Tuesday, September 13, 2016

காவேரியில் நீர் என்ன.. மண் கூட காணாமல்தான் போகும்.

4 பதிவுகள்










கர்நாடகத் தமிழரைப் பாதுகாக்க மத்திய காவல் படையை அனுப்ப வேண்டும்! பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இப்படித்தான் ஈழதமிழரை காப்பாற்ற இந்திய ராணுவம் அனுப்படவேண்டுமென்றார், அதுவும் சென்றது . அதனை புலிகள் தாக்கி விரட்டியபொழுது மனசாட்சி இல்லாமல் அது ஆக்கிரமிப்பு படை என்றார்,

பின் புலிகள் அழியும் போது ஈழதமிழரை இந்தியா கொன்றது , இந்தியா கொலைகார நாடு என்றார்


இப்பொழுது கன்னட தமிழரை காப்பாற்ற வந்துவிட்டாராம்.

என்ன மாதிரியான ஆள் இவர்? ஒரு பக்கம் இந்திய படைகளை எதிர்த்த புலிகளுக்கு ஆதரவு

ஒரு பக்கம் இங்கே இந்திய படைகளுக்கு இப்பொழுது வரவேற்பு

இந்திய ராணுவம் பயங்கரமானது கொலைகாரதனமானது கொடுரமானது என சொன்னவர் இவரே தான்

இன்று கன்னடத்திற்கு அழைப்பதும் இவரே தான்















பேரறிவாளனுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

ஆமா, நாட்டிற்காக கடும்பாடுபட்டு சிறையில் உள்ளார் அல்லவா, கடும் பாதுகாப்பு தேவைதான்

ஹரிபாபு போல என்றோ சிவராசனுடன் செத்திருக்கவேண்டிய நபர், பிழைத்து சிறைபட்டதே பெரும் அதிசயம்,


அதிலும் தூக்கிலிருந்து தப்பியது இன்னொரு அதிசயம்

சாவிற்கு அஞ்சாமல்தானே புலிகள் பின்னால் சென்றார், இப்பொழுது மட்டும் மரணத்தை கண்டு அச்சமா?

சாக துணிந்துவிட்டு யாழ்பாணம் சென்று புலிகளை எல்லாம் பார்த்து வீரசபதம் எடுத்துவிட்டு இப்படியா மரணத்திற்கு அஞ்சுவது

வேண்டுமானால் இந்த வைகோ, சீமான், வேல்முருகனை உள்ளே அனுப்பி இவருக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லலாம்.










மத்திய அரசில் 15 ஆண்டுகாலம் பங்குபெற்றும் காவேரிக்கு நிரத்தர தீர்வு காணாத திமுக‌..


ஜெயலலிதா வழக்கு பெங்களூரில் நடக்கும்பொழுது தலைகீழாக நின்ற திமுக, இன்றுவரை அந்த வழக்கில் விடாபிடியாக நிற்கும் திமுகவினை ..


காவேரி பிரச்சினையில் காணவே இல்லை, வழக்கம்போல எதனையோ சொல்லிவிட்டு நாங்கள் அப்படித்தான் என எங்கோ பார்த்துகொண்டிருக்கின்றது அதன் தலமை.


ஜெயலலிதா என்ன மனநிலையில் இருக்கின்றார் என்றே தெரியவில்லை, அனைத்து கட்சி கூட்டம் கூட்டியதாக தெரியவில்லை. இப்பொழுது ஏதோ கடிதம் எழுதுகின்றாராம்.


அதுவும் சீமான் கோஷ்டி எங்கோ கன்னடரை தாக்கிய பின்பு, அது ஒரு அடிதடி படை. சிக்னல் கிடைத்தவுடன் தாக்கும், மறு சிக்னல் கிடைத்தவுடன் மல்லாக்க பாய்விரித்து படுத்துகொள்ளும்.


ஜெயலலிதாவும் பகிரங்கமாக கன்னட அரசினை எதிர்க்க அஞ்சுகின்றார் என்பது தெரிகின்றது, அது சொத்துகுவிப்பு வழக்கிற்காக‌ இருக்கலாம்.


