான் கொஞ்சம் அழகாக, வாட்டசாட்டமாக இருந்தால் இந்த ஹீரோக்கள் அருகில் என்னை தோழனாக காட்டியிருப்பார்கள் என நினைக்கின்றீர்களா? இல்லை


நான் நோஞ்சான் போல அசிங்கமாக இருப்பதால் அவர்கள் அழகு இன்னும் கூடுவதாக நினைத்தே என்னை அந்த வேடங்களுக்கு அனுமதித்தார்கள்,


அதை பற்றி எல்லாம் நான் கவலைபட்டதே இல்லை, என்னால் முடிந்ததை சினிமாவில் செய்தேன். மக்கள் ரசித்தார்கள் அவ்வளவுதான்"


அழகான முகம் முக்கியமே இல்லை என சினிமாவில் அடித்து நிரூபித்தவர் நாகேஷ், அப்படி பின்னாளில் திறமையினை நம்பி வந்தவர்கள் பலர் ஜெயித்தும் இருக்கின்றார்கள்.


இன்னும் ஜெயிக்க இருப்பவர்களுக்கும் அவரே வழிகாட்டி


மறக்கமுடியாத தமிழ்சினிமா அடையாளம் அவர், அவரை ரசிக்காமல் தமிழக சினிமாவினை கடந்துபோக முடியாது


இன்று நாகேஷின் பிறந்தநாள்.


அந்த காலத்தில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,நாகையா போன்ற நடிகர்கள் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார்கள் .


ம.கோ.ராமசந்திரன் ரிக்க்ஷாகாரன் படத்திற்கு " ஓதம் ஓதம் "நடிப்பிற்கு (அப்படி நாம் நம்பிகொள்ள வேண்டும்)பாரத் விருது வாங்கினார் .


ஆனால் எம் ஆர் ராதா, எஸ் வி ரங்காராவ், பாலையா, நாகேஷ் போன்ற உன்னத கலைஞர்கள் அரசு விருதுகள் கௌரவமின்றி தான் மறைந்தார்கள். நாகேஷும் அவ்வகையே


அரசு விருது யாருக்கு வேண்டும்? மக்கள் மனதில் நிற்பவன் அல்லவா மாபெரும் கலைஞன்.


பிடித்த நட்சத்திரங்களை வானில் யாரும் காட்டி தந்தா ரசிக்கின்றோம்? நாமாகவே ரசிக்கவில்லையா?


அப்படி பாலையா, எம்.ஆர் ராதா, ரங்கராவ் வரிசையில் என்றென்றும் நிலைத்து நிற்பார் நாகேஷ்

No comments:

Post a Comment