Friday, September 16, 2016

மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர்...

https://youtu.be/Iu0Y3fT4r0c

பெட்ரோலில் நனைந்த ஆடையினை அணிந்து ஊர்வலத்தில் வந்து கலந்துகொண்டான் விக்னேசு, தீடிரென தீயும் வைத்துகொண்டதால் அவனை காப்பாற்ற முடியவில்லை : சிலுக்கு சீமான்






பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டாமா பெருச்சாளி வாயனே, இப்படி எல்லாமா அளந்து விடுவாய்?

சரி இனி உனக்கு பெட்ரோலால் நனைந்த ஆடையினை அணிந்துவிடுகின்றோம், எங்காவது தட்டுபாடு என்றால் ஆடையினை பிழிந்து டாங்கினை நிரப்பிகொள்

அண்ட புளுகன் ஆகாச புளுகனை கேள்விபட்டிருக்கின்றோம், பெட்ரோல் புளுகனை இப்பொழுதான் பார்க்கின்றோம்

இந்த இடத்திலும் தேசிய தலைவர் அதனை சொன்னார், அப்படி சொன்னார், இப்படி சொன்னார், சயனைடு கடிக்க சொன்னார் என்றெல்லாம் இவன் அளந்து விட்டுகொண்டிருப்பது நல்ல அறிகுறி அல்ல‌

பதின்மவயது இளைஞர்கள் இவனிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம்,

காரணம் ஈழத்தில் அப்படி கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டுத்தான் பிரபாகரன் பெரும் அழிச்சாட்டியம் செய்தான், உண்ணாவிரதம் இருக்க வைத்து சாகடிக்கபட்ட தீலிபன் போன்றோரின் மரணம் அப்படியானதே

கடைசியில் எண்ணற்ற அனாதை முதியவர்களை ஈழத்தில் ஏற்படுத்திவிட்டு செத்ததை விட பிரபாகரன் ஒன்றும் கிழிக்கவில்லை

இந்த தற்கொடை, போராட்டம், களமாட்டம் எல்லாம் ஆரம்பத்திலே தமிழகத்தில் துடைத்தெறியபடவேண்டியவை

கன்ன்ட கலவரம் தொடங்கியதும், அங்கு பாதுகாப்பு பலபடுத்தப்ட்டிருக்கின்றது, துணை ராணுவபடை குவிக்கபட்டு இரு கன்னடன் சுட்டுகொல்லபட்டிருக்கின்றான்

மேலும் இனி பெங்களூரில் போராட்ட அனுமதி இல்லை என கமிஷ்ணர் அறிவித்து வாட்டாள் நாகராஜ் வரை அடக்கியாகிவிட்டது

மத்திய அரசும் நிலமையினை உன்னிப்பாக கவனித்தே வருகின்றது

ஆக தமிழர்களுக்கு அப்படி என்ன பெருங்கலவரம் நடந்து பல லட்சம் பேர் செத்துவிட்டார்கள் என இவர் தீகுளித்தார்?

இவரின் மரணத்தை பெரும் தியாகமாக சில அரைவேக்காடுகள் சொல்லிகொண்டிருக்கின்றன‌

இது பெரும் தியாகமாம்?

எது?, கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் கொளுத்திகொள்வதா? இது எல்லாம் பாராட்டதக்கதா?

அட மடையர்களே, இதற்கெல்லாம் சாகும் அளவு சென்றுவிட்டீர்களென்றால் உங்களால் ஆகபோவது என்ன? நாளை தெருநல்லி நீர் இல்லை என்றாலும் இப்படி கொளுத்திகொள்வீர்கள் அல்லவா?

ஆனாலும் சில சந்தேகங்கள் வலுக்கின்றன.

இருநாளைக்கு முன்பு எங்களிடமும் தீக்குச்சி உள்ளது என ஒருமாதிரியாக பேசிய சீமானின் பேச்சுக்களும் சந்தேகத்திற்குரியது,

அவர் எதனையோ எதிர்பார்த்தே பேசியிருக்கலாம்.

கொஞ்சம் அச்சமாகவும் இருக்கின்றது, இவர்கள் வரும் வரத்தினை கண்டால் அது எதிர்பார்த்த மரணம் போலவும், ஒருவரும் கண்டுகொள்ளாததால் வரும் ஆற்றாமை போலவும் தெரிகின்றது

மரமாக மாறி கொளுத்திகொண்டவர்களை யார் கண்டுகொள்வர்? "மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர்" என அன்றே அறிவித்தாகிவிட்டது

இந்த அரைவேக்காடுகளையும் அந்த தீயில் தூக்கி போடவேண்டும், இந்த நிலச்சுமைகளால் இந்நாட்டிற்கு ஒரு நல்ல விஷயமும் நடக்கபோவதே இல்லை

பிரபாகரனின் படத்தின் முன் சீமானும், கொளுத்திகொண்டவனும் ஈஈஈ என இளிப்பதை காணும் காட்சிகள் முகநூலெங்கும் கிடக்கின்றன‌

தற்கொலை படைகளை அனுப்பும் முன் அவர்களுக்கு விருந்து கொடுத்டு இப்படி படமெடுப்பது பிரபாகரனின் வழக்கம்.