காங்கிரசும், பிஜேபி இந்திய தலமை கன்னட விஷயத்தில் நிரம்ப யோசிக்கின்றன, காரணம் கன்னட ஆதரவினை இழந்துவிடுவோமோ என பயம். அரசியல் கணக்கு.


அட ஒருவேளை அகில இந்திய அதிமுகவின் கன்னட கிளை கர்நாடக ஆட்சியினை கைபற்றி இருந்து தமிழகத்தில் கலைஞர் ஆட்சி இருந்தாலும் காவேரி வராது இதுவும் அரசியல் கணக்கு.


நல்லவேளையாக அகில இந்திய அதிமுக அங்கு ஆட்சியில் இல்லை. காங்கிரசும் பிஜேபியும் இருக்கின்றன.


சரி அங்கே இழந்தால் தமிழகதில் மீட்டுகொள்ளலாமா என பார்த்தால் அமித்ஷா கண்களில் பொன் ராதா கிருஷ்ணனும், தமிழிசையும் தெரிகின்றார் அதோடு அவர் மோடியினை கிளம்ப சொல்லிவிட்டு அமைதியாகின்றார்.


காங்கிரசோ தமிழக காங்கிரசை பார்க்கவேண்டுமே என்பதற்காக கண்களை மூடியே வைத்திருக்கின்றது, இன்னும் மாநில தலைவர் யாரென சொல்லமுடியாத துர்பாக்கிய நிலை அவர்களுக்கு, சொன்னால் என்ன ஆகும்?


மோடியிடம் ஒரு பட்டாலியன் படையினை சத்யமூர்த்தி பவனுக்கு அனுப்ப கெஞ்சவேண்டும். சகல காங்கிரஸ் கோஷ்டிகளும் யுத்ததிதிற்கு தயார்.


ஆக திமுக, அதிமுக காவேரி விஷயத்தில் ஒரு புல்லும் புடுங்கபோவதில்லை, 39 எம்பிக்களும் டெல்லியில் என்ன செய்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.


இன்னொருமுறை டெல்லி அதிகாரத்தில் பங்குபெற்றாலும் இவர்கள் கிழிக்கபோவது அப்படித்தான்.


இது வாக்கு அரசியல், இந்திய அமைப்பு அப்படி.


கன்னடத்தில் அவர்கள் வாக்கு வங்கி இழந்து தமிழகத்தில் மீட்டுகொள்ளலாம் என்றால் இந்நேரம் பாதி காவேரி தமிழகம் வந்திருக்கும்.


ஆனால் என்ன செய்ய ? இங்கு அவர்கள் கணக்கு சுத்தம், அதனால் காவேரியும் மகா சுத்தம்.


கன்னடனுக்கு அவன் பலமே தேசிய கட்சிகளின் ஆட்சி. தமிழகத்தின் பெரும் பலவீனம் அது.


அவன் பலத்தை தமிழகம் பெறுமானால் காவேரி மீட்பும் சாத்தியமே.


ஆனால் திராவிட கட்சிகள் விடும் என்றா நினைக்கின்றீர்கள்?


தானும் பெற்றுதரமாட்டேன், பெற்று தரும் கட்சிகளை அனுமதிக்கவும் மாட்டேன் என்பது இவர்கள் நிலை.


யதார்த்தத்தை தமிழக மக்கள் உணராமல் உணர்ச்சிவசபடுவது அர்த்தமுள்ளது அல்ல‌.


அடிக்கவேண்டிய இடத்தில் அடிக்கவேண்டுமே தவிர, அப்பாவியாக ராமேஸ்வரத்தில் சிக்கியவனையோ உடுப்பி ஹோட்டல் தோசை மாஸ்டரையோ அல்ல.


இது அரசியல் ஆகிவிட்டது, தமிழனுக்கு நீர் தரும் எந்த கட்சியும் அங்கு ஆட்சி அமைக்க முடியாது.


ஆக அங்கு ஆட்சி இழக்கும் கட்சியினை இங்கு அரியணை ஏற்றாமல் பதிலுக்கு இன்றைய யதார்த்தத்தில் ஆட முடியாது.


