Wednesday, September 7, 2016

அங்கும் இங்கும்...




அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: ஹிலாரி கிளிண்டன்.


உலகில் எந்த நாட்டு தேர்தலாவது, ஆட்சியாவது இவர்கள் தலையீடு இல்லாமல் நடக்குமா?


தனக்கு வசதியான தலைவர்கள் ஆட்சிக்கு வரவும். தனக்கு அடங்கா அரசுகளை வீழ்த்தவும் அந்நாடு செய்யும் அழிச்சாட்டியம் கொஞ்சமா?





இவர்கள் தேர்தலில் யாரும் தலையிட கூடாதாம், ஆனால் உலகமெல்லாம் இவர்கள் மட்டும் தலையிடுவார்களாம்.

அது மட்டும் நமது நாடாக இருந்திருந்தால் மோனிகா லெவின்ஸ்கியினை எதிர்கட்சியில் பிரச்சாரம் செய்ய வைத்து இவரை ஓட ஓட விரட்டியிருப்பார்கள்.

இந்த டிரம்ப் என்பவருக்கு அதெல்லாம் தெரியவில்லை போல ...

 








கரூர் அருகே பெண்களின் கூந்தலை வெட்டி விற்பனை செய்த திருடன் கைது


உலகில் அவ்வப்போது வெளிவரும் சுவாரஸ்யமான செய்திகளில் இதுவும் ஒன்று, அதாகபட்டது கரூர் அருகே ஒரு கிராமத்தில் ஒருவர் வசித்திருக்கின்றார், மனைவி பிரிந்து சென்றதிலிருந்து சிகப்பு ரோஜக்கள் கமல் ஹாசன், ஊமை விழிகள் ரவிச்சந்திரன் போல ஆகிவிட்டார்


அதனால் என்ன செய்திருக்கின்றார், தனியாக இருக்கும் பெண்களின் முடியினை அறுத்துவிட்டு ஓடிவிடுவாராம். முதலில் இதனை வெறுப்பாக செய்தவருக்கு அதனை விற்றால் பணம் கிடைக்கிறது என தெரிந்திருக்கின்றது விடுவாரா? அது தொழிலாகவே மாறிவிட்டது




மனிதர் அப்பெண்கள் கம்மல், செயின் என எது இருந்தாலும் தொடமாட்டாராம். ஹேர் பின், சடை மாட்டி என எது இருந்தாலும் கழற்றி விட்டுத்தான் முடிவெட்டியிருக்கின்றார்.


அவர்கள் அழுவதில் இவருக்கு ஆனந்தமாம்.


ஒரு வழியாக சிக்கிவிட்டார், கருர் பகுதி பெண்கள் கூந்தல் காத்த மகிழ்ச்சியில் இருக்க்ன்றார்கள்


இவர் இப்படி ஆனதற்கு அப்படி என்ன இவர் மனைவி திட்டியிருபார்?


"நீர் ஒரு மயிருக்கும் லாயக்கற்றவர்?" என திட்டியிருப்பாரோ?


இதற்காக எல்லா ஆண்களும் இப்படி கிளம்பினால் , எந்த பெண் இந்தியாவில் முடியோடு அலைய முடியும்?



No comments:

Post a Comment