Tuesday, September 6, 2016

ரஜினி அரசியல், நதிநீர் இணைப்பு என்றாலே புளிக்கின்றது...


அப்துல்கலாம் உதவியாளராக இருந்தவர் பொன்ராஜ், இவருக்கு இருப்பது நாட்டுபற்றா அல்லது அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் ஆசையா? என்பது வெகுநாள் குழப்பமாக இருந்தது. இப்பொழுது முடிவெடுத்துவிடலாம், அவரிடம் இருப்பது அரசியல் ஆசை. நேரடி ஆசை அல்ல எம்ஜிஆரை இயக்கிய ஆர்.எம் வீரப்பனை போல மறைமுக ஆசை


அவர் கலாமிற்கு தூபம் போட்டு பார்த்தார், அது கிடா கேட்கும் சாமி என்றால் ஆடியிருக்கும், ஆனால் கலாம் இந்திய சித்தர் அல்லவா? சிரித்துகொண்டே நழுவி விட்டார். இறுதிவரை பிடிகொடுக்கவில்லை


அடுத்து கலாமின் புகழினை கொண்டு கட்சி ஆரம்பிக்கலாம் என்ற யோசனையினை வைத்திருந்த பொன்ராஜ், சீமானின் நிலைகண்டு அதனை கூவத்தில் வீசிவிட்டார்


இம்முறை அன்னாரிடம் சிக்கி இருப்பவர் கொஞ்சநாளாக ஒரு மாதிரி அலையும் ரஜினிகாந்த்


[gallery ids="3001,3002" type="circle" columns="2"]

பொன்ராஜ் ரஜினியினை சந்தித்தாராம், 4 மணி நேரம் பேசினார்களாம். ரஜினி அரசியலுக்கு வரும் அவசியத்தை அவர் விவரித்தாராம், உடனே ரஜினி மன்றங்களை புதுப்பிக்கின்றாராம், இனி மோடியினை சந்தித்து நதிகளை இணையுங்கள் என்பாராம், அரசியலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருவாராம்


இதில் இன்னொரு செய்தியும் கசிகின்றது, கபாலி படத்தில் ரஜினி நடித்ததில் தலித் மக்கள் எல்லோரும் அவர் பின்னால் வந்துவிட்டார்களாம். இன்னும் 2 படம் அப்படி நடித்தால் தலித் வாக்குகளினாலே அன்னார் முதல்வர் ஆகிவிடுவாராம் இப்படியும் ஒரு மன்ற நிர்வாகி சொல்லிகொண்டிருக்கின்றார்


ரஜினியினை பற்றி நமக்கு ஓரளவு தெரியும் என்பதால், எம்மாதிரியான கட்டங்களில் எம்மாதிரி எல்லாம் நழுவுவார் என்பதால் இப்படி சொல்லலாம்


பொன்ராஜிற்கு சில திட்டங்கள் இருக்கலாம், ஆனால் ரஜினி அவரை எப்படி பயன்படுத்திகொண்டிருக்கின்றார் என்பதுதான் பார்க்கவேண்டியது


காவேரி சிக்கலுக்கு கன்னட அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு பணியா வேளையில், தமிழக பிரபலங்கள் எல்லாம் எட்டு கட்டையில் கத்தும் வேளையில் இவர் ஏதாவது சொல்லவேண்டும், அதற்காக கசிய விட்ட கதை மோடியினை பார்ப்பேன் நதிகளை இணைப்பேன் என்பது


ஏன் இதற்கு முன்பு அவர் மோடியினை பார்த்ததே இல்லையா? பிரச்சாரத்தின் பொழுது ரஜினி வீட்டிற்கு வந்தது மோடி டூப்பா?


தலித் வேடத்தில் நடித்து அரசியலுக்கு அடித்தளமிடுவது தற்கொலைக்கு சமம் என அவருக்கு தெரியாததல்ல, காரணம் ரஜினியின் முதல் பிள்ஸ்பாயிண்டே அவர் தமிழக சாதி இல்லை. அப்படி இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு


தலித் வேடத்தில் நடித்தால், தொடர்ந்து தேவர், நாடார், செட்டி , மீணவர் என குறவர் சாதிவரை அவர் நடித்தாக வேண்டும் அதுதான் யதார்த்தம், இது ரஜினிக்கு தெரியும், சிக்க மாட்டார். அப்படி சிக்கினால் அவர் ஏமார்ந்துவிட்டார் என்றே பொருள்.


அவர் அரசியலுக்கு வருகின்றார் எனும் விளையாட்டு எம்ஜிஆர் காலம் வரை இல்லை. அப்படி பேச்சு வந்தாலே "என்ன சத்தெம்.." என குரல் வரும். இந்த ரஜினி அரசியல் அழிச்சாட்டியம் வந்தது 1993க்கு பின், தொடங்கி வைத்தவர் எம்ஜிஆரை இயக்கிய அதே ஆர்.எம் வீரப்பன்


அதன் பின் ரஜினிக்கு அரசியல் சூது தெரிந்தது,


ஆனால் மூப்பனாரை மட்டும் நம்பி சில மூவ்களில் இறங்கி பார்த்தார்.


