Wednesday, September 7, 2016

சாதி மோதலில் தமிழகம் இரண்டாமிடம்...

சாதி மோதலில் தமிழகம் இரண்டாமிடம், முதலிடம் உத்திர பிரதேசம் மூன்றாமிடம் பீகாருக்கு


அன்று இந்தியாவிலே முதலில் சாதி ஒழிப்பு இயக்கம் தொடங்கி, அதன் அரசியல் கட்சி ஆட்சியினை பிடித்ததும் இதே தமிழகத்தில்தான்.


அதாவது சாதி ஒழிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.




இன்று அதே தமிழகத்தில்தான் சாதிமோதல் அதிகமாகி அதில் பீஹாரையும் விஞ்சியாகிவிட்டது


எல்லாம் கழக ஆட்சிகளின் சாதனை, இயக்கமாக இருந்தபோது அவர்களால் ஒழிக்கபட்ட சாதி, வாக்கு அரசியலுக்கு அவர்கள் வந்தபின் இப்படி வளர்ந்திருக்கின்றது என்பதுதான் மகா விசித்திரம்.


அரசியல் நமக்கு வேண்டாம் என பெரியார் உறுதியாக இருந்ததில் எவ்வளவு அர்த்தம் இருந்திருக்கின்றது,


அரசியல் அப்படித்தான் கொள்கைகளில் அதனால் நிலைக்கமுடியாது, வளைந்துகொடுத்தே தீரவேண்டும்.


பெரியாரின் அரசியல் வாரிசுகளால் வந்த நிலை இது, அவரின் கொள்கை வாரிசுகளாக ஒரு பயலையும் காணவில்லை


கொள்கை சம்பாதித்து கொடுக்காது அல்லவா?



No comments:

Post a Comment