Tuesday, September 13, 2016

காவேரியினை விடமாட்டோம் ....


3 பதிவுகள்





காவேரியினை விடமாட்டோம் என அழிச்சாட்டியம் செய்வது கன்னடம், பாதிக்கபட்டிருப்பது நிச்சயம் தமிழகம், பெரும் கோபமும் கலவரமும் இங்கு வெடித்தால் அது ஒரு ஆற்றாமையான கோபம்.


Stanley Rajan's photo.


Stanley Rajan's photo.


 




[caption id="attachment_3251" align="aligncenter" width="448"]v கன்னட பிந்திரன்வாலே வாட்டாள்  நாகராஜ்[/caption]

 ஆனால் பாதிக்கபட்ட தமிழகம் மகா அமைதியாக இருக்கும் போது, குறுகிய மனமுள்ள கன்னடர்கள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறி எங்கோ சென்றுகொண்டிருக்கின்றது. தமிழக பேருந்துகளை எரிப்பதும், தமிழர்களை மிரட்டுவதும், கவேரி எங்களுக்கே என முழங்குவதும் நிச்சயம் தவறானது.


பெங்களூரில் இருக்கும் தமிழன் இந்தியன், அந்த இந்தியனை காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு.


பஞ்சாப் தீவிரவாதத்தில் அன்றைய மத்திய அரசு ஒதுங்கிற்றா? காஷ்மீரில் கலவரம் வந்தால் அதை அடக்குவது மாநில அரசின் பொறுப்பு என என்றாவது மத்திய அரசு ஒதுங்கி இருக்கின்றதா?


ஆனால் பல இடங்களில் இப்படித்தான் மத்திய அரசு ஒதுங்கி தவறான முன்னுதாரணம் காட்டுகின்றது.


அது மும்பையில் மராட்டியர்கள் விடும் மிரட்டல், பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் கலவரம் என பல இடங்களில் எல்லாம் முடிந்தபின்னரே மத்திய அரசு களமிறங்கும்.


அதே நிலை கன்னடவாழ் தமிழரிடையேயும் வராமல் அது காக்கவேண்டும்.


கலவரம் பரவினால் மாநில அரசினை எச்சரிக்கலாம், அதற்கு மேலும் வந்தால் செயலற்ற மாநில அரசினை கலைத்துவிட்டு ராணுவத்தை அனுப்பி கலவரங்களை அடக்கி, ஜனாதிபதி ஆட்சியினை செய்து காட்டலாம்.


ஒரு முறையேனும் அதனை செய்து இது கன்னடம் அல்ல, இந்தியாவின் ஒரு மாநிலம் என காட்டாமல் அந்த சில்லறை கூட்டத்திற்கு புத்தி வராது.


உடனடியாக மத்திய அரசு செய்யவேண்டிய வேலை இது, அது எம்மாதிரி விளைவினை ஏற்படுத்திவிடும் என்றால், நல்ல முன்மாதிரியாகத்தான் அமையும்


அதாவது நதிநீர் என்பது தேசிய உடமை, அதனை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என செவிட்டில் அறைந்தது போல ஒரு முன்மாதிரி.


ஒரு நல்ல இரும்பு பிரதமர் என்றால் அதனைத்தான் செய்வார், எச்சரித்துவிட்டு மாநில அரசின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கலைக்க எவ்வளவு நேரமாகும்.


அப்படியே தமிழக உரிமையினை காக்க தவறிவிட்டது என இந்த தமிழக அரசினையும் கலைத்து போட்டுவிட்டு மத்திய குழு தலமையிலே காவேரிக்கு நல்ல முடிவெடுக்கலாம்


காரணம் இரு அரசுகளுமே அதனை வைத்து அரசியல் செய்கிறதே தவிர, உருப்படியான உறுதியான திட்டம் இருவரிடமும் இல்லை. கன்னட அரசுக்கு மாநில சுயநலம், அதே வோட்டு அரசியல்.


தமிழகத்தில் அது அழுகைஅரசியல்.


நல்ல இந்திய அரசு, ராணுவத்தை அனுப்பி இரும்பு கரம் கொண்டு கன்னடர்கள் கொட்டத்தை அடக்கி தமிழரை காத்து நாட்டின் ஒருமைபாட்டை காக்கவேண்டும்.


