Thursday, September 29, 2016

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குஷ்பூ

https://youtu.be/1N2Dewx_pXw


ஆயிரம் நடிகைகள் வருவார்கள் போவார்கள், ஆனால் ஒரு சிலருக்கே நீங்கா இடம் கிடைக்கும்


அஞ்சலி தேவி, சரோஜா தேவி வரிசையில் தமிழ்திரையுலகில் முத்திரை பதித்த நடிகைகளின் வரிசையில் ஒருவர் குஷ்பூ. சந்தேகமேயில்லை


ராமச்சந்திரனுக்கு பின் தமிழகத்தில் ஒருவருக்கு கோயில் எழுப்பும் அளவிற்கு ரசிகர்கள் அபிமானம் இருந்தது என்றால் அது அவருக்கே.


கோயில் என்ன? எல்லார் மனதிலும் அன்று அவர் கொடியே பறந்துகொண்டிருந்தது.


1990களின் திரையுலகம் அவரின் புயலில் ஆடிகொண்டிருந்தது. அதுவும் வருஷம் 16 வந்து அடுத்த 10 வருடங்கள் அவருக்கானது. இட்லி முதல் அமுல் டப்பா வரை அவர் பெயரே அடைமொழி ஆயிற்று.


இன்று அவருக்கு பிறந்த நாளாம்.


அரசியலில் வேறு இருக்கின்றார். மோடி அரசு செல்லும் போக்கிற்கு காங்கிரசினை பதவியில் அமர்த்தியே தீருவார்கள் போலிருக்கின்றது. அப்பொழுது வைஜெயந்தி மாலா போல அவர் எம்பி ஆகவும் அகலாம்.


இன்னும் சொல்வதென்றால் ஸ்ருமிதி ராணி போல அமைச்சராகவும் ஆகலாம். காரணம் எல்லா கட்சிகளுக்கும் துணிவான பெண்களின் முகங்கள் தேவை.


அது ஒரு அரசியல்.


துணிச்சலும், மனதில்பட்டதினை பேசிவிடுவதும் அவரின் பலம். அதற்காக வரும் பின்விளைவுகளை சந்ந்திக்கவும் அவர் தயங்கவில்லை.


அந்த தைரியமும், அந்த வசீகரமும் நிச்சயம் அவரை அரசியலில் உயர்த்தவே செய்யும்.


குஷ்பூ நடிகையாக இருக்கலாம், பிரச்சினை இல்லை ஆனால் கொஞ்சகாலம் முன்பு வரை புலிகளை கண்டிக்கும் துணிச்சல் ஜெயலலிதா,சோ தவிர யாருக்கும் தமிழகத்தில் இருந்ததில்லை. அதுவும் அரசியல்வாதிகள், திரையுலகினர் சுத்தமாக நோ...


ஆனால் புலிகள் தீவிரவாதிகள் என சொல்லி எதிர்ப்பினை சம்பாதித்தவர் குஷ்பு. கடுமையான எதிர்ப்பு, கல்லெறி, மிரட்டல் என ஏக இம்சைகள் செய்தனர் புலி ஆதரவு இந்தியர்கள். அதாவது தேச விரோதிகள்.


இந்திய அரசால் தடை செய்யபட்ட ஒரு இயக்கத்தை ஒரு இந்தியபெண் அப்படித்தான் சொல்லமுடியும், குஷ்பூ அதனைத்தான் சொன்னார்.


அதன் பின் இன்று முகநூல் வரை புலிகளை போட்டு கிழிக்கின்றார்கள், அவர்களின் பிம்பம் சுக்கு நூறாக நொறுங்கிகொண்டிருக்கின்றது


இந்த குரலை தொடங்கி வைத்ததற்காவே அவரை பாராட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்


நாம் ஜெயபிரதாவின் ரசிகர்கள் என்பது இருக்கட்டும், மனக்கோயிலில் அவர் மூலவர் என்றால் இவர் உற்சவர். தேரில் ஊர்வலம் வரும் உற்சவர்.


ஜெயபிரதாவும் குஷ்பூவும் முன்னறி தேவதைகள்.


பிறந்த நாள் வாழ்த்துக்கள் குஷ்பூ




No comments:

Post a Comment