Thursday, September 1, 2016

ரஜினி குடும்பச் செய்திகள்....

தமிழக ஆளுநராக ரஜினி மனைவியினை அறிவிக்க திட்டமா? : சில பரபரப்பு செய்திகள்


நடக்குமா இல்லையா தெரியாது, அப்படி நடக்கும் பட்சத்தில் நம்மிடமும் சில கோரிக்கைகள் உண்டு


ரஜினியின் லதாவிற்கு கவர்ணர் பதவி என்றால், எம்ஜிஆர் காலத்து லதாவினை எப்படி புறக்கணிக்க முடியும்? ஏற்றுகொள்வோமா? ஏதாவது ஒரு பொறுப்பான பதவி கொடுத்து அமர்த்தவேண்டும்.




லதா ரஜினிக்கு பதவி என்றால், கமலின் கவுதமி என்ன சாதாரணமாக போய்விட்டாரா? அவருக்கும் ஏதவாது ஒரு மாநிலத்தில் கவர்ணர் ஆக்குங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தமானுக்கு ஆளுநராக்குங்கள்


முடிந்தால் ஜனாதிபதியாவது ஆக்குங்கள்.


இதற்கெல்லாம் முன்பு ரஜினிகாந்தினை இந்திய முப்படைகளுக்கும் தளபதியாக நியமிக்கவேண்டும்,


இல்லை என்றால் எப்படி? மனைவி கவர்ணர் என்றால் தலைவர் அதற்கு மேல் இல்லாவிட்டால் என்ன மரியாதை?


இது ஒருபுறம் இருக்கட்டும், அவர் ஆளுநராகவும் அவர் முப்படை தளபதியாகவும் ஆகட்டும்


அதற்கெல்லாம் முன்பு எங்கள் அபிமானத்திற்குரிய சில்க் ஸ்மிதாவிற்கு"தாத்தா பால்கொவா" , "மாறாத ரத்னா" என சில விருதுகளை கொடுத்து அவரை அங்கீகரித்துவிட்டு இவர்கள் பக்கம் வாருங்கள்.


அந்த வங்க கடலோரம் தூங்கும் அண்ணாவினை வெறுப்போடு பார்க்கின்றேன், புரட்சி நடிகர், இதயகனி என வோட்டுக்காக கிளப்பிவிட்ட பூதம் இன்று எப்படி நம்மை ஆட்டி கொண்டிக்கிருக்கின்றது


"அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டது நாமல்லவா"











ரஜினி மகள் ஐ.நாவில் இந்திய நல்லெண்ண தூதராக நியமிக்கபட்டுள்ளார்

நாட்டில் கல்வியாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும், உலக அரசியலில் கரை கண்டவர்களுக்கும் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் வேறு வழியின்றி இவருக்கு அந்த பதவி வழங்கபட்டிருக்கின்றது

அப்படியே ரஜினி மருமகன் தனுஷுக்கு ஆப்கன், ஏமன், லிபியா, சிரியா போன்ற நாடுகளுக்கு நல்லெண்ண தூதராக அனுப்பி வையுங்கள்,


உங்களுக்கு புண்ணியமாய் போகும்.












No comments:

Post a Comment