
உலகில் பெரும் நோய்கள் என நிரந்தர நோய்கள் உண்டு, அவ்வப்போது வருபவை என சில வகையறாக்கள் உண்டு. புற்றுநோய் போன்றவை முதல் ரகம் என்றால் பறவை காய்ச்சல், சார்ஸ், சிக்குன் குனியா, மெர்ஸ், எபோலா போன்றவவை இரண்டாம் ரகம். அந்த இரண்டாம் ரகத்தில் புதிதாய் இணைந்திருக்கும் பெயர் ஷிகா.
ஷிகா என்பது அந்த வைரசின் பெயர், அது ஒருவித காய்ச்சலை ஏற்படுத்துகின்றது, முதலில் சாதரண காய்ச்சல் பின் டெங்கி போன்ற அறிகுறிகள் அதனையும் தாண்டி ஓஹோ..இது ஷிஹா என அலறுவதற்குள் காலம் கடந்துவிடுகின்றது.
டெங்கினை போலவே இதற்கும் மருந்தில்லை. ஆனால் கட்டுபடுத்தலாம். கொஞ்சம் அசந்தால் ஆளை தூக்கிவிடும். காய்ச்சல் ஆண்களுக்கு வந்தால் சிக்கல் இல்லை பெண்களுக்கு அதுவும் கர்ப்பிணி பெண்களுக்கு வந்தால் அவ்வளவுதான், மகா சிக்கல்.
காரணம் இந்த வைரஸ் குழந்தையினை பாதிக்கும், பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையோடு, குறைபிரசவமாக பிறக்கும், ஷிகா முதலில் கண்டுபிடிக்கபட்ட பிரேசிலில் அப்படித்தான் பிறந்தன. அலறினார்கள், பாதிக்கபட்ட கர்ப்பிணிகள் எல்லாம் கதற கதற கட்டாய கருகலைப்பு செய்தார்கள், வேறு வழியில்லை. ஆயிரகணக்கான தாய்மார்களுக்கு அக்கொடுமை நடந்தது.

அதன்பின் அவர்கள் கர்ப்பமாக குறைந்தது 18 மாத இடைவெளிவேண்டும்.
ஒலிம்பபிக் போன்ற நிகழ்ச்சிகளுக்காக அந்நாடு பாதிக்கபட்டவர் எண்ணிக்கையினை மறைத்தே சொன்னது.
இன்றைய உலகம் மகா வேகமானது, எபோலா பாதித்த ஆப்ரிக்க பகுதிகள் வேறு, வளர்ந்துவரும் பிரேசில் வேறு. தினமும் நூற்றுகணக்கான விமானங்கள் இறங்கி ஏறுகின்றன. அப்படி அந்நோய் உலகம் முழுக்க பரவிவிட்டது.
பல நாடுகள் அது ஷிகா என தெரியாமல் டெங்கு என தடுமாறுகின்றன. மிக சிறந்த சுகாதார நாடான சிங்கப்பூர் அதனை தன் நாட்டில் கண்டுபிடித்துவிட்டது, முதலில் ஒன்று இரண்டு என தொடங்கிய எண்ணிக்கை இன்று 112ல் வந்தாகிவிட்டது.
பொதுவாக சிங்கப்பூர் வித்தியாசமான நாடு, தங்கள் நற்பெயருக்கும், பாதுகாப்பான நாடு எனும் பெயரினை தக்க வைப்பதிலும் பெரும் சவால் எடுப்பார்கள். இப்பொழுதும் அதே பிரயர்த்தனத்தில் இருக்கின்றார்கள்.
போர்கால அடிப்படையில் அவர்கள் இயங்கிகொண்டிருக்கின்றார்கள், மழை கொட்டும் மலைநாடான மலேசியா எப்பொழுதும் டெங்கு மீது தன் இரும்புகரங்களை நீட்டிகொண்டே இருக்கும், அது ஷிகாவினை எதிர்கொள்ள கடும் தயாரிப்பில் இருக்கின்றது, ஏராளமான பரிசோதனைகள், தடுப்புகள்.
இது எப்படி பரவுகிறது என்றால் ஏடிஸ் அஜிதியா எனும் ஒரு வகை கொசு. அரசியல்வாதிகளில் பலவகை இருப்பது போல, கொசுக்களிலும் பலவகை உண்டு. அரசியலில் திராவிடம், சாதியம், தமிழியம், மதவாதம் என பல பிரிவுகள் இருப்பது போல இவ்வகை கொசுக்களால் மலேரியா, டெங்கி, டைபாய்டு, இப்போது ஷிகா என பரவுகின்றது
சிங்கப்பூர் நாடெல்லாம் கொசு மருந்து தெளிப்பில் இறங்கியாயிற்று, பாதிக்கபட்டவர்களை தனிமைபடுத்தி கடும் சிகிச்சை அளிக்கின்றது, மலேசியா கடும் விழிப்பு
இதில் ஐநா சுகாதார அமைப்பு அறிக்கை எனும் பெயரில் குண்டு வீசுகின்றது, அதாவது ஆப்ரிக்க ஆசிய நாடுகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் சிங்கப்பூர் அடையாளம் கண்டுவிட்டது. அடையாளம் காணப்படாத நாடுகள் உண்டு என்கிறது அதோடு நிறுத்தினாலும் பரவாயில்லை
இந்தியாவில் பலகோடி மக்கள் பாதிக்கபடும் அபாயம் உண்டு என எச்சரிக்கை மணி அடிக்கின்றது
இந்தியாவில் அப்படிபட்ட சாத்தியம் இல்லை என சொல்லமுடியாது, ஒருவருக்கு 100 கொசுக்கள் எனும் விகிதாச்சாரத்தில் வாழ்கின்றோம், அரசு இன்னும் விழித்துகொண்டதாக தெரியவில்லை, விழிக்கவேண்டும்
"இதய தெய்வம் அம்மா ஆணையிடுகிறார் ஏய் ஏடிஸ் வெளியே போ.." என்றால் அது என்ன அதிமுக எம்எல்ஏயா? அல்லது தூக்கி எறிய திமுக உறுப்பினரா? அல்லது வழக்குபோட்டு விரட்ட அது என்ன சசிகலா புஷ்பாவா?