பஞ்சாப் பொற்கோயிலுக்குள் ஒரு காலத்தில் ராணுவத்தை அனுப்ப துணிந்த அரசுபோன்று, கே.எஸ்.ஆர் அணைக்கு ராணுவத்தை அனுப்ப முடியாதா?


பெங்களூர் வாழ் தமிழர்கள் சொல்கின்றார்கள், "நடமாட முடியவில்லை, பார்த்தால் கன்னடன் நீ தமிழனா என்கிறான், மலையாளத்திலோ அல்லது அறைகுறை கன்னடத்திலோ மறுத்து ஓட வேண்டி இருக்கின்றது.


மனதிற்குள் எவ்வளவு அவமானமாக அழுகிறோம் என்பது வார்த்தையால் சொல்லமுடியாதது".


ஒரு இந்தியன் இன்னொரு இந்தியனை இன அடிப்படையில் மிரட்டுவதை எப்படி சகித்துகொள்ள மத்திய அரசால் முடியும்? அரசினை விடுங்கள், இன்னொரு இந்தியனால் எப்படி முடியும்?


அன்று ஜெர்மனியில் நாசிபடைகள் இப்படித்தான் சிறுபான்மையினரை கேட்டன, "நீ யூதனா இல்லையா?"


அதே கொடும் இனவாதத்தை கன்னட மண்ணில் கன்னட நாசிக்கள் தொடங்கிவிட்டபின் அது என்ன மாநிலமா? அல்லது தனி நாடா? யார் கொடுத்த அதிகாரம்?


இப்படி ஒவ்வொரு மாநிலமாக கேட்க ஆரம்பித்தால் நாடு என்னாகும்?


உலகெல்லாம் ஓடி ஓடி நான் இந்தியபிரதமர் என சொல்வதா பெருமை?


இது இந்திய மண், ஒரு இந்தியனை இன்னொரு இந்தியன் கொலைமிரட்டல் விடுக்கும் போது அங்கு வந்து இந்தியனாக காப்பேன் என்பதல்லவா பிரதமரின் பெருமை.


இது டிஜிட்டல் யுகம், எந்த செய்தியும் நொடியில் பரவும். பிரதமர் அடுத்த நாட்டு ராஜதந்திரிகளை சந்திக்கும்பொழுது பெங்களூரில் என்ன சத்தம்? குடிக்க நீர் கொடுக்கா மாநிலமா அது? நீங்கள் கேட்க மாடீர்களா என ஒருவர் கேட்டுவிட்டால் பறக்கபோவது பிரதமரின் மானம் மட்டுமல்ல, நமது இந்தியாவின் மானமுமே.


முதலில் பிரதமர் நாட்டினை கவனிக்கட்டும், அதன் பின் மற்ற நாடுகள் எல்லாம் தானாக ஓடிவரும்.


பெரும் முன்னுதாதரணம் எழுதும் கடப்பாட்டில் மத்திய அரசு இருக்கும் நேரமிது, தவறினால் அது பெரும் தவறான முன்னுதாரணமாகும். தேச ஒருமைபாட்டிற்கு நல்லதல்ல‌.


நேற்று ஒரு மலேய தமிழரை சந்தித்தேன், மனிதர் எல்லா மலேசியரையும் போலவே உலக செய்திகளை விரல் நுனியில் வைத்திருப்பார்.


இருவரும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது தண்ணீர் கப்பினை என் நோக்கி தள்ளினார், குடிக்கும்பொழுது ஊசிகுத்துவது போல சொன்னார்.


இந்த மாநிலத்திற்கு தண்ணீர் பக்கத்து மாநிலத்தில் இருந்துதான் வருகின்றது, ஒரு நாளும் ஒரு சர்ச்சையும் இல்லை. அப்படியே பக்கத்து நாடான சிங்கப்பூருக்கும் நாங்கள்தான் தண்ணீர் வழங்குகின்றோம் ஒரு சிக்கலும் இல்லை சொல்லிவிட்டு புன்னகைத்தார்.


செவிட்டில் அடித்தது போன்று இருந்தது. ஒரு இந்தியனாக மனம் கனத்த நேரம் அது.