அவர்கள் சாவார்கள், பின் பிரபாகரன் அவர்களை வாழ்த்தி வீரவணக்கம் என பேசிகொண்டிருப்பான்

அந்த விளையாட்டு பிரபாகரனின் தம்பி என சொல்லிகொண்டு அலைபவருக்கும் பிடித்து தொடங்கி இருக்கலாம், அப்படி தொடங்கி இருந்தால் அது மகா ஆபத்தானது

காரணம் பிரபாகரனுக்கு நன்றி என்பதே துளியும் இருக்காது, தன் சொல்லுக்காக செத்தவர்களை அவன் கொஞ்சமும் எண்ணிபார்த்ததில்லை, செத்தவர்கள் எதற்காக செத்தார்களோ அதனை கொஞ்சமும் எண்ணாமல் பிரேமதசா, மகிந்த என யாருடனும் கொஞ்ச அவன் தயங்கியதே இல்லை

அவனை முதலில் சந்திக்கும்பொழுது குண்டுதுளைக்காத தன் சட்டையினை கொடுத்து பாதுகாப்பாக இருங்கள் என சொன்னவர் ராஜிவ் காந்தி.

பின் அவருக்கே மனிதவெடிகுண்டை அனுப்பினான் அவன்.

அவன் தம்பி என சொல்லி திரிபவனுக்கு மட்டும் என்ன புத்தி வரும்.

ஆக அவனிடம் மிக விழிப்பாய் இருக்கவேண்டியது தமிழக இளைஞர்களின் பொறுப்பு, இல்லை என்றால் செத்துகொண்டே இருங்கள், அதற்கு போராட்டம் மண்ணாங்கட்டி என பெயர் சொல்லிகொண்டே இருங்கள்

ஒரு மாற்றமும் நடக்கபோவதில்லை, இத்தேசம் அதன் போக்கில் இயங்கிகொண்டே இருக்கும்

ஆனால் அளவுக்கு மீறினால், செய்யவேண்டியதை எம் தேசம் செய்யும்.

பஞ்சாப், காஷ்மீர் என இந்த தேசத்திற்கு நிறைந்த அனுபவம் இருக்கின்றது. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் இது அசைந்து கொடுக்காது.

அமைதிபடை காலத்தில் உங்கள் மேதகு சொன்னான் அல்லவா? "நாங்களும் சிங்களரும் அண்ணன் தம்பிகள், இன்று அடிப்போம் நாளை சேர்வோம், இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை" என்று.

அப்படியே நாங்களும் சொல்வோம் நாங்களும் கன்னடனும் உடன்பிறப்புக்கள், நாளையே எல்லாம் மாறும், அடிப்போம் சேர்வோம்

கன்னடத்து கரியப்பாவும், எங்கள் கலாமும் இத்தேசத்திற்கு ஒன்றே, ஒரே வரிசையே.

கன்னட மக்களும் நல்லவர்கள், அந்த வாட்டாள் எல்லாம் பெரும் அபிமானம் பெற்ற அரசியல்வாதி அல்ல, இங்கு சீமானும் அப்படியே

இந்த அனாமதேய, முகவரி இல்லா பதர்களால் இம்மண்ணில் ஒரு பிடியினை கூட பிரித்துவிட முடியாது, ஊடகங்களுக்கு வேண்டுமானால் இவர்கள் செய்திகொடுக்கலாம்.

இந்த சில சர்ச்சைகளில் சிலரை கொளுத்திவிட்டால் அதில் குளிர்காயலாம், பிரிவினை வளர்க்கலாம் என சிலர் எண்ணினால் அவர்களை தூக்கி அதே நெருப்பில் போடவும் இந்தியரான நாங்கள் தயங்க மாட்டோம்

அது வாட்டாள் நாகராஜோ அல்லது தமிழக சீமானோ எவனாக இருந்தாலும் சரி,

சில சர்ச்சைகள் வருமே ஒழிய, இந்தியரான நாங்களும் விட்டுகொடுக்கவே மாட்டோம்.

ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்



No comments:

Post a Comment