Tuesday, September 20, 2016

தண்டனை கொடுக்கமுடியா ஆவிகளுக்கு...



Image may contain: 1 person , text


திலீபன் மகேந்திரன் எல்லாம் சுவாதி கொலைகுற்றம் பற்றி டிவியில் பேட்டிகொடுக்கம் அளவிற்கு ஊடக தர்மம் தலைகுப்புற கிடக்கின்றது


தேசிய கொடியினை எரித்த வழக்கில் சிக்கி, சமீபத்தில் சுவாதி கொலை சர்ச்சையில் மனநோயாளி என முத்திரை குத்தபட்டவர்.


கவிஞர் தாமரையின் சாபத்தினை வாங்கி கட்டியிருக்கும் தியாகு எனும் போலி போராளிதான் இவருக்கு வழிகாட்டி என்றால் எப்படி இருக்கும் இவர்கள் கொள்கை?





இவரிடம் பேசி ஆகபோவதென்ன? ஏதும் தடையமிருந்தால் நீதிமன்றத்தில் சமர்பிக்கலாம் அல்லது பெரும் காவல்துறை தலமையிடம் கொடுக்கலாம், அதனை விட்டுவிட்டு சும்மா அது அப்படி இது இப்படி என பேசுவது எல்லாம் முக்கியமான கொலைகளில் ஏற்றுகொள்ள கூடியதா? எல்லோரும் இப்படி கிளம்பினால் என்ன ஆகும்?

இதற்கு ஆவியோடு பேசும் சில மாந்திரிக நிகழ்ச்சிகளையாவது ஆவி அமுதா, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஸ்டைலில் நடத்தி சுவாதி, ராம்குமார் ஆவிகளோடாவது பேசி ஒரு முடிவுக்கு வரலாம்

இவரின் தோழியான தமிழச்சிக்கும் சிக்கல் முற்றுகின்றது, பிரான்சிலிருந்து அவள் நாடு கடத்தபடலாம் எனும் அளவிற்கு நிலமை செல்கிறது. அவளோ ராம் குமாரை தொடர்ந்து நான் கொல்லபடலாம் என ஒப்பாரி வைக்க தொடங்கிவிட்டாள்

பாருங்கள் இனி சுவாதி ஆவி, ராம்குமார் ஆவி என சிலர் கிளம்புவார்கள், இனி ஆவிகள் நிகழ்ச்சி ஹிட் ஆகலாம், விரைவில் ஊடகங்களில் பல ஆவிகள் பேசும் நிலை வரலாம்

பைத்தியங்களுக்கும், தேச துரோகிகளுக்கும் ஆவிகள் பரவாயில்லை

ஆனால் மனிதனாக இருக்கும்போது பொய் மட்டுமே பேசியவன், ஆவியான பின்பு உண்மை மட்டுமே பேசுவான் என எப்படி நம்புவது?

அதுவும் தண்டனை கொடுக்கமுடியா ஆவிகளுக்கு.

ஒருவேளை ஆவிகள் பேசுவதை உண்மை என மக்கள் நம்பும் நிலை வந்தால் என்ன ஆகும்?

ஜெயா டிவியில் எம்ஜிஆர் ஆவி ஜெயலலிதாவினை புகழும், அன்னை தெரசா ஆவி வந்து வாழ்த்தினாலும் வாழ்த்தும்.

கலைஞர் டிவியில் அண்ணா ஆவி கலைஞரை வாழ்த்திகொண்டிருக்கும் இன்னும் பல அட்டகாசங்களை காணவேண்டி இருக்கும்

சீமான் உடலிலே வாழ்ந்து வருவதாக பிரபாகரன் ஆவி சொல்லிகொண்டிருக்கும்.












No comments:

Post a Comment