மூப்பனாரை எளிதில் குறை சொல்லிவிடமுடியாது. அரசியலுக்கு வந்து சம்பாதித்தவர்கள் மத்தியில் அவர் பெரும் பண்ணையாராகத்தான் அரசியலுக்கே வந்தார். ஒரு எதிர்பார்ப்பு அவர்மேல் இருந்தது உண்மை.


ஆனால் அவரையே ஒரு மாதிரி ஆக்கிவிட்டார்கள் தமிழக அரசியல் மந்திரவாதிகள், எப்படிபட்டவர்கள் இவர்கள்? இந்திரா காந்தியினையே விரட்டியர்களுக்கு மூப்பனார் எவ்வளவு? சமாளிக்க முடியாமல் திணறினார் அவர். பின் பழையபடி காங்கிரசிலே சேர்ந்துவிட்டார்.


ரஜினிக்கு ஏதோ புரிந்து ஹரே பாபா என ஒதுங்கிகொண்டார்.


ஆனால் அதில் அவர் கற்ற வித்தை ஒன்று உண்டு,


இந்த அரசியலுக்கு வருகிறேன் எனும் மாயையினை கொண்டு விளம்பரம் இல்லாமலே படத்தின் எதிர்பார்ப்பினை எகிற செய்யும் வித்தை அது. அப்படித்தான் செய்து கொண்டே இருந்தார்


சில பரபரப்பு சந்திப்புகள், அரசியல் வசன லீக்குகள் என தொடங்கிவிட்டால் பாதிபடம் முடியுது என பொருள், கட்சிகொடி தயாரிக்கிறார் ரஜினி என்றால் முக்கால்வாசி படம் முடிந்துவிட்டது என பொருள். விரைவில் ரஜினி முக்கிய அரசியல் என செய்தி வந்தால் படம் வெளிவரபோகிறது என பொருள், அவ்வளவுதான் படம் முடிந்தவுடன் இமயமலையில் மல்லாக்க கிடப்பார்.


காவேரி பிரச்சினை வெடிக்கின்றது, பொன்ராஜ் மூலம் ரஜினி நதிகளை தேசிய மயமாக்க மோடியிடம் கோரிக்கை என செய்தி கசிகின்றது


ரோபோ 2 படம் வெளிவரபோகின்றது, அவரின் அரசியல் அறிவிப்பு கசிகின்றது,.


அன்று சத்யா மூவிஸ் ஆர்.எம் வீரப்பன், இன்று கலாம் புரடக்ஷன் பொன்ராஜ்


இவ்வளவுதான் விஷயம் வேறு ஒன்றுமில்லை.


கபாலி 50ம் நாள் விழா அழிச்சாட்டியம் ஏதாவது கேள்விபட்டீர்களா? ஏதும் கொண்டாட்டம் என பத்திரிகையில் வந்ததா? வழக்கமான ரஜினி படம் 25ம் நாள் 50ம் நாள் 100 நாள் என எப்படி குழந்தை போல கொண்டாடபடும்


இங்கே பாட்டி செத்து மறுநாள் காரியம் என்பது போல எல்லாம் முடித்துவிட்டு சமாளிப்பதற்கு ஏதோ சொல்லிகொண்டிருக்கின்றாகள். இதற்கு மேலும் தலித் மக்கள் தமிழகத்தில் இருப்பது ரஜினிக்கு 3 மாதம் முன்னர்தான் தெரிந்தது, அதற்கு முன்பு தெரியவே தெரியாது என நம்புவீர்களாயின் அது உங்கள் விருப்பம்


பல இடங்களில் இவரின் அணுகுமுறையினை பார்த்துவிட்டதால் உங்களுக்கு புளிக்கின்றதோ இல்லையோ, ரஜினி அரசியல், நதிநீர் இணைப்பு என்றாலே, புளிக்கின்றது, எல்லாம் பெரும் தந்திரம்


மொசல் பிடிக்கும் ... முகத்தை பார்த்தால் ஒருவேளை தெரியாமல் இருக்கலாம், ஆனால் முதல் பாய்ச்சலிலே தெரியும், அது பல‌ முறை பாய்ந்தும் பிடிக்கவில்லை எனும்பொழுது அது பட்டவர்த்தனமாக தெரியாதா?


மாய திரையுலகத்தில் இருந்தே அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழகம் இன்னும் எதிர்பார்த்தால் அதன் விதியினை என்ன சொல்ல, பின் காவேரி எப்படி தமிழகத்தில் பாயும்?


டாஸ்மாக்தான் பாயும்





No comments:

Post a Comment