Thursday, September 15, 2016

அங்கிள் சைமன் காமெடி...



4 பதிவுகள்






கன்னடத்தில் தமிழர்கள் பரிதவிக்கும்போது சென்னையில் கட்சிவிழா தேவையா? முதல்வருக்கு சீமான் கண்டனம்

அட கண்டனம் தெரிவிக்க கலைஞர் முதல் கிருஷ்ண்சாமி வரை எல்லோரும் வருவார்கள், ஏன் இலங்கை அதிபர் கூட தெரிவிக்கலாம், இனி திருநாவுக்கரசர் கூட கண்டிக்கலாம்

ஆனால் உங்கள் பிராண்டு வசனங்கள் எங்கே?

"ஈன பிறவி", "ஈனத்தனம்", "மானங்கெட்ட பிறவி" "வந்தேறிகள் அட்டகாசம்", "தமிழன் தான் தமிழ்நாட்டு முதல்வராக வரவேணடும்","உங்க சொத்த எல்லாம் பிடுங்கி அணை கட்டுவோம்" "ஆளும் வந்தேறிகளை ஓட விட்டு அடிப்பொம்""தமிழன் சாகும் போது என்ன மயிறுக்கு பதவி" "நாங்கல்லாம் ஜெயில்ல வளந்தவங்க""ஜெயில் கட்டினதே எனக்குத்தான்"

"நான் பிரபாகரனின் தம்பி, இந்த தேசத்து வந்தேறி நாய்களை அடித்து விரட்ட கிளம்பியிருக்கும் புலி"

இதுபோன்ற அதிரடிகள் எல்லாம் எங்கே அங்கிள்?

இதனைத்தான் தமிழகம் உங்களிடம் எதிர்பார்க்கின்றது

இன்னொரு வாய்ப்பு எடுத்துகொண்டு சீறுங்கள்

ஸ்டார்ட்..ஆக்சன்...கம் ஆன்.
..
..
..
..
..

வெறும் காத்துதான் அங்கிள் வருது.




 

சீமான் நடத்திய ஆர்பாட்டத்தில் ஒருவர் தீக்குளிப்பு

இம்மாதிரியான ஆட்களை ஏன் காப்பாற்றினார்கள் என்றே தெரியவில்லை, இப்படி ஈழ விவகாரத்தில் உசுப்பேறி பலர் செத்தார்கள் என்ன நடந்துவிட்டது, ஒரு மண்ணும் இல்லை

இதோ காவேரிக்காக ஒருவர் தீக்குளித்திருக்கின்றார், கன்னடத்தில் அப்படி எத்தனை தமிழர்கொல்லபட்டார்கள் என இவர் மனம்நொந்து சாக துணிந்தார்?


அது என்னவோ தெரியவில்லை, வை.கோ சீமான் போன்றோரின் பின்னால் செல்லும் கூட்டம் இப்படி ஒரு மனநிலை சரியில்லாத கும்பலாகவே இருக்கின்றது, தலைவர்கள் போலவே தொண்டர்கள்.

வோட்டுபோடுவது இன்னொருக்கு, சாவது பொதுபிரச்சினைக்கு எப்படிபட்ட சமூகம் இது.

எப்படியோ, இதற்குதானே ஆசைபட்டாய் அங்கிள் சைமன்

தொண்டர்களே நிச்சயம் இன்னும் நீங்கள் தீகுளிப்பீர்கள், இனி தீ குளிக்கும்போது உங்கள் தலைவர்களோடு சேர்ந்து தீகுளியுங்கள், அதுவே தமிழினம் அமைதியாக வாழ நீங்கள் செய்யும் தொண்டு

அது அர்த்தமுள்ள சாவு, அது தியாகம்





போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் கைது

அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் , நாங்கள் அங்கிள் சைமனை உங்களிடம் கொடுத்து விடுகின்றோம், இலவசமாக இன்னும் சில இம்சைகளை தருகின்றோம்

இரு மாநிலமும் நிம்மதியாக இருக்கட்டும்.



Image may contain: 2 people , people smiling , text


காவேரி உரிமை மீட்பு பேரணி நடத்தபோகின்றாராம் அங்கிள் சைமன், எங்கே?


சென்னையில்..


அரசியலுக்கு தஞ்சை கோயில், மாநாட்டுக்கு திருச்சி, சிங்கள எதிர்ப்பிற்கு ராமேஸ்வரம் என சுற்றும் அங்கிள் காவேரியினை சென்னையிலே மீட்பாராம்.


கல்லணை பக்கம் ஒக்கனேக்கல் பக்கம் எல்லாம் செல்லும் திட்டமில்லை.





சரி போராட்டத்தில் ஏன் பிரபாகரன் படம்? அவருக்கும் காவேரிக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை.

ஆனால் அணைகட்டுக்கும் பிரபாகரனுக்கும் சம்பந்தமுண்டு.

யாரையாவது கொல்வது, வசூல் செய்வது என அட்டாகாச வாழ்க்கை வாழ்ந்த பிரபாகரனுக்கு சிக்கல் மாவிலாறு எனும் ஆற்றில் வந்தது.

அது சிங்கள விவசாயிகள் உள்ள பகுதி, அணையினை மூடி சிங்களுருக்கு நீர் இல்லை என்றனர் புலிகள்.

வெகுண்ட ராஜபக்சே அடித்து பார்த்தார், புலிகள் ஓடினர். அட ஓடுகின்றார்களே என விரட்டினார் அவர்.

மூன்று ஆண்டுகள் விரட்டி நந்திகடலில் புலிகளை சோலி முடித்தார் ராஜபக்சே.

பிரபாகரனின் அழிவு அந்த மாவிலாறு அணையினை மூடி சிங்களருக்கு நீர் இல்லை என்றபொழுதுதான் தொடங்கிற்று

ஆக சிங்களனுக்கு நீர் இல்லை என அணையினை பூட்டி சண்டையிட்டு செத்தவன் படத்தினை ஏந்திதான் தமிழருக்கு நீர் கொடு என கன்னடனுக்கு எதிராக போராடுகின்றாராம்.

எப்படி பார்த்தீர்களா? இதுதான் அங்கிள் சைமன் காமெடி.

வெரி பன்னி அங்கிள், ஆல்வேய்ஸ் நாட்டி.







No comments:

Post a Comment