இப்படி தமிழனாய் சிந்திக்கட்டும் என மவுனமாக இருக்கலாம் காங்கிரசும் பிஜேபியும்.


இவனா சிந்திப்பான்?


இவனுக்கு கன்னடம் என்றவுடன் புர்ச்சி தலைவருடன் ஆடி, புர்ச்சி முன்னாள் தலைவி எனும் பட்டத்தினை தவற விட்ட கன்னடத்து பைங்கிளி நினைவே வருகின்றது.


கன்னடனுக்கு நாம் என்னவெல்லாம் செய்திருக்கின்றோம் என நினைக்கும் பொழுது பபூன் ஸ்டார் ரஜினி நினைவு வந்து கண்ணீரை துடைக்கின்றான்.


பெங்களூர் நீர் தராவிட்டால் என்ன? அனுஷ்காவினை தந்திருக்கின்றது இன்னும் யார் யாரையெல்லாமோ தந்திருக்கின்றது என கண்ணீரை துடைத்துகொள்கின்றான்.


இன்றும் காவேரி பிரச்சினையில் சினிமா உலகம் என்ன செய்யபோகின்றது என்பதுதான் இவர் எதிர்பார்ப்பு.


ஆக காங்கிரசும் பிஜேபியும் தமிழன் சிந்திப்பான் என பொறுத்துபார்த்து உறங்கியே விட்டன‌.


நிச்சயம் காவேரி தமிழக உரிமைதான், ஆனால் உரிமையினை மீட்க ஆயிரம் வழிகள் உண்டு.


நாமோ கலைஞர், புர்ச்சி தலைவி தாண்டி யோசிக்கமாட்டோம். இப்படி ஒரு வழி இருக்கிறது சோதித்து பார்க்கலாம் என நினைக்கவே மாட்டோம்.


காரணம் தமிழர்களை பொறுத்தவரை இது தனி உலகம். அதனை ஆள்வது சொர்க்கலோகமான மாய திரையுலகம். அதிலிருந்து ஒருவர் வந்து தமிழகத்தை ஆளட்டும்.


மோடி, மத்திய அரசு எல்லாம் அண்டை நாடுகள் அல்லது ஐநா போன்ற பன்னாட்டு அமைப்புகள் எப்பொழுதாவது வந்து சென்னையில் கலைஞருடன் அல்லது புர்ச்சி தலைவியுடன் கை கொடுத்து போட்டோ எடுப்பார்கள்.


அவர்களை நம்பியா வாக்களிக்க முடியும் சீ சீ!!!


நம்மை காக்க நமது மாயலோகத்து தேவர்களால்தான் முடியும், அதனால் அடுத்த முதல்வரை அங்கே தான் தேடுவான், இவன் கண்ட திரையுலக தேவர்கள், தேவதைகள் அப்படி.


தேவர்கள் தேவதைகள் இல்லை என்றால் வசனம் எழுதும் ராஜரிஷிகள் கிடைத்தாலும் போதும், கத்தும் கழுதையாக இருந்தாலும் அந்த மாயலோகத்து கழுதை போதும்.


அவர்களால் மட்டுமே தமிழகத்தை காக்கமுடியும் எனும் அசைக்கமுடியா நம்பிக்கை கொண்டவன் தமிழன்.


புராண கால இந்துமதத்திடமிருந்து தமிழகத்தை காப்பாற்றுவதாக சொல்லி மாய திரையுலக மயக்கத்தில் தமிழகத்தை தள்ளியதே திராவிட கட்சிகளின் சாதனை.


மத மயக்கத்தில் இருந்து விடுவிக்கபோகின்றேன் என சொல்லி சினிமா மயக்கத்தில் மாற்றிவிட்டார்கள்.


இதன் பெயர் பகுத்தறிவு என நம்பவைத்தும் ஆகிவிட்டது, அந்த பகுத்தறிவினால் என்னென்ன நடந்தது என்பது உலகறியும், இப்பொழுது இன்னும் தெரிகின்றது.


இதோ காவேரி பற்றி எரிகின்றது. ஒருவன் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி பற்றி நலம் விசாரிக்கின்றான்.