அல்லது "ஏய் கொசுவே மக்களை விட்டுவிட்டு என்னை கடி.."
என உருகமாக மோடி சொன்னால் அது விட்டுவிடுமா?
ம்ஹூம் அது பயங்கரமான கொசு மூலம் வரும் வைரஸ், பெரும் தடுப்பு திட்டம், முன்னேற்பாடு தேவை
எல்லா விமான நிலையம் முதல் உள்ளூர் கழிவறைகள் வரை பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டிய நேரம் இது, காரணம் அயல்நாடுகளிலிருந்து வரும் கிருமி கொசு மூலம் பரவி நல்ல நீர் தேங்கி இருக்கும் இடங்களில் வளரும், அந்த நீர் தேங்கும் இடமெல்லாம் கவனிக்கபடவேண்டியவை
இன்னொன்று ஏடிஸ் கொசுவிடம் ஒரே ஒரு நல்ல பழக்கம் உண்டு, அது அதிகாலையில்தான் கடிக்குமாம். மற்ற நேரங்களில் அங்கிள் சைமன் போல பதுங்கி இருக்கும். ஆக கொசு கடிக்காமல் பூசும் களிம்புகள் பூசி, உடல் முழுவதும் போர்த்தும் உடைகள் அணிந்து தூங்குங்கள், கொசுவினை அண்ட விடாதீர்கள் என உலகம் முழுக்க அறிவித்துகொண்டே இருக்கின்றார்கள்.
பிரேசில் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் பரிசோதனை செய்யுங்கள், காய்ச்சல் இருப்பவர்கள் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ளுங்கள், காரணம் இது முதலில் அடையாளம் தெரியாது, உறுதி செய்ய நாள் எடுக்கும் என அறிவித்துகொண்டே இருக்கின்றார்கள்.
இந்தியாவில் என்ன அறிவிப்பு வந்திருக்கிறது என தெரியவில்லை. இன்று தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்கிறதாம், அதில் ஏடிஸ் கொசுவும் இருக்கலாம் என நினைத்துவிட்டார்களோ என்னமோ?, நினைத்தாலும் நினைப்பார்கள்
இப்பொழுது ஒரு விஷயத்தை நினைத்தால் பகீர் என்கிறது, அது அழிச்சாட்டிய கிறிஸ்தர்கள், அதாவது ஏதாவது ஒரு நோய் அல்லது போர் தொடங்கிவிட்டால் போதும், "அல்லேலூயா உலக அழிவு சமீபத்தில் உள்ளது, அழிவு தொடங்கிவிட்டது இதோ பைபிளில் சொன்ன அறிகுறி.." என ஒப்பாரியினை தொடங்குவார்கள்
அவர்களை அப்படியே தூக்கி ஷிகா கிருமி தொட்டியில் போடுவது நலம், காரணம் உலகத்தில் எப்பொழுதும் ஒரு நோய் இருந்துகொண்டுதான் இருக்கும்.
மானிட குலம் அதன் தொடக்க காலத்திலிருந்து இம்மாதிரியான நோய்களை கடந்தே வந்திருக்கின்றது, சிலவற்றை முழுவதுமாக துடைத்திருக்கின்றது, சிலவற்றுடன் போராடிகொண்டிருக்கின்றது
அம்மை, காலரா, பிளேக், மலேரியா போன்றவைகள் அப்படி.
சார்ஸ், மெர்ஸ், எபோலோ போன்றவை எல்லாம் அவற்றின் நவீன வெர்ஷன்கள். ஆண்டவனும் கருணையுள்ளவன் ஒரு கட்டத்திற்கு மேல் இவை அடங்கிவிடுகின்றன
அப்படி இன்று பரவியிருக்கும் ஷிகா பீதியும் விரைவில் அடங்கும், ஆனால் முழு விழிப்புணர்வு மகா அவசியம். பொது நலம் அக்கம் பக்க விழிப்புணர்வு இன்னும் அவசியம். அடுத்த வீட்டு பக்கம்தான் நீர் தேங்கி இருக்கின்றது நமக்கென்ன என இருந்துவிடமுடியாது ஷிகா வைரசுக்கும், ஏடிஸ் கொசுவுக்கும் எல்லோரும் மானிடனே
கொசுவுக்கு தெரியும் விஷயம் நமக்கு புரியாவிட்டால் எவ்வளவு அவமானம்?
சக மானுடர்களுடன் விழிப்பாய் இருந்தால் கொஞ்சநாளிலே விரட்டபடும் அபாயம்தான் ஷிகா.
அந்த நம்பிக்கை கொடுத்த தைரியத்தில்தான் உலக நாடுகள் எல்லாம் அதனை எதிர்த்துகொண்டிருக்கின்றன்.
ஆண்டவனுக்கும் எதுவரை எவற்றை பூமியில் அனுமதிக்கவேண்டும் என்பதும் தெரியும்.
No comments:
Post a Comment