மத்திய அரசினை கண்டித்து இந்தியா முழுக்க ஆர்ப்பாட்டம், தமிழகத்திலும் இயல்பு வாழ்க்கை பாதித்தது : செய்தி
என்ன ஒரு பொறுப்பான ஆர்ப்பாட்டம்? தமிழகம் பெரும்பான்மையாக வாக்களித்தது ஜெயலலிதாவிற்கும், கலைஞருக்கும். அதுவும் ஜெயா கட்சி 36 எம்பிக்களை பெற்று டெல்லியில் அமர்ந்திருக்கின்றது.
ஆக இவர்கள் செய்யவேண்டியது என்ன? தன் தொகுதி எம்பியினை பிடித்து டெல்லியில் என்ன பேசியிருக்கினறீர்கள்? என்ன சாதித்திருக்கின்றீர்கள்? எங்களுக்கு என்ன நலன் காத்தீர்கள் என்றால் அது அர்த்தமுள்ள போராட்டடம்
அதை விட்டுவிட்டு இவர்கள்தான் மோடியினை தேர்ந்தெடுத்து வைத்திருப்பது போல கடும் அழிச்சாட்டியம்
உங்கள் வாக்கினை கலைஞருக்கும், ஜெயாவிற்கும் அளித்தால் அவர்ளை அல்லவா கேட்கவேண்டும்? உங்களை நம்பி வாக்களித்தோமே? பாராளுமன்றத்தில் என்ன நலன் பெற்று தந்தீர்கள் என்றால் அது பாராட்டதக்க போராட்டம்
சரி எல்லா மாநிலமும் மத்திய அரசினை எதிர்க்கின்றது, இவர்களும் எதிர்த்தார்கள். இவர்களின் பாராளுமன்ற பிரநிதிகள் வந்தார்களா? இல்லையா? என்பது பற்றி எல்லாம் நாம் கேட்க கூடாது
இந்த விஷயங்களிலிருந்து மனதை திருப்ப முழுநீள நகைச்சுவை படம் ஒன்று தேவைபட்டது, அதனால் நீரும் நெருப்பும் எனும் நகைச்சுவை படத்தினை பார்த்துகொண்டிருக்கின்றேன்
நாயகன் ராமச்சந்திரன் என்பவர் ஹீரோவாம், மனிதரின் நடிப்பில் நமக்கு சிரிப்புதான் வருகின்றது, அதுவும் மனநிலை சரியில்லாது போல ஒரு நடிப்பு நடிக்கின்றேரே..இதுவரை தமிழகம் கண்ட காமெடி காட்சிகளில் அதுதான் நம்பர் 1.
அதுவும் தலையினை சிலுப்பி ஒரு மேனரிசம் காட்டும்பொழுது எல்லா கவலைகளும் மறந்து வாய்விட்டு கத்தி சிரிக்க தோன்றுகிறது, ஏதும் ரத்தகொதிப்பு போனற இறுக்கமான நொய் உள்ளவர்கள் காணவேண்டிய படம்.
நொடிக்கு நொடி சிரிக்கலாம், ஒரே நிபந்தனை அவர் நடிக்கின்றார் என்பது உங்கள் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
இப்பொழுதெல்லாம் பவர்ஸ்டார், ஆர்யா போன்ற நடிகர்கள் மீதெல்லாம் நல்ல அபிமானம் வருகின்றது, நன்றாகத்தான் நடிக்கின்றார்கள்.
No comments:
Post a Comment