இன்னொருவனுக்கு இருமுகன் ரிலீஸ் பெங்களூரில் வராமல் போய்விட்ட வருத்தமாம்.


இன்னொருவனுக்கு விஜய் படம் இப்பொழுதே கேரளாவில் நல்ல விலைக்கு விற்றதில் மகிழ்ச்சியாம்.


இன்னொருவனுக்கு வாய்மை படத்தில் பூர்ணிமாவினையும் தொலைந்துபோன நடிகர்களையும் கண்டதில் மிக்க மகிழ்ச்சியாம், பூர்வஜென்ம தீர்ந்தமகிழ்ச்சி.


பின் எங்கிருந்து இவன் யோசிப்பான்


பின் காவேரியில் நீர் என்ன? மண் கூட காணாமல்தான் போகும்.


இதோ அது கூட கன்னடத்திற்கும் கேரளாவிற்கும் சென்றுகொண்டே இருக்கின்றது.


உண்மையில் அண்ணா, புர்ச்சி தலைவன், தலைவி, கலைஞர் எல்லாம் வாழ்க வாழ்க என சொல்ல வேண்டியவன் மலையாளியும், கன்னடனுமே.


காரணம் அவர்களின் அழிச்சாட்டியத்தாலும் சுயநல அரசியலாலும், வீன் முகமுடியாலும் தமிழகம் இழந்தது கொஞ்சமல்ல‌.


அதனால் அவர்களுக்கு கனத்த லாபமே.


தமிழன் இப்படி சொல்ல, அவர்கள் அந்த நோக்கில் மனம் மகிழ்ந்து சொல்கின்றார்கள். மொத்தத்தில் இந்த கோஷம் திராவிட நாடெங்கும் எதிரொலிக்கின்றது.


திராவிடம் வாழ்க, அண்ணா வாழ்க, புர்ச்சி வாழ்க, கலைஞர் வாழ்க, கேரளம் வாழ்க, கன்னடம் வாழ்க‌.


தமிழகம் நாசமாய் போக, மண்ணாய் போக..


அட மண்ணும் களவு போக‌..







அன்னிய நாட்டில் நடந்த யுத்ததினை நிறுத்தமுடியா மாநில முதல்வர் கலைஞரை "இனதுரோகி", "தமிழின துரோகி" என்றெல்லாம் முழங்கி, காங்கிரசை மானாவரியாக தூற்றிய வைகோ,சீமான், வேல்முருகன் எல்லாம் இப்பொழுது முணகி கொண்டிருக்கின்றார்கள்

இன்றைய தமிழக முதல்வர் அண்டை மாநில தமிழர் நலனையே காக்கமுடியாமல் மவுனம் சாதிக்கும் போது இவர்கள் அமைதியாக இருப்பார்களாம்,

ஆனால் கலைஞர் மட்டும் கடல்கடந்து காப்பாற்றியாக வேண்டுமாம், அதுவும் ஒரு பெரும் சர்வதேச கொலை குற்றவாளியினை காப்பாற்றவேண்டுமாம்

அதுவும் ஒரு பெரும் சர்வதேச கொலை குற்றவாளியினை காப்பாற்றவேண்டுமாம்

இதுவே முடியாதென்றால் அது எப்படி சாத்தியமாகும், ஆக இவர்கள் கலைஞர் மீது சொன்னதெல்லாம் சாத்தியமில்லா குற்றச்சாட்டு என்பது தெரியும் நேரமிது.

கலைஞரை சாடியதில் 100ல் ஒருபங்கினையாவது இப்போது உள்ள முதல்வர் மீது சாடலாம் அல்லவா? மோடி மீது பாயலாம் அல்லவா?

எப்படி எல்லாம் கருணாநிதியினை சாடினார்கள்.

இதோ இன்றைய முதல்வரும் பிரதமரும் அப்படியே இருக்கின்றார்கள், இந்த கோஷ்டியிடமிருந்து ஒரு எதிர்ப்புமில்லை

சாயம் வெளுத்தபின்னும் இன்னும் கொஞ்சமும் அவமானமின்றி பேசிகொண்டே இருக்கின்றார்கள் , இதுதான் அரசியல்




 

No comments:

Post a Comment