ஆக இது உலகச்செய்தி ஆகிகொண்டிருக்கின்றது, இந்தியர்கள் பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர் கொடுக்காதவர்களாம், கேட்டால் கொல்வார்களாம் அவ்வளவு கொலைபாதகர்களாம்


அதனை கூட கட்டுபடுத்தமுடியாத மோடிதான் உலகெல்லாம் போய் இந்திய நலனை கிழிக்க போகின்றாராம் என உலகமே சொல்ல தொடங்கிவிடும்.


50 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றுமில்லாமல் இருந்து இன்று உலகின் பாதி அணைகட்டுகளை தன் நாட்டில் மட்டும் வைத்திருக்கும் சீனாவும், எந்தபோர் வெடித்தாலும் சிந்து நதி உரிமையினை இன்னும் காத்துகொண்டிருக்கும் பாகிஸ்தானும் கைகொட்டி சிரிக்கும் நேரமிது.


இன்னொருவர் மகா மகிழ்ச்சியாக முழங்கி சொல்வார், அவர் ராஜபக்சே, என்ன சொல்வார்?


நான் அதிபரான காலத்தில் மாவிலாறு அணையினை பூட்டி புலிகள் சிங்கள விவசாயிகளுக்கு நீர் இல்லை என சொல்லபொழுது ராணுவத்தை அனுப்பி புலிகளை விரட்டி அணையினை திறந்தவன் நான்.


அங்கே வெல்ல ஆரம்பித்தவன் இறுதியில் முள்ளிவாய்க்காலில் மகா வெற்றிபெற்றேன்.


இப்படியாக சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சிரிக்க, "ஐநா சபையில் இனி பாகிஸ்தானும் சத்தம்போட்டு சிரிக்கலாம். இந்தியாவின் கன்னட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நீர் கொடுபப்பதில் கூட‌ தலையிடாத இந்த மோடியா, காஷ்மீரிய மக்களுக்கு நியாயம் கொடுப்பார் உலக மன்றமே.."


மத்திய அரசு வரலாற்றை புரட்டட்டும்.


காஷ்மீருக்கும், கிழக்கு பாகிஸ்தானுக்கும், பஞ்சாப் பொற்கோயிலுக்குளும் ஒரு காலத்தில் ராணுவத்தை அனுப்ப துணிந்த அரசுபோன்று, கே.எஸ்.ஆர் அணைக்கு ராணுவத்தை அனுப்ப இந்த அரசால் முடியாதா?


திபெத்தியருக்காக சீனாவிடம் சண்டையிட்ட நாடு, ஈழதமிழருக்காக இலங்கைக்கு தன் ராணுவத்தையே அனுப்பிய நாடல்லவா இது?


அடுத்த நாட்டு மக்களுக்காக கிளம்பும் ராணுவம், சொந்த மக்கள் சாவதை தடுக்காவிட்டால் என்ன அர்த்தம்?


அந்த கன்னட அமைப்புகள் 4 ரப்பர் குண்டுக்கு தாங்குமா?


இம்மாதிரி நேரங்களில் வதந்திகள் இறக்கை கட்டி பறக்கும், பெரும் குழப்பங்கள் தலை தூக்கும். அந்நிய சக்திகள் சத்தமில்லாமல் புகுந்து நிலைமையினை வீரியமாக்கும்.


விரைந்து முடிக்கவேண்டிய பிரச்சினை இது, ராணுவத்தை அனுப்பி அந்த வாட்டாள் நாகராஜினை தேசவிரோதி என அறிவித்து பிடித்து திகாரில் போடுங்கள்


இந்த தேசத்தில் என்ன பெரிய எதிர்ப்பு வந்துவிடும்? அவன் என்ன தியாகியா? இல்லை தேசத்திற்கு ஏதும் செய்தவனா? இல்லை விஸ்வேசரய்யர் போல பெரும் அறிவாளியா?


பஞ்சாப் கோதுமை பஞ்சாபியருக்கே யாருக்கும் தரமாட்டோம் என சொன்ன பிந்ரன்வாலே தீவிரவாதி, இந்திய இறையாண்மைக்கு எதிரிஎன்றதால் ,அவனை ராணுவத்தை அனுப்பி கொன்றோம் அது சரி .


காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என சொன்ன தீவிரவாதிகளை ஓட விட்டு சுட்டதும் சரி அல்லவா?


அப்படியே காவேரி நீர் கன்னடருக்கே என சொல்லும் கன்னட அமைப்புகளும் அதே பட்டியல் அல்லவா?


பிந்திரன்வாலேக்கு ஒரு நியாயம், புர்கானுக்கு ஒரு நியாயம், அசாமின் உல்பா தீவிரவாதிக்கு ஒரு நியாயம், மாவோயிஸ்ட் தலைவன் கிஷன் ஜிக்கு ஒரு நியாயம்.


ஆனால் வாட்டாள் நாகராஜூக்கு ஒரு தனி நியாயமா?


பஞ்சாப் கோதுமையினை தடுத்த பிந்ரன்வாலே குற்றவாளி என்றால், காவேரி எமதே என கொக்கரிக்கும் வாட்டாள் என்ன தேசாபிமானியா?


எல்லா கன்னட மக்களும் மோசமானவர்கள் அல்ல, அவர்களிலும் நல்லவர்கள், நியாயம் தெரிந்தவர்கள் உண்டு.


ஆர்ப்பாடம் செய்துகொண்டிருப்பது கையால் பிடித்து நசுக்க கூடிய சிறு கூட்டமே, இந்த மூட்டை பூச்சுக்களை நசுக்குவது பெரும் விஷயம் அல்ல.


பஞ்சாபின் பிந்திரன்வாலே, காஷ்மீர தீவிரவாதி, உல்பா இயக்கம், பீகார் தாண்டேவாரா மாவோயிஸ்ட் தலைவர்கள் என பல வரலாறுகளை புரட்டி ஒரு முடிவிற்கு வரட்டும்.


அவர்கள் எமது வளம் எங்களுக்கே என சொன்னதைத்தான் இன்று இந்த கன்னட அமைப்புக்களும் சொல்கின்றன, இனி செய்யவேண்டியதை மத்திய அரசு செய்யட்டும்.


இந்திய மத்திய அரசு தன் கரங்களை பெங்களூர் நோக்கி நீட்டவேண்டிய தருணம் இது.














ஒரு குழுவினை ரகசியமாக அனுப்பி கன்னட நீர் நிலைகளை கண்காணித்து அவர்களின் பொய்முகத்தை கிழிக்கவேண்டிய செய்திகள் வரவேண்டிய நேரத்தில்..

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் என்ன இருக்கின்றது என அலசி தேடியிருக்கின்றார்கள், எப்படிபட்ட மக்கள் நலன் மிகுந்த மாநிலம் இது, இந்த காமெடி ஒருபுறம்..

இனிமக்களுக்காக போராடபோகின்றாராம் சசிகலா புஷ்பா, அப்படியானால் இதுவரை யாருக்காக போராடினார் என கேட்க கூடாது.


தூத்துகுடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தன் பெயர் சூட்டபோகின்றாராம், மக்களை திரட்டுவாராம். அப்பட்டமான சாதி அரசியல் என்பதை தவிர என்ன சொல்ல?

அப்படியே தூத்துக்டி துறைமுகத்திற்கு வைகுண்ட ராஜன் பெயரினை சூட்ட சொல்லி அடுத்த போராட்டத்தை இவர் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கலாம், இந்த காமெடி ஒருபுறம்..

இதுதான் அண்ணாயிசம், தமிழகம் மண்ணாய் போக சொன்ன அண்ணாயிசம்.






தண்ணீர் பெற வேண்டியதே அவசியம்: தமிழர்கள் உணச்சிவயப்பட வேண்டாம்: கி.வீரமணி.

இந்தி எதிர்ப்பு என பெரும் ரகளை செய்து 64 பேர் சாக காரணமாக இருந்த போராட்டத்தின்போது வராத நிதானம் எல்லாம் இப்பொழுது வருகின்றதாம்.


அன்று தமிழை காப்பதுதான் அவசியம், உணர்ச்சிவசபடவேண்டாம் என சொல்லாதவர் எல்லாம் இன்று தத்துவம் சொல்கின்றாராம்.


இம்மாதிரி உணர்ச்சி அரசியலை அறிமுகபடுத்தியதே உங்கள் கும்பல்தானே மிஸ்டர் வீரமணி.


அங்கே உச்சநீதிமன்ற உத்தரவினை விமர்சிக்கின்றார் எடியூரப்பா.


நீதிமன்றத்தை அவமதிக்கும் இந்த இடையூரப்பா மீது முதலில் வழக்கு பதிந்து உள்ளே தள்ளவேண்டும்.







 



No comments:

Post a Comment